Daily Archive: April 23, 2020

ஆழி [சிறுகதை]

  “எங்காவது” என்று அவன்தான் சொன்னான். அவள் “ரொம்ப தூரம்லாம் வேண்டாம்…”என்றாள் “அதோட..” “சொல்லு” “நைட் தங்கமுடியாது” அவன் புண்பட்டான். “நான் அதுக்கு திட்டம்போடலை” “நான் அப்டி சொல்லலை” “சரி ,எப்டிச் சொன்னாலும் அது இல்லை… சும்மா ஒரு அவுட்டிங். அவ்ளவு தான்” “சரி ,நான் நேரடியாச் சொல்லிடறேனே. நாம நெருக்கமால்லாம் இருந்திருக்கோம்தான். ஆனால் மனசு விலகினபிறகு, இனிமே ரிலேஷன் இல்லேன்னு ஆனபிறகு, நீ எனக்கு யாரோதான். அப்டித்தான் நினைக்க தோணுது” “கற்பு பத்தி ஜாக்ரதை வந்திட்டுது” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130669/

பத்துலட்சம் காலடிகள்-விவாதம்

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] அன்புள்ள ஜெ பத்துலட்சம் காலடிகள் கதை பற்றி இணையத்தில் ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது, வழக்கமான சாதியக் காழ்ப்புகள் கொப்பளிக்கின்றன. வசைகள், வன்மங்கள். [நல்ல பிறந்தநாள் வாழ்த்துக்கள். நூறாண்டு வாழ்வீர்கள்] இவர்களின் வசைகளைக் கண்டபிறகே நான் அந்தக்கதையை வாசித்தேன். அவர்கள் புரிந்துகொண்டிருப்பதற்கு நேர் எதிரான கோணம் கதையில் இருக்கிறது. இத்தனைபேர் பேசிக்கொண்டிருக்கிறார்களே ஒருவருக்குக் கூடவா அடிப்படை வாசிப்பும், குறைந்தபட்ச ரசனையும் இருக்காது? ஒரு மினிமம் காமன்சென்ஸ் கூடவா இருக்காது? ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு கோபித்துக்கொள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130789/

நாளிரவு – கடிதங்கள்

நாளிரவு அன்புள்ள ஜெ,   நலம்தானே? நானும் நலம் இன்று உங்கள் பிறந்த நாள் . இணையத்தில் சென்று பார்த்தேன். எத்தனை வசைகள் எவ்வளவு காழ்ப்புகள். மலைமலையாக. இந்த தமிழ்நாட்டில் இலக்கியம் படைக்கும் ஒருவர் மேல் இவை கொட்டப்படுகின்றன. எந்த ஊழல் அரசியல்வாதியும், எந்த பகல்கொள்ளைக்காரனும் , எந்த சாதியவெறுப்பாளனும் இந்த அளவுக்கு வசைபாடப்படவில்லை. வசைபாடுபவர்கள்  யார் என்ற கேள்வியில் அதற்கான பதில் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் நாலாந்தர அரசியல் இயக்கங்களின் ஆதரவாளர்கள். ஊழல் அரசியல்வாதிகளை தூக்கி கொண்டாடுபவர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130800/

மதுரம்,சூழ்திரு -கடிதங்கள்

சூழ்திரு [சிறுகதை] அன்புள்ள ஜெ சூழ்திரு ரசனையைப் பற்றிய கதை அல்ல. வாழ்க்கைப் பார்வையைப் பற்றிய கதை. முன்பு ஒரு கட்டுரையில் ‘எல்லாமே கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்று எழுதியிருந்தீர்கள். இரண்டு வகையான மனநிலைகள் உள்ளன. எல்லாமே நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது ஒரு மனநிலை. கரடிநாயரும் நண்பர்களும் அந்த மனநிலையில் இருக்கிறார்கள். நாம் எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இன்னொருவகை. அவர்களைத்தான் நாம் இண்டஸ்டியஸ் பீப்பிள் என்கிறோம். இன்றைய முதலாளித்துவச் சமூகத்திற்கு அத்தகையவர்கள்தான் தேவைப்படுகிறார்கள் நான் அவ்வப்போது என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130788/

ஓநாயின் மூக்கு, பத்துலட்சம் காலடிகள்- கடிதங்கள்

ஓநாயின் மூக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ, பத்துலட்சம் காலடிகள் கதை உருவாக்கிய அலை சமீப காலத்தில் தமிழ் தீவிர இலக்கிய உலகில் நிகழாத ஒன்று. ஒரு கலைஞனை எதைக்கொண்டு மூடிவிடமுடியாது என்பதை வெறுப்பாளர்களுக்கு உணர்த்திய கதை அது. அடையாளங்களை போடுவது வெறுப்பைக் கக்குவது என்று செய்து செய்து ஒழித்துவிடலாம் என நினைப்பார்கள். கலை அதன்போக்கில் பீரிட்டு எழுந்து விடும். அதற்குமுன் வாசகன் திகைத்து பிறகு தலைவணங்கிவிடுவான். ஏனென்றால் அவன் என்னவாக இருந்தாலும் அடிப்படையில் கலையை ரசிப்பவன், இலக்கியத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130797/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–40

பகுதி நான்கு : அலைமீள்கை – 23 தந்தையே, ஒவ்வொருவரும் நம்முள் ஒவ்வொன்றாக பதிந்திருக்கிறார்கள். நாம் அதை நம் எல்லைகளைக் கொண்டே மதிப்பிட்டிருக்கிறோம், அவர்களின் எல்லைகளைக் கொண்டு அல்ல. நம் எல்லைகளை வகுப்பவை நம் விழைவுகள், அச்சங்கள், சினங்கள். அதற்கும் அப்பால் நம் ஆணவம். நாம் ஒவ்வொருவரையும் நம் ஆணவத்தை அளவுகோலாகக் கொண்டே மதிப்பிடுகிறோம். நான் ருக்மியை அவ்வண்ணம் மிகக் கீழே மதிப்பிட்டிருந்தேன். அது அவர் பேசத்தொடங்கியதுமே தெளிவடைந்தது. ருக்மி அரசர் என்பதை நான் மறந்துவிட்டேன். அரசர்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130796/