Daily Archive: May 9, 2020

சீட்டு [சிறுகதை]

“அவன் விட்டாத்தானே?” என்று அழகப்பன் சொன்னான். “அவன் பேசிட்டிருக்கிறதை கேட்டேன். ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கிற மாதிரி தெரிஞ்சுது.” “ஏன்?” என்று உமையாள் கேட்டாள். அவள் மூக்கைச் சுளித்தபடி அதைக் கேட்டபோது கண்களில் வந்த மங்கல் அவனுக்கு ஒவ்வாமையை உருவாக்கியது. அப்படி அவளை பார்க்கையில் அவன் பார்வையை விலக்கிக்கொள்வது வழக்கம். “வீட்டுவேலை நடக்குதுல்ல? லிண்டில் வரை வந்தாச்சு… கட்டிமுடிச்சு ஏ. ஓ போயி பார்த்து செர்டிஃபை பண்ணினாத்தான் அடுத்த இன்ஸ்டால்மென்ட் லோன் கிடைக்கும். அதுக்கு ஒருமாசம் ஆயிடும். அதுவரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131253/

மூன்று வருகைகள்- கடிதங்கள்

மூன்று வருகைகள். அன்பு ஜெ, நலமா? இன்று தங்களின் மூன்று வருகைகள் வாசித்தவுடன், தேவதேவன் அவர்களின் கவிதை ஒன்று நினைவிற்கு வந்தது அது, ஒரு சிறு குருவி என் வீட்டுக்குள் வந்து தன் கூட்டைக் கட்டியது ஏன்? அங்கிருந்தும் விருட்டெனப் பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு? பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது மரத்திற்கு மரக்கிளையினை நீச்சல்குளத்தின் துள்ளுப்பலகையாக மிதித்து அங்கிருந்தும் தவ்விப்பாய்கிறது மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி சுரேலென தொட்டது அக்கடலை என்னை ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131243/

நஞ்சு, காக்காய்ப்பொன் -கடிதங்கள்

நஞ்சு [சிறுகதை] அன்புள்ள ஜெ இந்தக்கதைகளின் விதவிதமான கருக்கள், களங்கள் மட்டுமல்ல மட்டுமல்ல வாழ்க்கைப்பார்வைகளும் மாறிக்கொண்டே இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. உங்களுக்கென வாழ்க்கைப்பார்வை ஏதுமில்லையா என்ற கேள்வி எழுகிறது. வாழ்க்கைப்பார்வை என்ற ஒன்றில் கட்டுண்டது அல்ல எழுத்தாளனின் எழுத்து. அது அந்தந்த தருணங்களில் இயல்பாக வெளிப்படுவது என்று நீங்கள் ஏற்கனவே அதற்கு விளக்கமும் அளித்திருக்கிறீர்கள். நற்றுணை போன்ற ஒரு கதையை வாசித்தவருக்கு நஞ்சு கதை அதிர்ச்சியையேதரும். அது மானுட மனதிலே உள்ள அழியாத நஞ்சைப் பற்றிச் சொல்வது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131241/

இறைவன், துளி- கடிதங்கள்

துளி [சிறுகதை] அன்புள்ள ஜெ, திருவரம்புக் கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். துளி அதில் ஓர் உச்சம். மிகமிக எளிமையான சொற்களில் ஒரு கொண்டாடமான சூழலைச் சொல்லிக்கொண்டே செல்கிறீர்கள். மனிதர்கள், விலங்குகள். அனைத்தையும் பிணைத்திருக்கும் எளிமையான அன்பு. இந்த எளிமையான அன்பை பார்க்கையில் ஒன்று தெரிந்தது. இது ஒருவகை விலங்குத்தனமான அன்பு. ஆகவே விலங்குகளில் இன்னும் கூர்மையாக அது வெளிப்படுகிறது. கருப்பன் அந்த அன்பின் ஓர் உச்சம். மனிதர்கள் எளிமையாக விலங்குபோல இருக்கையில் கொஞ்சம் முழுமையாக வெளிப்படுகிறது. செரிபெரல் ஆக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131245/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–56

பகுதி ஐந்து : எரிசொல் – 2 அவந்தியில் இருந்து துவாரகைக்கு வரவேண்டியிருந்த வணிகக்குழுவினர் எதிர்க்காற்றில் புழுதி இருந்தமையால் சற்று பிந்தினர். ஆகவே அவர்களுக்கு முன்னரே எழுந்து நடந்து நகருக்கு வந்த விஸ்வாமித்ரர் கோட்டைமுகப்பில் காத்திருந்த காவல்வீரர்களால் எதிர்கொள்ளப்பட்டார். வண்டி நிறைய பொருட்களுடன், மடி நிறைய பொன்னுடன், திருமகள் வடிவென வரும் வணிகர்களை எதிர்பார்த்திருந்த காவலர்கள் அவள் தமக்கையின் வடிவென அழுக்கு உடையும் சடைமுடித் தலையுமாக வந்த விஸ்வாமித்ரரை கண்டதும் சீற்றம் கொண்டனர். முதலில் எவரோ தங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131250/