Daily Archive: May 5, 2020

மூன்று வருகைகள்.

சென்ற சிலநாட்களாகவே என் படுக்கையறைக்குள் கருவேப்பிலை மணம். கோடை தொடங்கியதுமே எல்லா சன்னல்களையும் திறந்துவிட்டு கொசுவலை கட்டிக்கொண்டு படுக்கத் தொடங்கினேன். இங்கே உண்மையில் மெய்யான கோடைகாலம் தொடங்கவேயில்லை- இன்னமும்கூட. அவ்வப்போது மழை. பின்னிரவில் நல்ல குளிர். ஆகவே மெய்யான காற்றில் உறங்க விரும்பினேன். காலை எழுந்தால் என் கொசுவலைமேல் கருவேப்பிலைகள். யார் செய்வது? இலக்கியவாதி சமூகத்திற்கு வெறும் கறிவேப்பிலை மட்டுமே என உணர்த்த விரும்புவது யார்? அடைக்கலங்குருவிகள்! காலையில் அவை என் தலைக்குமேல் குடும்பச்சண்டை போட்டன. காற்றில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131073/

காக்காய்ப்பொன் [சிறுகதை]

“இதெல்லாம் இப்படி சுருக்கமாகச் சொல்லிவிடக் கூடியவை அல்ல, தவமும் மீட்பும் எப்போதுமே வெவ்வேறு கோணங்களில் பேசப்படுபவை. எல்லா பேச்சுக்களும் ஏதோ ஒன்றை தொடுபவை, ஏதோ சிலவற்றை விட்டுவிடுபவை” என்று நித்யா கூறினார். விவேக சூடாமணி வகுப்பு நடந்துகொண்டிருந்தது. இருண்ட, குளிர்ந்த மாலைநேரம். வெளியே காற்று யூகலிப்டஸ் மரங்களை ஓலமிடச் செய்துகொண்டிருந்தது. சன்னல்கள் அதிர்ந்துகொண்டிருந்தன. குருகுலத்தின் அந்தக்கூடத்திற்கு மட்டும் ஆறு சன்னல்கள், பதினெட்டு கதவுகள். அவற்றில் ஏதோ ஒன்றில் கதவு சரியாக மூடவில்லை. அது அதிர்ந்து காற்றை உள்ளே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130919/

வனவாசம், லூப்- கடிதங்கள்

வனவாசம் [சிறுகதை] அன்புள்ள ஜெ வனவாசம் கதையை மீண்டும் சென்று படித்தேன். என் சின்னவயசில் கிராமத்தில் தெருக்கூத்து பார்த்த நினைவுகள் எழுந்து வந்தன. தெருக்கூத்து என்பது அந்த கிராமியச் சூழலுக்குத்தான் பொருந்துகிறது. சென்னையில் ஒரு அரங்கிலே அதைப்பார்த்தால் அது கூத்து மாதிரியே இல்லை. அந்த சின்னக்கிராமம், அங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்கள், அவர்களின் மனநிலைகள் எல்லாம் சேர்ந்துதான் அந்தக் கூத்து. அது கூத்தே இல்லை. கூத்தின் ஒரு சின்ன பகுதி. ஒரு மீம் மாதிரித்தான் சொல்லவேண்டும். அதில் நிகழும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131019/

ஐந்துநெருப்பு, கரவு- கடிதங்கள்

ஐந்து நெருப்பு[ சிறுகதை] அன்புள்ள ஜெ உங்கள் வழக்கமான நிலத்தில் இருந்து விலகி எங்கள் செங்காட்டுக்கு வந்திருக்கிறீர்கள். என் அப்பா சொல்வார். அங்கே தீயும் கரியும் மட்டும்தான் நிறம் என்று. பனைமரம் கரி. மண் தீ. எரியும் மண். இப்போது கோடையில் கருக்குவேல் அய்யனார் கோயிலுக்கு போவோம். அப்படியே எரியும். அரைமணிநேரம் நிற்கமுடியாது. ஆனால் அங்கே மனிதர்கள் வாழ்கிறார்கள். முள்ளுக்கு வேலிபோட்டிருப்பதை கண்டு நானும் இதேபோல ஆச்சரியப்பட்டிருக்கிறேன் ஐந்துபக்கமும் தீ. பஞ்சாக்கினி. அதில்தான் தாட்சாயணி தபஸ் செய்தாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131087/

இறைவன், பிடி- கடிதங்கள்

பிடி [சிறுகதை] அன்புள்ள ஜெ பிடி கதையை ஒரு பெரிய மனநெகிழ்வுடன்தான் வாசித்தேன். என் வாழ்க்கையில் ஒரு அபூர்வமான ஞாபகம் நான் லா.ச.ரா அவர்களைச் சந்தித்தது. நான் அப்போது அவருடைய கதைகளை மிகவும் விரும்பிப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு சந்தேகம் கேட்டு அவருக்கு எழுதியிருந்தேன். சாதாரணமான சந்தேகம்தான். அவர் எனக்குப் பதில் சொன்னார். ஆனால் நீண்டநாட்களுக்கு பிறகு அவரை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். என் கையைப்பிடித்துக்கொண்டு மீண்டும் விளக்கமாகச் சொன்னார். அவர் அவருடைய அந்த உயரத்தில் இருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131013/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–52

பகுதி நான்கு : அலைமீள்கை – 35 பீதர் நாட்டு மரக்கலம் மிகப் பெரியது. அது தன் கூர்முகப்பை துவாரகையின் துறைமேடையில் சென்று அறையும் பொருட்டு விசைகொண்டு எழுந்து சென்றது. மாபெரும் புரவி ஒன்று தாவித்தாவி ஓட அதன் முதுகின்மேல் சிற்றெறும்புபோல நின்றிருப்பதாக உணர்ந்தேன். என்ன நிகழ்கிறது என்பதை முன்னரே உணர்ந்து நான் என் காலணிகளையும் கவச உடைகளையும் கழற்றி வீசிவிட்டு மரக்கலத்தின் பின்புறம் நோக்கி ஓடினேன். காற்றால் தூக்கப்பட்டு முழு விசை கொண்டிருந்த கலம் சற்றே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131089/