Daily Archive: April 27, 2020

பிடி [சிறுகதை]

நான் அரைக்க கொடுத்திருந்த தோசைமாவை திரும்ப வாங்கச் சென்றபோது பிள்ளையார் கோயில் முகப்பில் மேடையில் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். நீளமான மேலாடை அணிந்து அதை அடிக்கடி இழுத்து விட்டுக்கொண்டு கரகரத்த குரலில் “ஈன்றைய தீனம் ஈங்கே” என்று ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் மண்ணில் ஏழெட்டு வயசாளிகள் இரும்பு நாற்காலியில் அமர்ந்திருக்க அக்ரஹாரத்துச் சின்னப்பையன்கள் மூங்கில்களில் இருந்து மூங்கில்களுக்கு ஓடி தொட்டு விளையாடி கூச்சலிட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். “ஏல அந்தால போ” என ஒருவர் துண்டை வீசி அவர்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130500/

ஆட்டக்கதை, மதுரம் – கடிதங்கள்

மதுரம் [சிறுகதை] அன்புள்ள ஜெ மதுரம் கதையைப்போல ஓர் அனுபவம் எனக்கு உண்டு. நான் சின்னப்பையனாக ஊரில் இருந்தபோது எங்கள் நாய் குட்டிபோட்டது. மூன்று குட்டிகள். அவற்றில் ஒன்றைத்தவிர மற்றவற்றை கொடுத்துவிட்டோம். ஆனால் மிஞ்சிய அந்தக்குட்டி காலையில் செத்துக்கிடந்தது. நாய் அவ்வளவு துக்கமடையும் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்லை. நாயின் இயல்பை நான் தெரிந்திருக்கவில்லை. அழுதுகொண்டே இருந்தது. அப்போது என் அக்கா ஒரு விஷயம் செய்தாள். அப்போது எங்கள் வீட்டில் ஒரு பூனை குட்டிபோட்டிருந்தது. அந்த நாயின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130803/

மாயப்பொன் ,வனவாசம்- கடிதங்கள்

மாயப்பொன் [சிறுகதை] அன்புள்ள ஜெ மாயப்பொன் தொந்தரவு செய்த கதை. நான் இதுவரை உங்களுக்கு எழுதியதில்லை. நான் என் வாழ்க்கை முழுக்க ஒரு மாயப்பொன்னைத்தான் தேடிக் கொண்டிருந்திருக்கிறேன். அடைந்ததில்லை. என்னிடம் எல்லாருமே சொன்ன ஒன்று உண்டு, இதெல்லாம் வேலைக்காவாது. பிழைப்பைப்பாரு. மாயப்பொன் தேடுபவர்கள் எவரானாலும் அதைத்தான் சொல்வார்கள். அதைத்தான் சாதிச்சிட்டியே, உன்னால இவ்ளவு முடியுமே, அப்றம் என்ன? நீ பெரிய இவன்னு நினைச்சுக்கறே. நீ ஒண்ணும் பெரிய சரித்திரபுருஷன் கெடையாது. கையிலே இருக்கிறத விட்டுட்டு அலையாதே. இப்படியே. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130833/

கைமுக்கு- கடிதங்கள்

கைமுக்கு [சிறுகதை] கைமுக்கு சடங்கை குறித்து எனக்கு தெரிந்தவை : அ) திருமணமான நம்பூதிரி பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நம்பூதிரி ஆணுக்கு தான் கைமுக்கு .ஸ்மார்த்த விசாரணையில் தன் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கும் நம்பூதிரி கைமுக்குக்கு முன் வர வேண்டும் . ஆ) ஆணோ பெண்ணோ இதர வர்ணத்தார் எனில் கை முக்கு இல்லை இ) கைமுக்கு நடத்த அரசர் உத்தரவு வேண்டும் ஈ) சுசீந்திரம் கோவில் யோகக்காரர்கள் பொறுப்பு உ) …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130849/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–44

பகுதி நான்கு : அலைமீள்கை – 27 மூத்தவர் ஃபானுவை சந்திக்கச் செல்வதற்கு முன்னர் அங்கு என்ன சொல்லவேண்டும் என்பதை ஒருமுறை கணிகரிடம் சொல்லி நா பழகிக்கொண்டேன். ஒரு செயலை செய்வதற்கு முன்னர் அதை உள்ளத்தில் ஒருமுறை செய்து பார்ப்பது நன்று என்று பலமுறை கணிகர் என்னிடம் கூறியிருக்கிறார். ஒன்றை சொல்வதற்கு முன் ஒருமுறை அதை நாவால் சொல்லிப்பார்க்க வேண்டும் என்று அவர் கூறியபோது “நான் அதை உள்ளத்தில் சொல்லிப்பார்ப்பதுண்டு” என்றேன். “அல்ல. உள்ளம் வேறு, நா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130863/