Daily Archive: May 1, 2020

அறைக்கல் ஜோய் – ஒரு மர்மகதை

சில விஷயங்கள் விந்தையானவை. புறவுலகத்திற்கு எந்த தர்க்க ஒழுங்கும் இல்லை என்பதை நாம் அறிவோம். ஆனாலும் அதற்கு காரணகாரிய உறவு ஒன்றை உருவாக்கிக் கொள்வோம். ஒன்றிலிருந்து ஒன்று என்று தொடரும் ஒரு நிகழ்வுச்சரடை. ஒன்றின் காரணமாக அதற்கு முன் இன்னொன்றை. ஆனால் இதெல்லாம் மிகச்சிறிய ஒரு அலகுக்குள்தான் சாத்தியம். ஒர் எல்லையை வகுத்துக்கொண்ட பிறகுதான் அதற்குள் உள்ள தகவல்களை நாம் சேகரிக்க முடியும். அவற்றை அடுக்கி அந்த காரணகாரிய உறவை உருவாக்கிக் கொள்ளவும் முடியும். ஒட்டுமொத்தப் பெரும்பரப்பில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130956/

நற்றுணை [சிறுகதை]

“பயமா? இல்லை நான் பயப்படவில்லை…. ஏனென்றால் நான் தனியாகப் போகவில்லை. என் கூட கேசினியும் வந்தாள்” என்று அம்மிணி தங்கச்சி சொன்னார். “கேசினியா? அது யார்?” என்றேன். “என் தோழி… எப்போதும் என்னுடன் இருப்பாள்.” “கல்லூரிக்கு உங்களுடன் வந்தார்களா?” என்றேன். அது உண்மை தகவல் என்றால் இந்த பேட்டியையே விட்டுவிடவேண்டியதுதான். தென்திருவிதாங்கூரில் இருந்து கல்லூரிக்குப் படிக்கச் சென்ற முதல் பெண்மணி, கேரளத்தில் பட்டம்பெற்ற இரண்டாவது பெண்மணி அவர் என்ற அடிப்படையில்தான் பேட்டியே எடுக்கப்பட்டது. நான் சேகரித்த செய்திகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130785/

கைமுக்கு -கடிதங்கள்

கைமுக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ.. கைமுக்கு சிறுகதையின் ஒரு வரி வெகு நேரம் என் மனதில்ஒலித்துக் கொண்டு இருந்தது அது இந்த வரிதான் “ஒரு அழுக்கில்லாத சட்டை இருந்திருந்தால் அவரிடம் (சுந்தர மசாமி)பேசியிருப்பேன். பேசியிருந்தால் இன்னொரு திசைக்கு போயிருப்பேன்” இது மிகவும் ஆழமான வரி என்பது உணரந்தவர்களுக்குத் தெரியும்.விரக்தி அடைந்த நிலையில் , அதேநேரத்தில் வாசிப்பின் சுவை அறிந்த ஒரு புத்திசாலி இளைஞனுக்கு , அதுவும் வறுமை சார்ந்த தாழ்வுணர்ச்சியில் இருப்பவனுக்கு, ஒரு பெரிய எழுத்தாளனிடம் பேச …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130980/

முதல் ஆறு,நகைமுகன் -கடிதங்கள்

முதல் ஆறு [சிறுகதை] அன்புள்ள ஜெ இந்தச் சிறுகதைகளையும் கூடவே வரும் வாசிப்புக்களையும் பார்க்கிறேன். இந்த வாசிப்புக்கள் மிக உதவிகரமானவை. கதைகளைப் பற்றிய நம் வாசிப்புகள் தொடாத இடங்களை இவை தொடுகின்றன. நாம் அடையாத பலவிஷயங்களை காட்டுகின்றன. கதை நம் கண்முன்னால் விரிந்துகொண்டே செல்கிறது. அது ஒரு அற்புதமான அனுபவம். இவற்றில் கதைகளைப் பற்றிய பாராட்டுக்களே உள்ளன என்று ஒரு நண்பர் சொன்னார். எதிர்மறையாகவோ குறையாகவோ சொல்லப்படுபவற்றை பிரசுரிக்கவேண்டாம் என்று நினைத்திருக்கலாம் என்று நான் சொன்னேன். முதல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130933/

இறைவன், மலைகளின் உரையாடல் – கடிதங்கள்

மலைகளின் உரையாடல்[சிறுகதை] அன்புள்ள ஜெ மலைகளின் உரையாடல் கதையை வாசித்தபின் நினைவுகள் வந்துகொண்டே இருந்தன. நான் 35 ஆண்டுகளுக்கு முன் தபால்துறையில் வேலைசெய்தேன். அன்றைக்கு தந்தி இருந்தது. கட்கடா மொழி. அதை படிக்கவே இரண்டு ஆண்டு ஆகிவிடும். எனக்கு என்னவோ அந்த சத்தம் பிடிக்காமல் ஆகிவிட்டது. என் தலையிலேயே அது கேட்பதுபோல ஆகிவிடும். உடம்பே தூக்கித்தூக்கி போடும். வாந்தியெல்லாம் வரும். ஆனால் ஒருநாள் அது ஒரு கிளியின் ஓசை போல தோன்றியது. தந்தியின் சத்தம் என நினைத்தது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130965/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–48

பகுதி நான்கு : அலைமீள்கை – 31 அந்த அறையிலிருந்த உடன்பிறந்தார் அனைவரும் பதறி எழுந்துவிட்டனர். மூத்தவர் ஃபானு நிலையழிந்து கைகள் அலைபாய அங்குமிங்கும் நோக்கினார். ஃபானுமான் “மூத்தவரே, பிரத்யும்னனின் ஓலையை நினைவுறுக! நம்மால் அவர்களை எளிதில் மீறமுடியாது இப்போது” என்றான். அவரால் முடிவெடுக்க இயலவில்லை. வெளியே அலையலையாக நகரின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. “நாம் என்ன செய்வது? நம் நகர் இடிந்துகொண்டிருக்கிறது. உடனே நான் மக்கள்முன் தோன்றியாகவேண்டும். இந்நகரை ஒழுங்கு செய்தாகவேண்டும்” என்றார். “எங்களை காப்பாற்றுக, மூத்தவரே!” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130961/