Daily Archive: May 4, 2020

லீலை [சிறுகதை]

“ஏதோ நல்ல வீட்டிலே குட்டியாக்கும், அதுக்க பேரைப்பாத்தாலே தெரியுமே? தாட்சாயணின்னு சொல்லும்பளே ஒரு இது இருக்கே” என்று சுப்பையாச் செட்டியார் சொன்னார். “ஆமா, அது பின்ன அந்தக்குட்டிய கண்டாலே தெரியாதா? அதுக்க முகத்தில உள்ள தேஜஸு என்ன, சிரிப்பு என்ன?” என்றார் மாணிக்கநாடார். “இங்க வந்து இப்பிடிச் சிக்கி சீரளியுது… ஏதுநேரத்திலே இவன் கூட இப்பிடி எறங்கி வரணும்னு தோணிச்சோ” என்று அருணாச்சலம் சொன்னார். ”அது எப்டிவே, இந்தமாதிரி குட்டிக இவனுகள மாதிரி ஆளுககூட எறங்கி வந்திருதாளுக?”என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130824/

நற்றுணை -கடிதங்கள்

நற்றுணை [சிறுகதை] அன்புள்ள ஜெ பல்வேறு நுட்பமான குறிப்புக்களால் ஆன நற்றுணையை முழுமையாகவே வாசித்துவிடவேண்டும் என்று முயன்றேன். எல்லாச் செய்திகளையும் ஆராய்ந்து தேர்வுசெய்தேன். செய்திகளை தொகுக்கத் தொகுக்க கதை விரிந்துகொண்டே சென்றது. பண்பாட்டுச்செய்திகளை அடுக்கி அடுக்கி பெரிய கட்டமைப்பாக நாவலை உருவாக்குவது என்பது இன்று இலத்தீன் அமெரிக்காவில் உள்ள நவீன எழுத்தின் வழி. ராபர்ட்டோ பொலானோ போன்றவர்களின் எழுத்துமுறை. இதிலுள்ள செய்திகளின் அடர்த்தியும் சகஜமாக அவை புனைவால் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதும் ஆச்சரியத்தை அளித்தது மேரி புன்னன் லூக்கோஸ் ஓமன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131048/

பிடி, மாயப்பொன் – கடிதங்கள்

மாயப்பொன் [சிறுகதை] அன்புள்ள ஜெ, நலம்தானே? மாயப்பொன் கதையின் தலைப்பே ஒரு மலைப்பை உருவாக்கியது. மாயமான் என்று கேட்டிருக்கிறோம். கானல்நீர் என்று கேட்டிருக்கிறோம். இரண்டையும் கலந்ததுபோல. ஒரு கவிதைபோல அமைந்திருக்கிறது அந்தக் கதை. கதைக்குரிய சித்தரிப்பும் நுட்பமான செய்திகளும் கதாபாத்திரங்களும் இருந்தாலும் அது ஒரு நீளமான கவிதைதான். மாயப்பொன் என்ன? பொன்னிறமாக சொட்டுவதுதான். அது தியானம். தியான அனுபவம் உள்ளவர்களுக்கு தெரியும். நாம் தேடினால் சிக்காது. கவனித்தால் மறைந்துவிடும்.நினைக்காதபோது வந்து நம் அருகே அமர்ந்து நம்மை ஆட்கொண்டுவிடும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130932/

ஆழி,முதல் ஆறு- கடிதங்கள்

ஆழி [சிறுகதை] அன்புள்ள ஜெ ஆழி சிறுகதையை வாசிக்கையில் அந்தக் கடல்கொந்தளிப்புதான் ஞாபகத்திற்கு வந்தபடியே இருக்கிறது. வாசித்தபோது அந்தக்கதை ஒரு சின்ன அதிர்வையே உருவாக்கியது. ஆனால் நாள்செல்லச்செல்ல வளர்ந்துகொண்டே இருக்கிறது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் ஒரு அலைக்கொந்தளிப்பின் காலம் வரும். அந்த காலகட்டத்தின் உருவகமாகவே அந்தக் கதை இருக்கிறது. வாழ்க்கையில் ஒரு அலைக்கொந்தளிப்புக் காலகட்டத்தைச் சந்தித்தவர்களுக்கு அந்த இடம் ஹான்டிங் ஆக இருக்கும். எனக்கு அப்படி ஒரு காலகட்டம் வந்திருக்கிறது. எல்லா அலைகளும் அறைந்து அறைந்து விலக்கும். நாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130978/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–51

பகுதி நான்கு : அலைமீள்கை – 34 நான் செல்லும் வழி முழுக்க கணிகரைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். அவர் வந்த முதல் நாள் என்னிடம் அவர் வந்தது இந்நகரை அழிக்கும்பொருட்டே என்று கூறியது துணுக்குறும்படி நினைவுக்கு வந்தது. அவ்வாறு எண்ணும்போது ஒன்று தெரிந்தது, அவர் தனது எந்தச் செயலையும் ஒளித்ததில்லை. தான் செய்யப்போவது அனைத்தையும் பலமுறை கூறவும் செய்கிறார். ஆனால் எவ்வண்ணமோ அது நம்மில் பதிவதில்லை. நம்மிடம் இருக்கும் ஆணவம் கேடயம்போல் அதை தடுத்து வெளியே தள்ளிவிடுகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131046/