Daily Archive: April 14, 2020

பொற்கொன்றை!

  இன்றைய மலர் வான் அலை நாற்புறமும் திறத்தல் வீடுறைவு தனிமைநாட்கள், தன்னெறிகள். கொரோனோவும் இலக்கியமும் தனிமையின் புனைவுக் களியாட்டு கோவிட் நோய்த்தொற்று, ஊரடங்கு குறித்து எதுவும் எழுதவேண்டாம் என்பதே என் எண்ணம், இனிமேலும் எழுதப்போவதில்லை. என்னை ஒவ்வொருநாளும் கருத்துரைக்க, விவாதிக்கவும் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு “இல்லை, நான் பேச விழையவில்லை” என்பதே என் பதில். இந்த விஷு நன்னாளில் ஒருசில சொற்கள். ஒரு குடும்பச்சூழலில் அக்குடும்ப உறுப்பினர்களிடையே உச்சகட்ட வன்முறை எப்போது நிகழும் என்றால் அக்குடும்பமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130664/

நகைமுகன் [சிறுகதை]

ஆறுமுகம் போனை லொட் லொட் லொட் என்று தட்டினார். “எளவெடுத்தவனுக ஒரு நாலுவார்த்தை பேசவும் விடுதானுக இல்லியே” என்று சலித்துக்கொண்டார். மறுமுனையில் டி.இ சதாசிவம் தோன்றினார். “டேய் ஆறுமுகம், கேட்டுட்டுத்தான் இருக்கேன். பாத்துப்பேசு.” “உங்களச் சொல்லேல்ல சார்…” “பின்ன ஆரைச்சொன்னே? ஆரைடே சொன்னே?” “சார், பொதுவாட்டு சொன்னேன்… பொதுவா சொல்லப்பிடாதா?” “சொல்லப்பிடாது டே. அப்டிப் பொதுவாச் சொல்லப்பிடாது. பொதுவாச் சொன்னேன்னா ஆரை? டிப்பார்ட்மெண்டையா? இல்ல சர்க்காரையா? சொல்லு.” “நான் சாமியச் சொன்னேன், இப்டி நம்மள படைச்சு கொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130659/

ஆயிரம் ஊற்றுக்கள், ஆடகம் -கடிதங்கள்

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை] அன்புள்ள ஜெ,   சூழ்ச்சிகள் நிறைந்த சூழலில் ஆள்வோருக்கு அவ்வப்போது ஓர் அலையென தனிமை வந்து தாக்குகிறது போலும். கைவிடப்பட்டிருக்கிறோமோ என்னும் ஐயம் எழுகிறது. அதற்கு மறுமொழி என நாங்கள் இணைந்து பின்குரல் எழுப்ப வேண்டியிருக்கிறது.   இது வெண்முரசில் வந்த வரி. மிகமுன்னால் எங்கோ வந்தது. சும்மா குறித்து வைத்திருந்தேன். ஆனால் மோடியின் கைத்தட்டல் விளக்கேற்றல் சம்பவங்களில் இந்து ஞாபகம் வந்தது. வெண்முரசு தரும் அனுபவம் என்பது இதுதான். அரசியலில் மக்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130561/

லூப், பெயர்நூறான் -கடிதங்கள்

லூப் [சிறுகதை] அன்புள்ள ஜெ   ஒரு தொழிற்சூழலில் இருந்து இத்தனை கதைகள் தொடர்ச்சியாக வெளிவருவது தமிழில் இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். ஒரு தொழிற்சூழலில் உள்ள வாழ்க்கையைச் சொல்லும் சில நாவல்கள் வந்திருக்கின்றன. ஆனால் அதை குறியீடாக ஆக்கி கவித்துவமாக எழுதப்பட்ட கதைகள் பெரும்பாலும் இல்லை. நான் கட்டுமானத்துறையில் வேலைபார்க்கிறேன். இந்த தளத்தின் குறியீட்டுத்தன்மையைப் பற்றி நான் நிறையவே யோசித்திருக்கிறேன். குறிப்பாக எடையை ஒவ்வொரு பொருளும் தாங்குவது, அதன் எல்லை இதையெல்லாம் அற்புதமான கதைகளின் கருக்களாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130623/

ஆட்டக்கதை,குருவி- கடிதங்கள்

ஆட்டக்கதை [சிறுகதை] அன்புள்ள ஜெ   ‘ஆட்டக்கதை’ என்றால் கதைகளிக்கான நாடகவடிவம்- சரிதானே? விக்கியில் சிலவிஷயங்களைச் சரிபார்த்துக்கொண்டேன்.   ஒரு முழுநாவலுக்கான கதை. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுக்கால முழுவாழ்க்கை. அதிலுள்ள எல்லா ஏற்றத்தாழ்வுகளும் எல்லா சரிவுகளும் மகிழ்ச்சிகளும் பதிவாகியிருக்கின்றன. கூடவே கதகளி என்ற கலையின் மறுபிறப்பும், அதன் உள்விவகாரங்களும். ஒரு கதைக்குள் இத்தனை விரிவான வாழ்க்கை என்பது ஆச்சரியம்தான்   இரட்டைப்பெண்களில் ஒருத்தியை மணந்தவனின் அலைக்கழிப்பு என்பது ஆச்சரியமான கரு. இதுவரை தமிழில் எவரும் இந்தவகையில்கூட ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130658/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–31

பகுதி நான்கு : அலைமீள்கை – 14 நான் சிந்துவின் வழியாக வடபுலம் சென்று இமையமலையின் அடிவாரத்தில் பருஷ்னி நிகர்நிலத்தை தொடும் இடத்தில் அமைந்திருந்த காட்டில் கிருதவர்மன் தங்கியிருந்த குருநிலைக்கு ஏழு நாட்களுக்குப் பின் சென்றுசேர்ந்தேன். அங்கே இருந்த முனிவர்கள் எவரென்று கிளம்பும்போது நான் அறிந்திருக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்த செய்திகள் அனைத்தும் குழப்பமாகவே இருந்தன. அது விஸ்வாமித்ரரின் குருநிலை என்று அங்கு சென்ற பின்னரே அறிந்தேன். விஸ்வாமித்ரர் குறித்து துவாரகையில் அச்சமும் குழப்பங்களும் இருந்தன. அவர் ஷத்ரியர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130653/