Daily Archive: April 24, 2020

மாயப்பொன் [சிறுகதை]

Savannah Martinez Savannah Martinez saved to Animal Art Golden tiger “ஒண்ணு பிளைச்சா மூணாக்கும்…இப்ப செரியா வரும்னு நினைக்கேன்” என்றான் நேசையன். “நீ என்ன அமிருத சஞ்சீவினியாலே காச்சப்போறே? காச்சுதது நாடன் சாராயம். மலைச்சரக்கு. அதில என்ன சயன்ஸு மயிரு… ? எனக்கு வேண்டியது எளுவது லிட்டர் எரிப்பன்.நான் நாளைக்களிஞ்சு மத்தநாள் அருமனை அண்டியாப்பீஸிலே எறக்கியாகணும்…உன்னால முடியுமான்னு சொல்லிப்போடு. முடியல்லேன்னா நமக்கு ஆளிருக்கு” என்றான் லாத்தி மாணிக்கம் “அது நான் செரியாக்கித் தாறேன். செய்யுதத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130648/

அறத்தொடு நிற்றல் – கடிதம்

கப்பல்காரனின் கடை ஆசிரியருக்கு வணக்கம், பிறந்தநாள் வாழ்த்துக்கள்,உங்களிடம் தொடர்ந்து கற்றுகொண்டே இருக்கிறோம். கடந்த டிசம்பர் ஆறாம் தேதி தூயரான மலையாள திரைப்பட இயக்குனர்  மதுபால்  அவர்களை அழைத்து வந்து இந்த கப்பல் காரனின் கடையை திறந்துவைத்தீர்கள்.நமது நண்பர்களும் திரளாக அன்று வந்து சிறப்பித்தார்கள் தொடர்ந்து இதுவரை புத்தி கொள்முதலுக்கு மாதம் எண்பது ஆயிரம் வரை செலவு செய்துகொண்டே இருக்கிறோம் .எனக்கு எண்ணெய் வணிகம் குறித்து எதுவுமே தெரியாது எனது பங்குதாரரின் தந்தை யோகா குருவான ராதாகிருஷ்ணன் அவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130810/

மதுரம், ஓநாயின் மூக்கு -கடிதங்கள்

மதுரம் [சிறுகதை] அன்புள்ள ஜெ மதுரம் கதையின் மையம் வாழ்க்கையை இனிமையாக்கிக் கொள்வது. ஒரு பிளைண்ட் ஸ்பாட் எல்லாருக்குமே இருக்கும். அதை எப்படி இனிமையாக்கிக் கொள்வது என்பதுதான் முக்கியமான கேள்வி அந்தக்கதையில் எருமை இனிமையை அடைவது மகன் வழியாக. ஆனால் மதுரம் கதை முழுக்க பரவியிருக்கிறது. ஆசான் மதுரம் தேடி பழைய காதலியை சென்று பார்க்கிறார். எருமைக்கு இருக்கும் மதுரத்தை விட கரடி நாயருக்கு இன்னும் மதுரம் இத்தனை இனிப்பு இருக்கு உலகில், குருட்டுத்தனம் நம்மை மறைக்கிறது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130802/

பத்துலட்சம் காலடிகள், வான் நெசவு – கடிதங்கள்

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] அன்புள்ள ஜெ பத்துலட்சம் காலடிகள் இன்னும் நெடுங்காலம் வாசிக்கப்படும் என நினைக்கிறேன். அதன் மிகப்பெரிய பல எந்த முயற்சியும் இல்லாமல் குருவி கூடுகட்டுவதுபோல மிகச்சிக்கலாக உருவாகி வந்திருக்கும் அடுக்குகள்தான் [குருவி கதையை வைத்தே இதைச் சொல்கிறேன்] உம்பர்ட்டோ ஈக்கோ போன்றவர்கள் இந்த துப்பறிதல் என்ற வடிவத்தை ஏன் கையில் எடுத்தார்கள் என்றால் அது பண்பாடு வரலாறு தனிநபர் ஆகிய பலகதைகளை ஒன்றாகக் கோத்துக்கொண்டே போகும் வசதி கொண்ட வடிவம் என்பதனால்தான். இந்தக்கதையிலேயே ஔசேப்பச்சன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130807/

நாளிரவு -கடிதங்கள்

நாளிரவு அன்புள்ள ஜெ, பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொற்கள் அல்ல, செயலே வழிகாட்டி. இந்த கொரோனா நாட்களில் நீங்கள் சொன்னதை விட செய்துகாட்டியது முக்கியமானது. இந்த கதைகள் எனக்கெல்லாம் பெரிய ஊக்கத்தை அளித்தது. நான் சோர்ந்திருந்தேன். இந்த நாட்களை செல்வமாக எண்ணவேண்டும் என்ற ஊக்கத்தை அளித்தது. இந்த ஒரு மாதத்தில் ஆன்லைனில் படிக்கவேண்டிய சிலவற்றை படித்தேன். என் வாழ்க்கையில் மிக செயலூக்கத்துடன் இருந்த நாட்கள் இவை செல்வக்குமார் *** அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, கிருஷ்ணம்மாள் ஜெகந்தான் அவர்களின் அதிகாலைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130804/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–41

பகுதி நான்கு : அலைமீள்கை – 24 தந்தையே, நான் அந்தத் தருணத்திற்காக எவ்வகையிலும் ஒருங்கியிருக்கவில்லை. நுண்ணிய சூழ்ச்சிகளை ஒருக்கி, சொல்தொகுத்துக் கொண்டிருப்பவர்கள் அதைப்போன்ற நேரடியான அடியை எதிர்கொள்ள முடியாது. என்ன மறுமொழி சொல்வதென்று தெரியாமல் தத்தளித்தபோது தோன்றியது, அதை நேரடியாகவே எதிர்கொள்ளவேண்டும் என்று. “எதுவானாலும் அதைப்பற்றி கவலைகொள்ளவேண்டியவர்கள் நாங்கள் எண்பதின்மர். எங்களுக்குள் வேறுபாடென ஏதுமில்லை. இப்போது அவ்வேறுபாட்டைச் சொல்ல முற்படுபவர் எங்களுக்குள் பிரிவை உருவாக்க எண்ணுபவர் என்றே பொருள்படுவர்” என்றேன். “நான் என் மகள்களை அங்கே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130813/