Daily Archive: April 18, 2020

பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]

“ஆனையில்லா!” [சிறுகதை] நான் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சரண் “ஏம்பா சிரிக்கிறீங்க?” என்று கேட்டான். “இருடா” என்றேன். படித்துக் கொண்டிருந்த வரிகள் என்னை அறியாமலேயே முகத்தை மலரச் செய்துவிட்டிருந்தன “ஏம்பா?” என்றபடி பாப்பா வந்து என் தொடையை பிடித்துக்கொண்டாள் . “ஏய் இருன்னு சொன்னேன்ல?” “என்னப்பா? ஏன் சிரிக்கிறே?” என்றான் சரண். ”சுமம இருடா… ஒரு அஞ்சு நிமிஷம்.” “என்ன அங்க?” என்று ஜானகி கேட்டாள் “ஒரு கதை…” என்றேன் “அதை படிச்சு முடிச்சிடலாம்னா வந்து இழுக்கிறாங்க.” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130680/

எழுகதிர்,லூப்- கடிதங்கள்

எழுகதிர் [சிறுகதை] அன்புள்ள ஜெ, எழுகதிர் கதையை வாசிக்கையில் ஒரு ஒப்பீடு மனசிலே ஓடிக்கொண்டிருந்தது. கதையைச் சொல்பவனுக்கும் ஸ்ரீகண்டன் நாயருக்கும் என்ன வேறுபாடு? எல்லாமே சமம்தானா? இல்லை. ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. கதையைச் சொல்பவன் bonded அவன் குற்றவுணர்ச்சியால் சிறைப்பட்டவன். வாழ்க்கை முழுக்க அவனால் அதிலிருந்து விடுபட முடியாது. அவன் காறித்துப்பியபடியே ஊரைவிட்டுச் செல்கிறான். தன்னைத்தானேதான் துப்பிக்கொள்கிறான். கடைசிவரை துப்பிக்கொண்டேதான் இருக்கிறான். ஆனால் ஸ்ரீகண்டன் முழுக்கமுழுக்க சுதந்திரமானவன். ஆகவே அவனுக்கு சொந்தமாக ஒரு முகமோ அடையாளமோகூட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130704/

துளி,மொழி,வேரில் திகழ்வது -கடிதங்கள்

வேரில் திகழ்வது [சிறுகதை] அன்புள்ள ஜெ வேரில் திகழ்வது கதை ஒரு குறுநாவல். ஆனால் அதன் வேகம் காரணமாக அதை வாசித்ததே தெரியவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் சிற்றிதழ்களில் கதைகளை வாசிப்பதை மிகவும் குறைத்திருந்தேன். கதைகளில் வாழ்க்கை இருக்கிறது, ஆனால் சுவாரசியம் இல்லை. கதைகள் அப்படியே வாழ்க்கையின் யதார்த்ததைச் சொன்னால்போதாது. அதை கதையாக ஆக்கவேண்டும். ஜானகிராமனின் எல்லாச் சிறுகதைகளும் சுவாரசியமான கதைகள். கதை என்பதற்குள் ஒரு விளையாட்டு உள்ளது. எழுதுபவனும் வாசிப்பவனும் சேர்ந்து ஆடும் ஆட்டம் அது. அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130624/

கதைகள், கடிதங்கள்

பொற்கொன்றை! அன்பிற்கினிய ஆசான் ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு மஞ்சள் பூத்து நிறைந்த உங்களின் பொற்கொன்றை மலரிலே உதயமானது. நோயச்சம் மட்டுமே சூழ்ந்திருக்கும் இச்சயமத்தில் எத்தனை நேர்மறையாக இருந்தாலும் ஒரு சிறு எதிர்மறையான வார்த்தை கூட மன அழுத்தத்தை அதிகமாக்கிவிடுகிறது. இது வரை அழைத்து பேசாத நண்பர்கள் எல்லாம் அழைத்து பேசுகிறார்கள். ஆனால் அவர்களும் அவர்களின் அச்சத்தை சேர்த்துவிட்டு முடிக்கிறார்கள். யாரைப்பார்த்தாலும் நோய், இறப்பு, மருத்துவமனை,  பொருளாதாரா வீழ்ச்சி இதைத் தவிர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130705/

ஜெயமோகன், ஆனந்த சந்திரிகை- கடிதங்கள்

அன்புள்ள ஜெ கோவை சிறுமுகை மருத்துவ ஜெயமோகன் அவர்களின் இறப்பு குறித்த அஞ்சலிக் குறிப்பை வாசித்தேன். நானும் தனிப்பட்ட முறையில் துயரடைந்த நிகழ்ச்சி. அவர் காய்ச்சலால் அவதிப்பட்டார். ஆகவே வழக்கமான கொரோனா சோதனை நடத்தப்பட்டது. கொரோனா இல்லை, ஆனால் டெங்கு இருக்கலாம் என்று சந்தேகம் வந்து மருத்துவ சிகிச்சை தொடங்குவதற்குள் அவர் மரணம் அடைந்தார். அவர் பணியாற்றிய தொங்குமராட்டா காட்டுப்பகுதியில் கொரோனா இல்லை ஆனால் கொரோனா நோயால் அவர் மரணமடைந்ததாக சமூகவலைத்தளம் முழுக்க செய்தி பரப்பப் பட்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130716/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–35

பகுதி நான்கு : அலைமீள்கை – 18 கிருதவர்மன் அமர்ந்திருக்க அவரைச் சூழ்ந்து நாங்கள் எண்பதின்மரும் ஒருவர் குறையாது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் ஏனென்றறியாமலேயே நகைத்தோம். ஒருவரை ஒருவர் களியாடினோம். உண்மையில் பின்னர் எண்ணியபோது வியப்பாக இருந்தது. ஒவ்வொருவரும் அன்று பேசிய ஒவ்வொரு சொல்லும் உண்மையின் ஒளிகொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் ஐயங்களையும் அச்சங்களையுமே சொன்னார்கள். எவரை வெறுக்கிறார்களோ அவரை நோக்கி சென்று அருகே அமர்ந்துகொண்டார்கள். எவரை அஞ்சுகிறார்களோ அவர்கள் கைகளை பற்றிக்கொண்டார்கள். அனைத்து வெறுப்புகளையும் நகையாட்டென மாற்றிக்கொண்டார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130692/

மரபை விரும்புவதும் வெறுப்பதும் எப்படி?

அன்பு ஜெ.. கோவையில் தங்களுடன் பேசிக்கொண்டிருந்த போது இலக்கியத்துக்கு என்று பிரத்யேக சேனல் ஆரம்பிக்க போகிறோம் உங்களது ஆதரவு வேண்டும் என்றேன். தொடக்க விழாவுக்கு உங்களை அழைத்தேன், தாங்களும் வருவதாக சொன்னீர்கள். நன்றி. தற்போது உள்ள சூழ்நிலையில் விழா எதுவும் எடுக்கவில்லை, நேரடியாக சமூக வளைதளங்கள் மூலம் YouTube ல்  Shruti TV Literature  சேனல் தொடங்கப்பட்டு விட்டது,   சேனல் சுட்டி : https://www.youtube.com/channel/UCW1Eo2DbGgHjc0zk9wCi2Bw   இந்த சேனலில் தாங்கள் சென்னையில் ஆற்றிய உரையினை பதிவேற்றியுள்ளோன். ஆகுதி வழங்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130722/