Daily Archive: May 2, 2020

கரவு [சிறுகதை]

“தேன்சிட்டு போலே தேடிவந்து களவெடுப்பான்! பூவிட்டு பூ தொடுவான்! வான்விட்டு வந்த மகன் வயணமெல்லாம் சொல்வேனோ!” என்று கணீர்க்குரல் ஒலித்தது. “ஆ! வான்விட்டு வந்த மகன் வயணமெல்லாம் சொல்வேனோ!” என்றார் பின்பாட்டுக்காரர். தங்கன் ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டான். “அண்ணே இப்டி ஒளிச்சிருக்கிறப்ப பீடி பிடிக்கலாமா?” என்று செல்லன் கேட்டான். “நீ பிடிக்கப்பிடாது” என்று தங்கன் சொன்னான். “செரீண்ணே” என்றான் செல்லன். தங்கன் பீடியை இழுத்துக் கொண்டிருந்தான். தொலைவில் மாயாண்டிசாமி கோயிலின் வெளிச்சம் சிவப்பாக கரிய வானில் கசிந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130792/

பிடி, கைமுக்கு -கடிதங்கள்

கைமுக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ, கைமுக்கு படிக்கும் வரை ஔசேப்பச்சன் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் கைமுக்கு படிக்கும்போது அப்படி அல்ல என்று தோன்றியது. ஒரு போலீஸ்காரர் சொல்லக்கூடிய நுட்பங்கள் கதையில் நிறைந்திருக்கின்றன. நான் காவல்துறையிலே வேலைபார்த்தவன். கதையில் வருபவை சில எனக்கே தெரிந்தவை. சில விஷங்கள் ஆமாம், அப்டித்தானே என்று எனக்கே ஆச்சரியம் அளித்தவை பொதுவாக கேஸ்விசாரணையிலே ஒரு விஷயம் உண்டு. ஒரு கேஸ் மேல் ஏன் அப்படி ஒரு ஆர்வம் வருகிறது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130926/

கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ இந்தக்கதைகளின் தொடர்ச்சி, இதிலுள்ள முடிவில்லாத வகைபேதங்கள் மிகப்பெரிய திகைப்பை ஏற்படுத்துகின்றன. எழுத்துக்களில் பலவகை. புதுமைப்பித்தன் எல்லாவகையிலும் எழுதியிருக்கிறார். அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்றவர்கள் அதேபோல பலவகையான கதைகளை எழுதியிருக்கிறார்கள். குபரா போன்றவர்கள் ஒரே பாணியில் எழுதியிருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் அடிப்படையில் ஒருசில ஆழமான கேள்விகளால் ஆனவன். கதைகள் எந்த வகையில் எழுதினாலும் அவை ஒன்றிலேயே குவிகின்றன. ஒரே கேள்விக்கு பதில்களை வேறு வேறு கோணங்களில் தேடுகின்றன. சிலபதில்களை கண்டடைகின்றன இந்தக்கதைகளை வாசிக்கையில் உங்கள் கேள்விகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131002/

பாப்பாவின் சொந்த யானை, உலகெலாம் -கடிதங்கள்

உலகெலாம் [சிறுகதை] அன்புள்ள ஜெ, உலகெல்லாம் எனக்கு மிகவும் தனிப்பட்ட கதை. நான் 2013ல் மருத்துவமனையில் படுத்திருந்தேன். எனக்கு அருகே ஈஸிஜி ஓடிக்கொண்டிருக்கும். அதில் என் இதயத்தை நான் பார்த்துக்கொண்டிருப்பேன். அந்த காட்சி என்னை மயக்கி வைத்திருந்தது. எனக்கு பலவகையான கற்பனைகள் வந்தன. என்னை ஒரு ஓடையாக நினைத்துக்கொண்டிருந்தேன். அதில் அலையலையாக போய்க்கொண்டே இருப்பேன். என் உயிரை ஓடையாக நினைத்தேன். என் உடல் அதில் ஒரு படித்துறைபோல. நான் கொஞ்சம் பயப்பட்டால் அதில் அலைகள் எழுவதை கண்டேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130925/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–49

பகுதி நான்கு : அலைமீள்கை – 32 நான் தயங்கிய காலடிகளுடன் சுஃபானுவின் அறை நோக்கி சென்றேன். செல்லச்செல்ல நடைவிரைவு கொண்டேன். அறைக்கு வெளியே காவலர்கள் எவருமில்லை. உள்ளே யாதவ மைந்தர்கள் பலர் இருந்தனர். அவர்கள் ஒருவரோடொருவர் பதற்றத்துடன் கூச்சலிட்டு பேசிக்கொண்டிருந்தனர். உள்ளிருந்து படைத்தலைவன் ஒருவன் கூச்சலிட்டுப் பேசியபடி வெளியே ஓடினான். இன்னொருவன் கையில் ஓர் ஓலையுடன் உள்ளே சென்றான். நான் அறைக்குள் நுழைந்தேன். அங்கே நக்னஜித்தி அன்னையின் மைந்தர்களான வீரா, சந்திரா, அஸ்வசேனன் ஆகியோருடன் அன்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131005/