Daily Archive: April 20, 2020

ஓநாயின் மூக்கு [சிறுகதை]

  திருவனந்தபுரம் மஸ்கட் ஓட்டலில் அந்திக்குமேல் மட்டுமே கூட்டமிருக்கும். நள்ளிரவில் நெரிசல். சினிமா விவாதத்திற்காக நான் அங்கேதான் தங்கியிருந்தேன். காலையில் அந்த இடமே ஓய்ந்துகிடக்கும். எந்த காட்டேஜிலும் ஆளிருப்பதாகத் தெரியாது. உள்ளேயே நீண்ட காலைநடை செல்லலாம். எதிரே எவருமே வரமாட்டார்கள். ஆனால் இரவில் செவிக்குள் மெழுகு இல்லாமல் ஏஸி காட்டேஜில்கூட தூங்கமுடியாது. “இரவெல்லாம் குடிக்கிறார்களே, இவர்கள் காலையில் வேலைவெட்டிக்கு போகமாட்டார்களா?”என்று கேட்டேன் விஸ்கிக் கோப்பையை டீபாயில் வைத்த ஔசேப்பச்சன் “இவர்கள் என்ன உன்னைப்போல அரைமலையாள அரைத்தமிழ் எழுத்தாளர்களா? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130551/

பாப்பாவின் சொந்த யானை,சூழ்திரு -கடிதங்கள்

பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை] அன்புள்ள ஜெ இந்த கொரோனா காலக் கதைகளில் பலவகையான படைப்புக்கள் வந்துகொண்டிருக்கின்றன. மிகச்சிக்கலான வடிவமைப்பும் உருவகத்தன்மையும் கொணடது பத்துலட்சம் காலடிகள். ஆனால் எனக்கு அதே அளவுக்கோ இன்னும் கொஞ்சம அழமாகவோ பிடித்தமானதாக இருப்பது பாப்பாவின் சொந்த யானை போன்ற ஒரு கதைதான். அதில் மிகமிக மென்மையாகத் தீட்டிக்காட்டப்படும் வாழ்க்கைச் சித்திரத்தை ஒரு மாஸ்டர் டச் என்று சொல்வேன். மிகப்பெரிய ஓவியனின் பென்ஸில் ஸ்கெச் போன்றது அது. பாப்பாவின் குணாதிசயம் அதில் அற்புதமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130734/

பத்துலட்சம் காலடிகள், எழுகதிர் -கடிதங்கள்

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] அன்புள்ள ஜெ இந்த கதைகளில் பலவகையான எழுத்துமுறைகள் உள்ளன. மாஜிக்கல்ரியலிச பாணி கதைகளான எழுகதிர், தங்கத்தின் மணம், விலங்கு போன்றவை. யதார்த்தமான அங்கதக்கதைகளான ஆனையில்லா, பூனை போன்றவை. உருவகத்தன்மை கொண்டவையான லூப் போன்றவை. இந்தக்கதைகள் எல்லாமே கதையை விட கவித்துவமான ஒரு தருணத்தையே அதிகமாக போகஸ் செய்கின்றன. திருப்பம் என்பதைவிட கவித்துவ தருணத்தை அடைந்துவிட்டால் நிறைவடைகின்றன. இதில் வேறுபட்டிருக்கும் கதைகள் என்றால் வேட்டு, வேர்களில் திகழ்வது போன்ற கதைகள். அவை சிக்கலான கட்டமைப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130740/

வான்கீழ், குருவி- கடிதங்கள்

வான்கீழ் [சிறுகதை] அன்புள்ள ஜெ, வான்கீழ் கதை ஓர் அழகான காதல்கதை. சாமானியனின் காதல். காதல் ஒரு பெரிய நம்பிக்கையை அளிக்கிறது. சாமானியனை ஆற்றல் கொண்டவனாக ஆக்கிவிடுகிறது. அந்த மாபெரும் கோபுரம் இந்தச் சமூகம்தான். அது கதையிலேயே குறிப்புணர்த்தப்படுகிறது – டி.இ அறை அங்கே இருக்கிறது. அதைவிட மேலாக எழுந்து நிற்கிறது கோபுரம். அதில் ஒவ்வொருவரும் சரியாக ஓர் இடத்தில்தான் பொருந்த முடியும். அதில் உடல் ஊனமுற்ற கதாநாயகனால் ஏறமுடியாது. ஏறலாம் என அவன் நினைத்ததே அவளால்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130714/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–37

பகுதி நான்கு : அலைமீள்கை – 20 தந்தையே, அதன் பின்னர் துவாரகையில் நாளும் உண்டாட்டுகள் நிகழ்ந்தன. யாதவ மைந்தர் எண்பதின்மரும் கூடுவதென்றால் உண்டாட்டு தேவையாக இருந்தது. யாதவ மைந்தரின் மூன்று பெருங்குழுக்களையும் ஆதரித்துவந்த குடித்தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டியிருந்தது. ஆகவே அவர்களை அழைத்துவந்து உண்டாட்டில் அமரச்செய்தனர். அவர்களின் முன் யாதவ மைந்தரின் முழுதொற்றுமையை நடித்தனர். முதலில் உணர்வெழுச்சியுடன் நிகழ்ந்த தழுவல்களும் கேலிப்பேச்சுகளும் பின்னர் சடங்காக மாறின. ஆயினும் அவை விரும்பப்பட்டன. சடங்குகளே ஆயினும் அவை இனிய முதற்சந்திப்பை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130733/