Daily Archive: May 7, 2020

நஞ்சு [சிறுகதை]

நேரில் சந்தித்தால் அக்கணமே கையில் கிடைத்த பொருளால் அடித்து அங்கேயே கொன்றுவிடவேண்டும் என்று நினைத்திருக்கும் ஒரு பெண். அவளை ஓடும் பஸ்ஸில் இருந்து எதிரே செல்லும் பஸ்ஸில் பார்த்தேன். ஊட்டி சென்றுகொண்டிருந்தேன். இறங்கிய பஸ் ஒன்று வளைந்து ஒதுங்கி என் பஸ்ஸுக்கு இடம் கொடுத்தது. அந்த பஸ் என்னை கடந்துசென்றபோது ஒரு கணம் மிக அருகே அவள் வந்து அப்பால் சென்றாள். என் மனம் படபடத்தது. செத்தவன்போல கைதளர்ந்து அப்படியே அமர்ந்துவிட்டேன். பஸ் மேலேறிச் சென்றது. என்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130936/

கடிதங்கள்,பதில்கள்

வணக்கம் சார், அறம் சிறுகதை தொகுப்பு படித்து முடித்து இன்னமுமே என்னால் மீளவே முடியவில்லை. அதன் கனம் அப்படியே இருக்கிறது. அதில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் இல்லையா உண்மை மனிதர்களின் கதை என்று அதுதான் இன்னும் கனத்தை தந்தது. சோற்றுக்கணக்கில் நீங்கள் சம்பவங்களை அப்படியே அடுக்கிக்கொண்டே செல்கிறீர்கள் எனக்கு ஆத்திரம் அடைத்து கொண்டு வந்தது. அப்படியே நீங்கள்  உங்களது குரலில் என் முன்னாலமர்ந்து சொல்லுகிறீர்கள் நான் கேட்டவாறு இருக்கிறேன் என்று எடுத்துக்கொண்டேன். பின்பு ஓலைச்சிலுவை நீங்கள் சொற்களை பிரவாகமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131172/

இறைவன் ,வனவாசம்- கடிதங்கள்

இறைவன் [சிறுகதை] அன்புள்ள ஜெ,   இறைவன் கதை அதன் எளிமையாலேயே நினைவில் என்றென்றும் நின்றிருக்கும் என நினைக்கிறேன். தமிழில் அதற்கிணையான இன்னொரு கதையை உடனே சுட்டிக்காட்டமுடியவில்லை. வரையப்போவதற்கு முன் அவனுடைய இறுக்கம். அந்த வீட்டில் அவன் டீ பற்றி ஒரே கேள்வியால் நெருக்கமாக இயல்பாக ஆவது. வரைய ஆரம்பித்தபின் சன்னதம் வந்து இன்னொருவராக ஆகிவிடுவது. வரைந்த பின் அவனிடம் வந்து மூடும் மூதேவி. ஒவ்வொன்றும் மகத்தான சித்திரமாக உள்ளது அந்த பாமரக்கிழவியின் பார்வையில் அந்த மகா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131015/

நற்றுணை, காக்காய்ப்பொன் – கடிதங்கள்

நற்றுணை [சிறுகதை] அன்புள்ள ஆசிரியருக்கு, “இறைவன்” — நீண்ட நாட்களுக்குப் பிறகு தனிமையில் விம்மச் செய்த கதை. மாணிக்கம் ஆசாரி சாக்குப்பையுடன் நுழைந்த போதே உள்ளுக்குள் ஏதோ விழித்துக் கொண்டது… ஒருவேளை இசக்கியம்மையை நடிக்கத் தொடங்கியிருந்தேன் எனலாம். தெற்குப்புரையின் திறந்த  பாதிக்கதவு வழி சிவந்த தூணாகிறது…மெல்லிய படிமமென தேவி எழுந்து விடுகிறாள் அங்கேயே…!! இசக்கியம்மை இழந்த வாழ்வு, அவளிழந்த பகவதி, அதனாலொரு குற்றவுணர்வு ஆழ்மனதில் நிறைக்க ஆசாரியைச் சுற்றி சுற்றி வருகிறாள்…!!  அறைக்குள் யாரோ இருக்கும் உணர்வினை அடைவது அவள்மட்டுமல்ல….!! வாயே திறக்காத கெத்தேல் சாகிப்பின் நினைவெழுகிறது…மாணிக்கத்தை எண்ணுகையில்….அன்னமும் ஒருவகை படைப்புதானே …படைப்புக்கிறைவர்கள் எழுந்தவண்ணமிருக்கின்றனர் தங்களில்…!! பிறந்த தொன்னூறு நாட்களில் என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131180/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–54

பகுதி நான்கு : அலைமீள்கை – 37 தந்தையே, நீங்கள் என்னை காத்தருள வேண்டும் என்று கோர எனக்கென்ன உரிமை என்று இத்தருணத்தில் எண்ணிக்கொள்கிறேன். பழி சூழ்ந்தவன். இன்னும் அந்தக் கீழ்மைகளிலிருந்து உளம் விலகாதவன். எனினும் எளியோன், இறையருளால் மட்டுமேதான் காக்கப்படவேண்டும் என்று எண்ணுபவன். என்னைப்போல் ஒருவனுக்கு தெய்வங்கள் இறங்கிவந்தாக வேண்டும். கடையனுக்கும் கடையனுக்குக் கூட கையேந்தி பெறமுடியும் என்ற இடத்திலேயே தெய்வங்கள் இருக்கவேண்டும். பழி சூழ்ந்தவனுக்கு இறங்கி வருகையிலேயே தெய்வங்கள் தம் பெருமையை மண்ணில் நிலைநாட்டிக்கொள்கின்றன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131135/