Daily Archive: April 10, 2020

சூழ்திரு [சிறுகதை]

சிறிய குத்துப்போணி என்று தோன்றும் பித்தளைக் குவளையில்தான் அப்பா டீ குடிப்பது. அதை வங்காளி என்று ஏனோ சொன்னார்கள். வங்கம் என்று சொல்லவேண்டும் என்று வீட்டுக்கு வந்த பெரியப்பா ஒருமுறை சொன்னார். வங்கி என்றார் பெருவட்டர்.அனந்தன் அதில்தான் டீ அத்தனை சுவையாக இருக்கமுடியும் என்று நினைத்தான் அப்பா புதுப்பால் உருகி மணமெழும் டீயை பலமுறை மூக்கருகே கொண்டுவந்து, தயங்கி, இறுதியாக இயல்பாக அமையும் ஒரு கணத்தில் குவளையின் விளிம்பை வாயில் வைத்து ஒரு சொட்டு உறிஞ்சி, நாவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130411/

“விடமாட்டே?”

மணித்திரத்தாழ் படத்தின் வசனங்கள். மலையாள மீம் மேக்கர் அஜ்மல் சாபு எடிட் செய்தவை கங்க இப்ப எவிடே போகுந்நு அதுகொள்ளாம் ஞான் பறஞ்ஞில்லே அல்லிக்கு கல்யாண ஆலோசன நடக்கான் போகுந்நு எந்நு கங்க இப்ப போகண்டா ஏ? ஞான் போகண்டே போகண்ட ஞான் இந்நு ராவிலே பறஞ்ஞ்சிருந்தநாணல்லோ…    

Permanent link to this article: https://www.jeyamohan.in/130549/

கொரோனா கதைகள்- நவீன்

லூப் [சிறுகதை] அனலுக்குமேல் [சிறுகதை] பெயர்நூறான் [சிறுகதை] இடம் [சிறுகதை] சுற்றுகள் [சிறுகதை] பொலிவதும் கலைவதும் [சிறுகதை] வேரில் திகழ்வது [சிறுகதை] ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை] தங்கத்தின் மணம் [சிறுகதை] வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை] ஏதேன் [சிறுகதை] மொழி [சிறுகதை] ஆடகம் [சிறுகதை] கோட்டை [சிறுகதை] துளி [சிறுகதை] விலங்கு [சிறுகதை] வேட்டு [சிறுகதை] அங்கி [சிறுகதை] தவளையும் இளவரசனும் [சிறுகதை] பூனை [சிறுகதை] வருக்கை [சிறுகதை] “ஆனையில்லா!” [சிறுகதை] யா தேவி! [சிறுகதை] சர்வ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130618/

அங்கி, விலங்கு -கடிதங்கள்

அங்கி [சிறுகதை] அன்புள்ள ஜெ அங்கி கதையின் அந்த ஃபாதரை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். ஒரு மனிதன் இன்னொருவனுக்குப் பாவமன்னிப்பு கொடுக்கமுடியுமா? முடியும் அவன் தன்னை ஆண்டவரின் வடிவமாக நினைத்துக்கொள்ளவேண்டும். அப்படியே வாழவேண்டும். அந்த சபையில் அப்படி அமரவேண்டும் ஜெ, மலைமேல் நின்றிருக்கும் தனிமரம் கிறிஸ்துவிற்கு சரியான உதாரணம். கிறிஸ்து கல்வாரியில் உயிர்விட்டதைச் சொல்வதுபோல் இருக்கிறது. தான் எரிந்து உலகுக்கு ஒளிகாட்டியவர் கிறிஸ்துதாஸ் *** ப்ரிய ஜெமோவிற்கு, பலவகை பதார்த்தங்கள் பரிமாறப்படும் ஒரு நீண்டு கொண்டிருக்கும் விருந்தில், முதல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130398/

அனலுக்கு மேல், இடம் -கடிதங்கள்

  அனலுக்குமேல் [சிறுகதை] அன்புள்ள ஜெ   அனலுக்கு மேல் ஒரு விசித்திரமான கதை. அந்தக்கதையின் சில குறியீடுகளை கொண்டே கதையை உருவாக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது. முதல் குறியீடு இதெல்லாம் ஆதியான அனலுக்கு மேல் நடக்கிறது என்பதுதான்.   மண்ணுக்கு அடியில் இருக்கும் அனல் அது. மண்ணுக்குமேல் எழுந்து ஓர் அறிவிப்பு போலவோ பதாகை போலவோ நின்றுகொண்டிருக்கிறது. அதற்குமேல் தான் இதெல்லாம் நடக்கின்றன. தீ குளிர்ந்து உருவான ஒரு எரிமலைப்படிவில்தான் வாழ்க்கை நடக்கிறது. அந்த ஆழத்திலுள்ள தீயின் கதைதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130611/

பெயர்நூறான்,சுற்றுக்கள்- கடிதங்கள்

பெயர்நூறான் [சிறுகதை] அன்புள்ள ஜெ,   பெயர்நூறான் ஒரு அழகான கதை. நேரடியான அனுபவமே இத்தகைய கதைக்கான நுண்மையான observationஐ உருவாக்கமுடியும் என நினைக்கிறேன். என்னுடைய அனுபவமும் ஏறத்தாழ இதுதான். குழந்தை பிறக்கும்போது பயங்கரமான பதற்றம். எனக்கு கத்தார் போக டிக்கெட் போட்டிருந்தேன். அது குழந்தை பிறப்பது தள்ளி தள்ளிபோகும் என்பதனால் கன்ஃபர்ம் ஆகிவிட்டது. அப்போது சட்டென்று வலி. குழந்தை பிறந்துவிட்டது.   நான் அப்போது விமான டிக்கெட்டை பத்துநாள் தள்ளிப்போட முடியுமா என்று முயற்சி செய்துகொண்டிருந்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130559/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–27

பகுதி நான்கு : அலைமீள்கை – 10 நான் அவைக்குள் நுழையும்போது சுஃபானு பேசிக்கொண்டிருந்தார். குடித்தலைவர் இருவரும் யாதவ மைந்தர்களும் மட்டுமே அவர்முன் இருந்தனர். அறைக்குள் கடற்காற்று சுழன்றுகொண்டிருந்தது. மூத்தவர் ஃபானு கைகளை மார்பில் கட்டி அமர்ந்திருந்தார். அங்கு பேசப்படுவனவற்றை அவர் முன்னரே அறிந்திருப்பதுபோல முகம் காட்டினார். அவ்வப்போது ஏற்று தலையை அசைத்தார். நான் நுழையும் அசைவைக் கண்டு சுஃபானு திரும்பிப்பார்த்தார். நான் தலைவணங்கி பின்னிருக்கையில் அமர்ந்தேன். இருக்கையில் கால்நீட்டி சாய்ந்தபின் அப்பால் அமர்ந்திருந்த கணிகரை பார்த்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130606/