Daily Archive: April 22, 2020

வனவாசம் [சிறுகதை]

“தலைவன்கோட்டை சாமியப்பா!” என்று சுப்பையா கூவினான். அதன்பின் கையிலிருந்த வாழைக்குலையை அப்படியே தரையில் வைத்துவிட்டு எதிரே வந்த சைக்கிளை தாண்டி, ஊடாக ஓடிய சிறு ஓடையை தாவிக்கடந்து, மூச்சிரைக்க அவர் அருகே சென்று நின்றான். “நான் சுப்பையாவாக்கும். நீங்க தலைவன்கோட்டை சாமியப்பாதானே?” அவர் நடந்தே வந்திருந்தார். நன்றாக களைத்திருந்தார். தலைமயிர் செம்பட்டை பிடித்து பறந்தது. ஒருவாரத்தாடி வெண்நுரைபோல பரவியிருந்தது. கருகிய கண்கள். காரைபடிந்த பற்கள். பழைய சட்டையை இரு பித்தான்கள் போடாமல் திறந்துவிட்டிருந்தார். சாயவேட்டியை ஏற்றிக்கட்டியிருந்தார். கையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130628/

பத்துலட்சம் காலடிகள்- கடிதங்கள்

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] அன்புள்ள ஜெ பத்துலட்சம் காலடிகள் தமிழில் சமீபத்தில் எழுதப்பட்ட அபாரமான கதைகளில் ஒன்று. ஒருபக்கம் ஒரு முழுப் பண்பாட்டையே அதன் வரலாறு, மனநிலைகள், அதன் பிரச்சினைகள் அனைத்துடனும் அறிமுகம் செய்கிறது. இன்னொரு பக்கம் தனிமனித துயரத்தின் வழியாகச் செல்கிறது. தனிமனிதன் தன் சாதாரண உணர்ச்சிகளைக் கடந்து மேலே எழும் அபாரமான உச்சத்தைப் பற்றிச் சொல்கிறது. நீங்கள் கதையில் சொல்வதுபோல அப்துல்லா அவர்கள் ஷாஜகான் மாதிரித்தான் தெரிகிறார். மகத்தான கதாபாத்திரம். இந்தக்கதையில் நான் கவனித்தது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130777/

சூழ்திரு, பாப்பாவின் சொந்த யானை-கடிதங்கள்

  சூழ்திரு [சிறுகதை]   அன்புள்ள ஜெ சூழ்திரு கதையின் நுட்பமான ரசனையின் கதையை வாசித்துக்கொண்டே சென்றேன். ருசி என்ற ஒரே புள்ளி வழியாகச் செல்கிறது கதை. முதல் வரி முதல் ருசிதான். அதிலே அந்த கருங்குரங்கான சுக்ரியும் சேர்க்கலாம். அது லோட்டாவை கவிழ்த்து எஞ்சிய டீயை விரல்விட்டு தேடிப்பார்க்கிறது. கரடிநாயர் பாலி என்றால் சரியான சுக்ரீவன்தான் கரடிநாயர் சாப்பாட்டையும் சங்கீதத்தையும் வாழ்க்கையையும் ஒன்றாகவே சேர்த்துச் சொல்கிறார். ஆணும்பெண்ணும் இணைவதுபோல இடைக்காயும் பாட்டும் சேரவேண்டும் என்கிறார். அதேபோலத்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130707/

வான் நெசவு, மதுரம் -கடிதங்கள்

வான்நெசவு [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் எழுதியதிலேயே ஆகச்சிறந்த காதல் கதை வான் கீழ். குமரேசனை ராஜம்மையை மறக்கவே முடியாது. தினம் ஒரு கதையென வந்துகொண்டிருக்கும் உங்களின் கதைகளின் வழியே பல்வேறு பணிச்சூழல்களை அறிந்துகொண்டிருக்கிறோம். குமரேசனை, ஞானத்தை, ராஜம்மையை ஏசையாவை, முருகனை, நெல்சனை என்று இதுவரையிலும் அதிகம் கவனித்தே இருக்காத பலரை நெருக்கமாக அறிந்துகொண்டிருக்கிறோம். இவர்களெல்லாம் எதோவொரு பயணத்தின் போதோ அல்லது சாலையைக்கடக்கையிலேயோ ஒரு கணம் பார்த்து பின்னர் முற்றிலுமாக மறக்கப்பட்டவர்கள். அவர்களின் வாழ்வின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130741/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–39

பகுதி நான்கு : அலைமீள்கை – 22 ருக்மியை சந்திக்கக் கிளம்புவதற்கு முன்பு நான் கணிகரை சந்திக்க விரும்பினேன். அவரை சந்திக்க விழைகிறேன் என்று செய்தி அனுப்பினேன். கணிகர் உடல்நலமின்றி படுத்திருப்பதாகவும் உடனடியாக அவரை சந்திப்பது இயலாதென்றும் தூதன் வந்து சொன்னான். என்ன செய்கிறது அவருக்கு என்று கேட்டேன். நேற்றைய விருந்தில் அவர் உண்டது ஒவ்வாமையை உருவாக்கியிருக்கிறது. ஆகவே தன் குடிலில் உணவொழிந்து உப்பிட்ட நீர் மட்டும் அருந்தி படுத்திருக்கிறார் என்றான். மருத்துவர்கள்? என்றேன். மருத்துவர்களை அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130776/