Daily Archive: May 3, 2020

ஐந்து நெருப்பு[ சிறுகதை]

முத்து மிகத்தொலைவில் சைக்கிள் மணியோசையைக் கேட்டான். செங்காட்டில் பெரும்பாலும் எல்லாருமே சைக்கிளில்தான் நடமாடிக்கொண்டிருந்தார்கள் என்றாலும் அந்த ஓசையை அவனால் தனியாகவே உணரமுடிந்தது, அது போஸ்ட்மேன் ஞானப்பனின் சைக்கிள் மணி. அவன் கவைக்கோலை தோளில் சாய்த்து அவர் வருவதை எட்டிப்பார்த்தான். காய்ந்த உடைமுட்களை குவியலாகப் போட்டு அமைக்கப்பட்டிருந்த வேலிக்கு நடுவே செம்மண் புழுதி குமுறிக்கிடந்த பாதையில் மிகமெல்ல ஞானப்பன் வந்துகொண்டிருந்தார். அந்தப்பாதையில் சைக்கிள் எத்தனை மிதித்தாலும் முன்னகராது. சண்டி எருமைபோல அடம்பிடித்துத்தான் முன்னகரும் ஞானப்பன் அவனை நோக்கித்தான் வந்தார். அவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130811/

நற்றுணை- கடிதங்கள்

நற்றுணை [சிறுகதை] அன்புள்ள ஜெ, நற்றுணை கதை பற்றிய பல விமர்சனங்கள் எழுந்தன. ஆண்களில் கேசினி உண்டா என்பது வரை. என் புரிதலில் இதை சொல்லிப்பார்க்கிறேன்.  ஒருவகையில் இது வரலாறும்கூட. ஆதியில் குலத்தொழில் முறை இருந்த போது  அதுவே ஒருவனுடைய வாழ்நாள் அறிதலும் அதிலிருந்தே மெய்மையும் அன்றாட வாழ்க்கையும் அடையப்படுவதாக நம் மரபில் இருந்திருக்க கூடும். தன்னுடைய குலத்தொழிலுக்கு அப்பாற்பட்ட ஒன்றை ஒருவன் அடையவேண்டுமெனில்  அவன் கடக்க வேண்டிய துயர்கள் எத்தனை இருந்திருக்கும்.  அவனுக்கு உறவிலிருந்தும் ஆசிரியனிலிருந்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131037/

பிடி,மாயப்பொன் – கடிதங்கள்

பிடி [சிறுகதை] அன்புள்ள ஜெ பிடி கதை குருவி, இறைவன் போன்று கலைஞர்களின் வரிசையில் வரும் ஒன்று. இங்கே அனுமன் பக்தனுக்காக இறங்கி வருகிறான். நான் ஒன்று பார்த்திருக்கிறேன். உடல்வலிமை குறைவானவர்களுக்கு பயில்வான்கள்மேல் அப்படி ஒரு மோகம் இருந்துகொண்டிருக்கும். அவர்கள் அனுமனை வழிபடவேண்டும் என்று சொல்லுவார்கள் [ பயம் உள்ளவர்கள் நரசிம்மரை வழிபடவேண்டும் என்பார்கள்] அந்த பலவீனமான கிழவருக்காக இரங்கி வருகிறார். இயல்பாக என்ன பாட்டு வேணும் சொல்லுங்கோ என்கிறார். இந்தக்கதையை உயிர்ப்புள்ளதாக ஆக்குவது அந்த சரியான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130995/

மலைகளின் உரையாடல் , இறைவன் கடிதங்கள்

மலைகளின் உரையாடல் [சிறுகதை] அன்புள்ள ஜெ மலைகளின் உரையாடல் கதையில் வரும் சில குறிப்புக்களை தேடிச்சென்று பார்த்தேன். உபநிடதத்தில் வரும் த தத்த தய தம ஆகிய சொற்களைப்பற்றிய குறிப்புகளை டி.எஸ்.எலியட் அவருடைய வேஸ்ட்லேன்ட் என்னும் கவிதையிலே குறிப்பிட்டிருக்கிறார். வேதங்களில் உள்ள சொல் அது, அதற்கு உபநிடதத்தில் விளக்கம்தான் அளிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் இடியோசையின் குரல். வானிலிருந்து வேதம் இறங்குவது அப்படித்தான். அந்த குருவிக்கூட்டுக்குள் குருவிக்கான வேதம் குருவிக்கான மொழியில் இறங்கிக்கொண்டிருக்கிறது. அதை அந்தக் கருவி அடையாளம் கான்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130983/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–50

பகுதி நான்கு : அலைமீள்கை – 33 தாளவொண்ணா உளத்தளர்வு எடையென்றே உடலால் உணரப்படுகிறது. அதை சுமக்க முடியாமல் இடைநாழியிலேயே நின்றேன். மறுபடி என்ன நிகழப்போகிறது? ஏதோ ஒன்று நிகழவிருக்கிறது. பேருருக்கொண்டு அது எழுந்து வருகிறது. அதை அஞ்சி வேறேதோ செய்துகொண்டிருக்கிறேன். அதை தடுப்பதற்கான சிறுசிறு முயற்சிகள். உருண்டுவரும் ஒரு பெரும்பாறைக்குக் கீழே சிறுசிறு பாறைகளை எடுத்துக்கொடுப்பதுபோல. அதனால் அதை தடுக்க இயலாது. அதன் எடையே அதன் ஆற்றல். அதன் ஊழ் முன்னரே வகுக்கப்பட்டுவிட்டது. அது மிக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131007/