2020 April 11

தினசரி தொகுப்புகள்: April 11, 2020

தளத்தை ஆடியோ வடிவில் கேட்க

தளத்தை ஆடியோ வடிவில் கேட்க பயணத்தின்போது , அல்லது ஒலிவடிவில் கேட்க நினைப்பவர்களுக்கு உதவும், ஆண்டாய்ட் மொபைல் பயனாளர்களுக்காக ,அல்லது வயதாகிப்போன பழம்பெரும் வாசகர்களுக்காக :) விழித்திறன் குறைந்தோருக்கு மிகவும் உதவும் . நம் தளத்தை (அல்லது...

குருவி [சிறுகதை]

நாகர்கோயிலில் இருந்து டிஸ்டிரிக்ட் எஞ்சீனியர் என்னை அழைத்ததாக சிவன் சொன்னான். “டி.ஈ யா? என்னலே சொல்லுதே?” என்றேன். “அவருதான்... இருக்கேளாண்ணு கேட்டார்.” “நீ என்ன சொன்னே?” “சாய குடிக்க போயிருக்காருண்ணு சொன்னேன்.” “செரி, அந்தமட்டுக்கும் ஒரு வெவரம் உனக்கு...

அருண்மொழி நங்கை அவர்களுக்கு வாழ்த்துக்கள்

அன்புள்ள அருணா அக்கா, ஏப்ரல் பதினாலு வந்தால் சவால் தொடங்கி ஒரு வருடம் நிறைவுறுகிறது. நான் இதை தொடங்கிய போது சராசரியாக நம்மால் நாளுக்கு மூன்று மணிநேரம் வாசிக்க முடிந்தால் ஒரு வருடத்தில் 1000...

வானில் அலைகின்றன குரல்கள், தங்கத்தின்மணம் -கடிதங்கள்

வானில் அலைகின்றன குரல்கள்   அன்புள்ள ஜெ   வானில் அலைகின்றன குரல்கள் விசித்திரமான கதை. இன்றைய கதைகள் இனி எப்படியெல்லாம் எழுதப்படலாம் என்பதற்கான புதிய சாத்தியங்களை காட்டும் கதை. தமிழில் சிறுகதைகள் வாசிப்பவன் என்ற வகையில்...

இடம், அங்கி -கடிதங்கள்

இடம் அன்புள்ள ஜெ,   இடம் அற்புதமான கதை. இத்தகைய கதைகளை எழுதுவதற்கு விலங்குகளின் நடத்தைகளை கூர்ந்து கவனிப்பது மட்டுமல்ல அவற்றை மனிதர்களுடன் ஏதோ ஒருவகையில் இணைத்துச் சொல்லவேண்டியிருக்கிறது. இன்றைக்கு இணையத்தில் கொரில்லாக்கள் சிம்பன்ஸிக்கள் உராங்குட்டான்கள்...

அனலுக்குமேல், லூப் -கடிதங்கள்

லூப் அன்புள்ள ஜெ   என்னதான் சீரியசான கதைகள் வந்தாலும் லூப் போன்ற கதைகள் அளிக்கும் விடுதலையே வேறுதான். எத்தனை மனிதர்கள் ஒரு சின்ன கதைக்குள்ளே. பாம்பைக்கண்டதும் கடவுளைக் கூப்பிடும் கம்யூனிஸ்டு பெண்மணி, யதார்த்தமாக “பாம்புசாமி”...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–28

பகுதி நான்கு : அலைமீள்கை - 11 கணிகர் அத்தனை எளிதாக பேசத்தொடங்கிவிடமாட்டார் என்று நான் எண்ணினேன். நிறைய சொல்கூட்டி சுற்றி அங்கே செல்வதே அவர் வழக்கம். என் அருகே இருந்த ஸ்ரீபானுவிடம் சுபூர்ணர்...