Daily Archive: April 12, 2020

ஆட்டக்கதை [சிறுகதை]

“பெண்பார்க்க போவதுவரை எனக்கு உண்மையிலேயே தெரியாது” என்றார் ஸ்ரீகிருஷ்ணபுரம் ராஜசேகரன் நாயர். ”அந்தக்காலத்தில் பெண்பார்க்கப்போவது என்ற சடங்கு பொதுவாக இல்லை. பெண்ணைப் பார்க்கவேண்டும் என்றால் தவறாகக்கூட எடுத்துக்கொள்வார்கள். நான் அடம்பிடித்ததனால்தான் கூட்டிச்சென்றார்கள். உடன் வந்தவர்கள் என் தாய்மாமன்கள் இருவர், என் சித்தப்பா ஒருவர். கிளம்பும்போதே அப்பா கடுமையாக எச்சரித்து அனுப்பியிருந்தார். என்னை பேசவே விடக்கூடாது என்று. அன்றுதான் சரஸ்வதியைப் பார்த்தேன்” டேப் ரிக்கார்டர் ஓடிக்கொண்டிருந்தது. அவர் கைவிரல்களைக் கோத்து கும்பிடுவதுபோல மார்பின்மேல் சேர்த்துக்கொண்டு தலைகுனிந்து அரைக்கண்மூடி அமர்ந்திருந்தார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130443/

லூப் ,சூழ்திரு -கடிதங்கள்

  சூழ்திரு [சிறுகதை] அன்புள்ள ஜெ   கொரோனோக் காலக் கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இன்றைய கதை அற்புதமான ஒன்று. அதிலுள்ள ஒரு connoisseur வாழ்க்கை. அது நான் ஐரோப்பா போன்ற ஒரு நாகரீக உச்சம் அடைந்த நாட்டில்தான் இருக்கும் வாழ்க்கை என்று நினைத்திருந்தேன். ஒரு சின்ன ஊரில் சாப்பாடு சங்கீதம் யானை என்று எல்லாவற்றிலும் ஒரு உயர்ந்த ரசனையுடன் இருந்திருக்கிறார்கள். அந்த நுட்பமான ரசனை திகைப்பை அளித்தது. அந்த வாழ்க்கையையே ஒரு கொண்டாட்டமாக அனுபவிக்கிறார்கள்   ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130635/

வானில் அலைகின்றன குரல்கள், வேரில் திகழ்வது -கடிதங்கள்

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை] அன்புள்ள ஜெ,   வானில் அலைகின்றன குரல்கள் பல நினைவுகளை தூண்டிவிட்டது. ஸ்ட்ரௌஜர் எக்ஸேஞ்ச்சின் அந்த டயல்டோன். என் வாழ்க்கையுடன் முப்பது ஆண்டுகள் அன்றாடம்போலவே கழிந்துவிட்ட ஒன்று. சீரோவை எல்லா எண்ணுடனும் சேர்வது, எவருக்கும் சொந்தமில்லாதது என்று நானும் சொன்னதுண்டு. எல்லாம் ஒரு கனவுபோல சென்றுவிட்டது இல்லையா? தொழில்நுட்பம் ஒன்று வந்தால் முந்தையது அப்படியே மறைந்துவிடுகிறது   வானில் அலையும் ஒலிகளை ஒரு இடத்தில் இழுத்துவைத்து பங்கிடுகிறோம் என்று எனக்கும் தோன்றியது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130491/

இடம், ஆயிரம் ஊற்றுக்கள் -கடிதங்கள்

  ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]   அன்புள்ள ஜெ   ஆயிரம் ஊற்றுக்கள் கதை அந்த தலைப்பிலேயே ஒரு பெரிய நெகிழவைக் கொண்டிருக்கிறது. ஆயிரம் ஊற்றுக்களும் எங்கிருந்து எழுகின்றன? அந்த அன்னையின் மனசிலிருந்தா? அல்லது அவளால் பேணப்படும் அந்த மண்ணில் இருந்தா?   இயற்கையில் இந்த வன்முறை இருந்துகொண்டுதானே இருக்கிறது? ஒரு காட்டாளத்தியாக இருந்திருக்கலாம் என்று உமையம்மை ராணி சொல்லும்போது ஆண்டாள் காட்டில் மானை பிடித்து தின்னும் புலி உண்டு ராணி என்று பதில் சொல்கிறாள்   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130562/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–29

பகுதி நான்கு : அலைமீள்கை – 12 தந்தையே, தீப்பிடித்து எரிவதற்கான வாய்ப்பு பல நூறாண்டுகள்கூட அவ்வண்ணமே நிகழாது தொடரக்கூடும். தீப்பிடித்துவிட்டால் கணங்கள் கணங்கள் என எரிதல் விரைவு கொள்ளும். கணங்களை அச்சுறுத்தி பறக்கச்செய்யும். துவாரகையில் ஒவ்வொன்றும் அத்தனை விசை கொள்ளும் என்று சில நாட்களுக்கு முன் கூறியிருந்தால் திகைத்திருப்பேன். நான் நகரத்தில் இறங்கும்போது ஒவ்வொருவரும் மாறியிருப்பதை கண்டேன். அத்தனை விழிகளும் பற்றி எரியத்தொடங்கியிருந்தன. உடலசைவுகளில் விரைவு கூடியிருந்தது. பதற்றமும் கொந்தளிப்புமாக மக்கள் கூடிக் கூடி நின்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130608/