Monthly Archive: May 2020

வாரஇதழ்களின் வரலாறு, மாலன்

மாலன் இணையத்தில் எழுதிய இந்தக் குறிப்பை வாசிக்க நேர்ந்தது. நான் அறுபதுகள் முதல் வார இதழ்களை வாசித்தவன். அதாவது என் ஐந்து வயது முதல். நான் குமுதம் வாசிக்க தொடங்கும்போது அதில் ராஜமுத்திரை தொடராக வந்துகொண்டிருந்தது என்பது நினைவு. அதற்கு லதா வரைந்து வெளிவந்த ஓவியங்கள், அந்தப் பக்கங்களுடனேயே நினைவில் நிற்கின்றன. ‘விகாரமுக வாலிபன்’ இந்திரபானு என்னுடைய அக்கால ஹீரோ இரண்டாயிரம் வரைக்கும்கூட நான் வார இதழ்களின் வாசகன். புரட்டிப்பார்ப்பதாவது உண்டு. ஒரு கட்டத்தில் சுஜாதா மட்டும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/132355/

உஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்

உன் மார்பின் இடது பக்கத்தைக் குறிபார்த்து யாரோ கைத்துப்பாக்கியால் சுட்டது போலவும், குண்டு நுழைந்த இடத்திலிருந்து ரத்தம் பெருகி மார்பெல்லாம் பரவுவதுபோலவும் அந்தக் காட்சி இருக்கிறது. எனது இடது கண்ணை இறுக்க மூடி வலது கையின் ஆள்காட்டி விரலை முன்னுக்கு நீட்டிக் கட்டை விரலை விறைத்து வைத்துக் கொண்டு திரையில் தெரியும் உன்னைப் பொய்யாய்ச் சுடுகிறேன். உனது கழுத்தின் ஒளி மிகுந்த பகுதியைச் சொறிந்து விட்டபடி மின்தூக்கியின் மேல் பதிக்கப்பட்டிருக்கும் சின்ன சதுரத்தில் மாறிக் கொண்டிருக்கும் எண்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/132282/

இசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்

இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார் அன்புள்ள ஜெ, இசுமியின் நறுமணம் சிறந்த சிறுகதை. அதில் அந்த மலர்தன் மையமான உவமை. அந்த மலர் பற்றிய ஓரிரு வரி கூடுதலாக இருந்திருந்தால் அந்தக்கதையின் மையம் கொஞ்சம் அழுத்தமாக வாசகர்களில் பதிந்திருக்கும் என நினைக்கிறேன் கெ.எஸ்.ராஜன் *** அன்புள்ள ஜெயமோகன், ‘இசுமியின் நறுமணம்’ சிறுகதை வாசித்தேன். ஒரு கொண்டாட்ட மனநிலையில் தொடங்கி உணர்வுபூர்வமாக முடியும் கதை. காலையில் இயந்திரத்தனமாக வேலைசெய்து, இரவில் குடியும் கொண்டாட்டமுமாக இருக்கும் ஜப்பானியர்களின் ஆழ்மன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/132276/

உதிரம்- கடிதங்கள்

உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன் அன்புள்ள ஜெ அனோஜனின் கதையான உதிரம் வாசித்தேன். எனக்கு பலவகையான சம்பந்தமில்லாத நினைவுகள் வந்தன கோர்வையாகச் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. என் வயதில் இந்தக்கதை என்னை பெரிதாகத் தொந்தரவு செய்யவில்லை. இது ஒரு ஆய்வுப்பொருள் என்றுதான் எனக்கு தோன்றியது. ஆனால் இளைஞர்களுக்கு அப்படி இல்லாமல் இருக்கக்கூடும். அவர்களின் உண்மையான சிக்கலை கூர்மையாக சொன்ன ஒரு கதையாக இருந்திருக்கலாம். அந்தவகையில் அழகான கதை என்றுகூட சொல்லுவேன்.ஆகவே இதைப்பற்றி எழுதுகிறேன் என்னுடைய கேள்வி என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/132327/

சிவம் ,அனலுக்குமேல் -கடிதங்கள்

 சிவம் [சிறுகதை] அன்புள்ள ஜெ, நலம்தானே? புனைவுக்களியாட்டில் எனக்கு பெரிய அழுத்தத்தை அளித்த கதை சிவம். எனக்கு சடங்குகளில் எந்த நம்பிக்கையும் இருந்ததில்லை. நான் சைவன் என்றாலும்கூட. என் அப்பா இறந்தபோது அம்மா காசியில் சடங்கு செய்யவேண்டும் என்று சொன்னார். நான் செய்யவில்லை. எனக்கு இஷ்டமில்லை என்று சொன்னேன். அம்மாவும் மறைந்துவிட்டார்கள் ஆனால் எட்டு வருடம் கழித்து வேறொரு விஷயமாக காசி செல்லவேண்டியிருந்தது. காசியில் கங்கை கரையில் நின்றிருந்தேன். என்னுடன் வந்தவர்கள் கீழே சடங்குகளைச் செய்துகொண்டிருந்தார்கள். நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/132028/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–78

பகுதி ஏழு : நீர்புகுதல் – 7 ருக்மியும் பலராமரும் நாற்களத்தின் இரு பக்கங்களிலும் எதிரெதிராக அமர்ந்ததுமே உண்மையில் ஆட்டம் தொடங்கிவிட்டது. அதன் பின் நிகழ்ந்த ஒவ்வொன்றும் ஆட்டத்தின் பகுதிகளே. அவர்கள் பெரிய அணிகளையும் ஆடைகளையும் களைந்து ஏவலரிடம் அளித்துவிட்டு இயல்புநிலை அடைந்தனர். நிஷதன் பலராமருக்கு வாய்மணம் சுருட்டி கொடுத்தார். அவர் அதை வாங்கி வாயிலிட்டு மென்றபடி புன்னகையுடன் ருக்மியை பார்த்தார். ருக்மி அங்கு அமர்ந்து களத்தை பார்ப்பது வரை இருந்த நம்பிக்கையையும் திளைப்பையும் இழந்து உள்ளூர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/132350/

வாசகர்களின் கேள்வியின் தரம்

அன்புள்ள ஜெமோ, தினமும் காலையின் முதல் அகவல், தங்களின் பதிவுகளை வாசிப்பதுதான். தினசரி தங்கள் வாசகர்களின் கேள்வியும் தங்களின் பதிலும் படித்துவந்துள்ளேன். பலவருடமாக பதில் எழுதும் உங்களுக்கு காலம் மாற மாற வாசகர்களின் கேள்வியின் தரம் எவ்வாறாக உள்ளது? தங்களின் அவதானிப்பை தெறிந்துகொள்ள விருப்பம். மிக்க நன்றி. பேரன்புடன் ரகுநாத் பெங்களூரு *** அன்புள்ள ரகு, கேள்விகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அதற்கு முதன்மையான தூண்டுதல் நான் மறுமொழி அளிக்கிறேன் என்பது. ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருசிலரே அதைச் செய்திருக்கின்றனர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130012/

வில்லுவண்டி[ சிறுகதை] தனா

  அங்கனத்தேவன் பட்டியில் வில்லு வண்டி வைத்திருந்தது செந்தட்டி மட்டும் தான். கோயம்புத்தூரில் இருந்து ஒரு ஆள் உயரத்திற்கு ஜாதி மாடுகளை வாங்கி வந்து அதில் கட்டியிருப்பார். இரவங்கலார் மலையில் இருந்து பிரம்புகளை வெட்டி வந்து வண்டிக்கு கூடாரம் கட்டினார். உட்காரவும் சாயவும் இலவம் பஞ்சில் மெத்தை விரிப்பு. வெள்ளிப்பூண் போட்ட சாட்டை. வில்லுவண்டி தனா

Permanent link to this article: https://www.jeyamohan.in/132279/

கவி- கடிதங்கள்

கவி [சிறுகதை] மணி எம்.கே.மணி அன்புள்ள ஜெ இந்த புதியவரிசைக் கதைகள் நன்றாக இருக்கின்றன. இந்த மனநிலைக்கு நிறையவே கதைகள் தேவையாகின்றன. எம்.கே.மணியின் கவி மெல்லிய பகடி கொண்ட கதை. அதில் அநீதியும் கீழ்மையும் வென்று நின்றிருக்கும் ஒரு காலகட்டத்தைப்பற்றிய விரைவான கோட்டுச்சித்திரம் தரப்படுகிறது. அவர்கள் ஜெயித்துக்கொண்டே போகிறார்க்ள். எதைப்பற்றியுமே கவலைப்படுவதில்லை இங்கே  ‘கண்ணதாசனைப்போன்ற’ கவிஞன் குடித்துச் சீரழிந்து சோற்றுக்கில்லாமல் அலைந்து கஷ்டப்படுகிறான். அவன் இவர்களை ‘பாடி’ வாழவேண்டும். அந்தக்கால bard எல்லாம் வீரர்களையும் சான்றோர்களையும் பாடினார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/132262/

நிழல்காகம்,ஆகாயம்- கடிதங்கள்

நிழல்காகம்[சிறுகதை] அன்புள்ள ஜெ நிழற்காகம் கதையை வாசித்தேன். அந்தக்கதையை நான் மிகமிக தனிப்பட்ட முறையிலேதான் வாசித்தேன். என் வாசிப்பு சரியாக இருக்கும என்று தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ஓர் அலுவலகத்தில் வேலைபார்த்தேன். குடும்பச்சூழ்நிலை மிகமோசம். உடம்புசரியில்லாத அம்மா, தம்பிகள். என் வேலைதான் ஆதாரம். அதை தெரிந்துகொண்டு ஒருவன் என்னை வற்புறுத்தினான். பலசிக்கல்களில் மாட்டவிட்டான். கடைசியில் நான் வளைந்துகொடுக்கவேண்டியிருந்தது. இல்லாவிட்டால் பட்டினி கிடந்திருப்பேன். ஆனால் அதைவிட உலகம் தெரியவில்லை. தைரியம் இல்லை. நான் அவனுடைய சூழ்ச்சியால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131966/

Older posts «