Daily Archive: April 17, 2020

பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

ஔசேப்பச்சன் சொன்னான். “இன்றைக்கு நிறைந்த வெள்ளிக்கிழமை. புனித அந்தோணியார் புண்யவாளனுக்கு உரிய நாள் இது. திரிசந்தியாநேரம் வேறு.ஆகவே என்னைப்போன்ற சத்யவிசுவாசியான மார்த்தோமாக்காரனுக்கு இந்நேரம் மிகமிகப் புனிதமானது.” “ஆமாம்” என்று குமாரன் மாஸ்டர் சொன்னார். “இனிமையான கடற்காற்று வீசிக்கொண்டிருக்கும் இந்த அழகான வேளையில் இதைக் கொண்டாடும் பொருட்டு நாற்றமடிப்பதும் பாவத்திலாழ்த்துவதும் அனைத்துக்கும் மேலாக வெள்ளைக்காரப் பெண்களை நினைவில் கொண்டுவருவதுமான அன்னியநாட்டு மதுவகைகளை தவிர்த்து, நம்முடைய சொந்த கொச்சியில் அழகான இயற்கைசூழ்ந்த சாண்டித்துருத்தில் நம்முடைய சொந்த அவறாச்சன் சொந்தமாக வாற்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130497/

வான்கீழ், அனலுக்குமேல் -கடிதங்கள்

  வான்கீழ் [சிறுகதை] அன்புள்ள ஜெ ஒரு கதாசிரியனுக்கு கதை எங்கிருந்தெல்லாம் வரும் என்பதற்கு உதாரணம் வான்கீழ். ஏற்கனவே உங்கள்மேல் சிலர் ஒரு குற்றச்சாட்டை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நீங்கள் சாமானிய மக்களைப்பற்றி எழுதவில்லை- புராணம் எழுதுகிறீர்கள் என்று. இந்தக்கதைகளை அனுப்பினேன். இவற்றையும் அவர்கள் படிக்கவில்லை. படிக்கமாட்டார்கள் என்று தெரியும் மக்களின் வாழ்க்கையிலிருந்து எழும் கதை. அந்த தொழிற்சூழலைப்பற்றி விரிவாக ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் உள்ளே போய் வாழ்ந்த அனுபவம். என்னைப்போல இதேபோன்ற தொழிற்சூழலில் வாழ்ந்தவர்களுக்குத்தான் இது புரியும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130703/

ஆட்டக்கதை, எழுகதிர் -கடிதங்கள்

ஆட்டக்கதை [சிறுகதை] அன்புள்ள ஜெ ஆட்டக்கதை போன்ற ஒரு சிறுகதை ஓர் இணையதளத்தில் வந்தால் குறைந்தது 15 நாட்கள் கடந்துதான் அடுத்த கதை வரவேண்டும். ஆனால் அடுத்தடுத்த கதைகளாக வந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ஒவ்வொரு களம். இத்தனை மாறுபட்ட களங்களில் கதைகள் வந்து குவியும்போது வாசிப்பது மட்டுமல்ல நினைவில் வைத்துக்கொள்வதும் உள்வாங்கிக்கொள்வதும் பெரிய சவாலாக ஆகிவிடுகிறது. ஆட்டக்கதையை நான் இன்னொரு முறை படித்த பிறகுதான் புரிந்துகொள்ள முடிந்தது. இந்தக்கதையை என்னுடைய சொந்த அனுபவத்தை வைத்து புரிந்துகொள்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130698/

ஏகம், ஆனையில்லா -கடிதங்கள்

“ஆனையில்லா!” [சிறுகதை]   அன்புள்ள ஜெ   ஆனையில்லா ஒர் அற்புதமான சிறுகதை. அந்தச் சிறுகதை இதற்குள்ளாகவே எங்கள் குடும்ப வாட்ஸப்குழுமத்தில் ஒரு தொன்மக்கதை போல புழங்க ஆரம்பித்துவிட்டது 82 வயதான என் அத்தை அதை குழந்தைக்கதை போல சிரிக்கச் சிரிக்க குழந்தைகளுக்குச் சொன்னார்கள். அதை அப்படியே பதிவுசெய்து சுற்றவிட்டிருக்கிறார்கள்.   எவ்வளவு அற்புதமான கதை என்று அந்த பலவகையான வடிவங்களைப் பார்க்கும்போதுதான் தெரிகிறது. அதை ஒரு குட்டி நாடகமாக நானே எழுதினேன். [அதாவது ரெக்கார்ட் செய்தேன்] …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130677/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–34

பகுதி நான்கு : அலைமீள்கை – 17 துவாரகைக்கு நான் கிருதவர்மனுடன் வந்துகொண்டிருக்கிறேன் என்ற செய்தியை முன்னரே மூத்தவரிடம் தெரிவித்திருந்தமையால் நகருக்கு நெடுந்தொலைவிலேயே எங்களை வரவேற்கும் பொருட்டு சுஃபானுவும் மூன்று உடன்பிறந்தாரும் அணிப்படையினருடன் வந்திருந்தார்கள். அவர்கள் பாலை நிலத்தில் துவாரகையின் செம்பருந்துக்கொடி உயர்ந்து பறக்கும் மூங்கிலுடன் நின்றிருப்பதை தொலைவிலேயே நாங்கள் கண்டோம். இணையாக யாதவக்குடியின் பசுக்கொடியும் பறந்தது. என்னுடன் வந்திருந்த சிறிய காவல்படையினர் கொம்பொலி எழுப்பி எங்கள் வருகையை அறிவித்தனர். அங்கிருந்து முரசுகளும் முழவுகளும் சங்கும் மணியும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130672/