Daily Archive: April 15, 2020

எழுகதிர் [சிறுகதை]

இது ஒரு மிகப்பெரிய கொள்ளையின் கதை. ஐம்பதாண்டுகளுக்கு முன், அதாவது 1971 ல் நடந்தது. மிகச்சரியாகச் சொல்லப்போனால் பிப்ரவரி மாதம் இருபத்திரண்டாம் தேதி. அன்றைய செய்தித்தாள்களில் மிகப்பெரிதாகப் பேசப்பட்டது. குகையுறைநாதர் கோயிலில் நடந்த கொள்ளை. இன்று அது ஓரளவு அறியப்பட்டுவிட்டது. அன்று அப்படியொரு கோயில் அங்கே இருப்பது எவருக்குமே தெரியாது. புதர்கள் நடுவே கைவிடப்பட்டு கிடந்த மிகச்சிறிய கல் கட்டிடம். எங்கள் கொள்ளையால்தான் அது பரவலாக அறியப்பட்டது அன்று நான் இருபத்திரண்டு வயதான இளைஞன். வேலையேதும் இல்லாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130470/

சூழ்திரு, குருவி -கடிதங்கள்

சூழ்திரு [சிறுகதை]   அன்புள்ள ஜெ   சூழ்திரு கதையை வாசித்தேன். வீட்டில் அனைவருடன் அமர்ந்து இன்னொருமுறை சத்தமாக வாசித்தேன் [என் வீட்டின் பெயர் ஸ்ரீனிவாசம். சூழ்திருவின் ஏகதேச மொழிபெயர்ப்புதான்]   டீடெயில்கள்தான் கதையின் பலம். அப்பா டீயை சுவைத்துக் குடிப்பதில் தொடங்குகிறது. அவருடைய சுவையில் தொடங்கி நூல்பிடித்ததுபோல செல்கிறது. அவருடைய ருசி நுட்பமானது. நுட்பத்தை தேடுவது. அவியலில் எங்கே எப்போது தயிர் விடவேண்டும் என்று அவர் சொல்கிறார். இடைக்கா தாளம் எப்படி சோபானப்பாட்டில் கலக்கவேண்டும் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130640/

லூப்,சுற்றுக்கள் – கடிதங்கள்

லூப் [சிறுகதை] அன்புள்ள ஜெ   பகடிக்கதைகளுக்குரிய வரிக்குவரி கொண்டாட்டத்துடன் ஆரம்பித்து சட்டென்று வேறெங்கோ சென்று ஆவேசமான ஒரு குரலாக மாறி ஒரு நீண்ட பெருமூச்சாக முடிந்தது லூப் கதை.   ஞானம் – ஆரோக்கியம் இருவருக்கும் நடுவே நடக்கும் உரையாடல் அன்றைய தொழில்சூழலை காட்டியது. என் அப்பா மின்வாரிய ஊழியர். அவர் டேய் என்று கூறி தன் சக ஊழியர்களை அழைப்பதைக் கேட்டிருக்கிறேன். இன்று அலுவலகச் சூழலே மாறிவிட்டது. இன்று பல அலுவலகங்களில் ரிட்டயர்மெண்ட் பார்ட்டி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130642/

ஏகம் -கடிதங்கள்

ஏகம் [சிறுகதை] அன்புள்ள ஜெ   ஏகம் இந்தவரிசைக் கதைகளில் இன்னொரு பாணி. நீங்கள் உண்மையான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக வைத்து எழுதிய கதைகளில் ஒன்று இது. இதை நீங்கள் எழுதிய இரு கலைஞர்கள் கதையின் வரிசையில் வைக்கலாம் என நினைக்கிறேன்.   நேரடியான கதை. கதையில் முதலில் எழும் கேள்வி இரண்டு மனிதர்கள்- ஆணானாலும் பெண்ணானாலும்- நடுவே ஒரு அந்தரங்கமான இணைப்பு நிஜம்மாகவே சாத்தியம்தானா? அது ஒரு லௌகீகமான கேள்வி. லௌகீகத்தில் அதற்கான பதில் சாத்தியமே இல்லை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130675/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–32

பகுதி நான்கு : அலைமீள்கை – 15 கிருதவர்மனின் உள்ளத்துள் என் சொற்களை செலுத்திவிட்டேன் என்றே உணர்ந்தேன். “தந்தையே, நீங்கள் எங்கள் குலமூதாதை ஹ்ருதீகரின் மைந்தர். ஒவ்வொரு நாளும் பொழுதிணைவு வணக்கங்களில் நாங்கள் சொல்லும் பெயர்களில் ஒன்று அது. ஒவ்வொருநாளும் அவருக்கு நீர் அளிக்கும் நிலங்களில் ஒன்று துவாரகை” என்றேன். அவர் என்னை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தார். “களம்பட்ட உங்கள் மைந்தர் பாலிக்காக நீர் அளித்தவர்களில் ஒருவன் என நின்று இதை உங்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்” என்றேன். “என்றும் அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130654/