Daily Archive: April 28, 2020

சின்னஞ்சிறு வெளி

  நாளிரவு பொற்கொன்றை! இன்றைய மலர் வான் அலை நாற்புறமும் திறத்தல் வீடுறைவு தனிமைநாட்கள், தன்னெறிகள். கொரோனோவும் இலக்கியமும் தனிமையின் புனைவுக் களியாட்டு ஒரே இடத்தில் புறவுலகை முழுக்க உதறி அமைவது என்பது எத்தனை ஆழமானது என்று நாள்செல்லச் செல்ல புரிகிறது. ஒன்று இந்த இடமே பிரம்மாண்டமாக விரிந்துவிடுகிறது. நிலத்தளம், இரண்டு மொட்டைமாடிகள். மூன்று பரப்புகளுக்கும் மூன்று தனியியல்புகள் இருக்கின்றன. நிலத்தில் தலைக்குமேல் விரிந்த மலர்மரத்தின் கூரை. முதல்தளத்தில் சூழ்ந்திருக்கும் மரக்கிளைகள். இரண்டாம் மாடியில் வானம். நோய்க்கூறெனச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130882/

முதல் ஆறு [சிறுகதை]

அவன் முகப்பவுடரை கைக்குட்டையில் கொட்டி அதை நன்றாக மடித்து பாண்ட் பாக்கெட்டில் வைத்திருந்தான். பின்பக்கம் பாக்கெட்டில் வட்டச்சீப்பு. அவன் நின்றிருந்த இடத்தில் சாய்வெயில் விழுந்தது. முந்தையநாள் மழைபெய்திருந்தமையால் தரை நனைந்து ஆவி எழுந்தது. ஆகவே வெக்கையில் வியர்த்து ஊற்றியது. பஸ் நிற்குமிடத்தில் நிழற்குடை ஏதுமில்லை. பெரிய அரசமர நிழல்தான். ஆனால் அந்த நிழல் எதிர்ப்பக்கம் முத்துசாமி நாடார் அண்ட் சன்ஸின் மிகப்பெரிய கட்டிடத்தின்மீது நிழலால் ஆன மரம்போல விழுந்து கிடந்தது. அதில் இலைகளின் அசைவு ஆயிரக்கணக்கான கண்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130421/

கைமுக்கு, ஆழி- கடிதங்கள்

கைமுக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ, கைமுக்கு கதையை வாசிக்கும்போது இந்த கதைவரிசையில் உள்ள கலவையான தன்மையை நினைத்துக்கொண்டேன். ஒருவகை கதைகள் மிகமிக ஒருமையான வடிவில், மையம் மிக நுட்பமான உணர்த்தும்வகையில் உள்ளன. உதாரணமான கதை ‘கலைவதும் பொலிவதும்’. இன்னொரு வகையான கதைகள் திட்டமிட்டே கதையின் ஒருமையை சிதைக்கின்றன. இந்த ஔசேப்பச்சன் கதைகள் அவ்வகையானவைதான். வடிவ ஒருமையை எப்படிச் சிதைக்கின்றன என்றால் ஒன்று ஔசேப்பச்சனும் மற்றவர்களும் அடிக்கும் கமெண்டுகள் வழியாக கதைக்குள் ஊடுருவிக் கலைக்கின்றன. இன்னொன்று ஒன்றுக்குமேற்பட்ட கதைகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130868/

உலகெலாம் ,எழுகதிர் -கடிதங்கள்

எழுகதிர் [சிறுகதை] அன்புள்ள ஜெ எழுகதிர் நான் வாசித்து நாலைந்து நாட்கள் ஆகிறது. வாசித்தபோது இருந்ததைவிட இப்போது அந்தக்கதை பெரிதாகிக்கொண்டே போகிறது. அந்தக் கதையில் இரண்டு அப்செஷன்கள் உள்ளன. ஒன்று கதைசொல்பவனுக்கு ஸ்ரீகண்டன் மீது இருக்கும் அப்செஷன். இன்னொன்று ஸ்ரீகண்டனுக்கு கிழக்கு மேல் இருக்கும் அப்செஷன். முதல் வெறி என்பது உலகம் சார்ந்த ஒன்று. அதை இங்கிருந்தே நாம் அடைகிறோம். அதை இங்கேயே தீர்த்துக்கொள்ள முடியும். ஆனால் அந்த இரண்டாவது வெறி எங்கிருந்து வருகிறது என்றே தெரியாது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130869/

பத்துலட்சம் காலடிகள்,மாயப்பொன் -கடிதங்கள்

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] அன்புள்ள ஜெ ஔசேப்பச்சன் என்ற பெயரை எப்படிச் சொல்லவேண்டும்? அது கிறிஸ்தவப்பெயரா என்ன? நண்பர்கள் நடுவே ஒரு சர்ச்சை. ஆகவேதான் எழுதுகிறேன் சங்கர் *** அன்புள்ள சங்கர் அராமிக் மொழியில் ய என்பது கிரேக்க மொழியில் ஜ ஆகும். யேசு அப்படித்தான் ஜேசு ஆகி ஜீசஸ் ஆனார். யோசேப் மருவி ஜோசப் ஆனார். ஆனால் கேரளக் கடற்கரையில் கிறிஸ்தவம் அராமிக் மொழியிலிருந்தே வந்தது. ஆகவேதான் பல பெயர்கள் விந்தையாக உள்ளன. யோசேப் அச்சன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130832/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–45

பகுதி நான்கு : அலைமீள்கை – 28 பிரத்யும்னன் கிளம்புவதற்கு முன்பு சுஃபானு “நாம் இங்கே பேசி முடிவெடுப்போம், மூத்தவரே. அதன்பொருட்டே நாம் இங்கே வந்தோம்” என்றார். பிரத்யும்னன் “ஆம், ஆனால் நான் சிலவற்றை சுதேஷ்ணனிடம் பேசவேண்டியிருக்கிறது” என்றார். “அதற்கும் முன்பு நீங்கள் இருவரும் மட்டும் அத்தனியறைக்குள் செல்லுங்கள். நீங்கள் மட்டும் பேசிக்கொள்ளுங்கள்” என்றார் சுஃபானு. “உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பிறிதெவரும் நுழைய முடியாத அணுக்கம் இருக்கவேண்டும்.” பிரத்யும்னன் ஒருகணம் எண்ணியபின் “ஆம்” என்றார். “வருக, மூத்தவரே!” என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130878/