Daily Archive: April 9, 2020

அரூ அறிவியல் புனைகதை போட்டி முடிவுகள்

  அன்புள்ள ஜெமோ, அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020 அளித்த சில மகிழ்ச்சியான எண்ணங்களைத் தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். கடந்த ஆண்டின் எண்ணிக்கையான 66-ஐத் தொட வாய்ப்பில்லை என்கிற எங்களது அனுமானத்தைப் பொய்த்து, இம்முறை வந்த மொத்த கதைகள் – 98! இலக்கியச் செயல்பாட்டில் எண்ணிக்கை என்றுமே முக்கியமில்லைதான். ஆனால், நீங்கள் கடந்த முறை சொன்னது போல ‘அறிவியல் புனைவு’ என்கிற குறுகிய சட்டகத்துக்குள் இத்தனை பேர் ஆர்வமுடன் எழுதுவது வியப்பளிக்கிறது. பலரிடம் சொல்ல நல்ல கதைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130566/

ஓலைச்சுவடி இதழ் -பேட்டி

  ஓலைச்சுவடி இதழ் வழங்கும் எழுத்தாளர் ஜெயமோகன் நேர்காணல் சுனில் கிருஷ்ணன் கேள்விகள். ஓலைச்சுவடி இதழ் வழங்கும் எழுத்தாளர் ஜெயமோகன் நேர்காணல் சுனில் கிருஷ்ணன் கேள்விகள் பகுதி – 2. ஓலைச்சுவடி இதழ் வழங்கும் எழுத்தாளர் ஜெயமோகன் நேர்காணல் கி.ச. திலீபன் மற்றும் பெரு.விஷ்ணுகுமார் கேள்விகள்பகுதி – 3      

Permanent link to this article: https://www.jeyamohan.in/130602/

லூப் [சிறுகதை]

நான் ஃபோனில் “ஃபுல் லூப்பு சார்!” என்றேன் “டேய், நம்ம கிட்ட வெளையாடாதே கேட்டியா? கெளம்பிவந்தேன்னா பாரு” என்றார் ஞானம் சார். “வேணுமானா வாருங்க. வந்து நீங்களே பாருங்க… நான் என்னத்துக்கு பொய் சொல்லணும்?” என்றேன். “நீங்க ஆரு, சர்ச்சிலே பாவமன்னிப்பா குடுக்குதீக? பொய்யச் சொல்லுகதுக்கு?” ஞானம் சார் சிரித்துவிட்டார். “மக்கா. இஞ்சபாரு. என்னையப்போட்டு கொல்லுதானுக. வெள்ளைக்காரன் நேரா மெட்ராஸுக்கே விளிச்சுப்போட்டான். ஜிஎம் என்னைய தந்தைக்கு விளிச்சாரு.” “என்னன்னு விளிச்சாரு?” என்று ஆவலாக கேட்டேன். “அதை உனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130405/

விலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்

  விலங்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ   விலங்கு கதையை நான் முதலில் வாசித்தபோது அந்த பூசாரி ஒடியாக இருந்தார் என்று ஊகித்துவிட்டேன். ஆகா ஊகித்துவிட்டேன் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் மறுபடியும் கதையைப் பார்க்கையில்தான் ஒன்று தெரிந்தது. அவர் மானிடனாக இருந்து ஆடாக ஒடி செய்து திரும்பி வந்த பூசாரி அல்ல. அப்படி நான் நினைத்தது தப்பு. அவர் செங்கிடாய்க்காரன் என்ற தெய்வம்தான். செங்கிடாய்க்காரனின் காது மட்டும் அவர் மனிதனாக வந்தபின்னரும் அப்படியே இருக்கிறது. மனிதன் விலங்காக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130419/

பொலிவதும் கலைவதும்,சுற்று -கடிதங்கள்

பொலிவதும் கலைவதும் [சிறுகதை] அன்புள்ள ஜெ,   பொலிவதும் கலைவதும் பலருடைய மனதையும் நெகிழச்செய்த கதையாக இருப்பதைக் கண்டேன். என் நண்பர்களிலேயே பலருக்கு அந்தக்கதை ஒரு பெரிய அனுபவமாக இருந்தது. இத்தனைக்கும் பலருக்கும் கதை வாசிக்கும் அனுபவமே இல்லை   ஏன் அந்தக்கதை அப்படி பாதிக்கிறது என்று சிந்தனை செய்தேன். காதல் கண்டிப்பாக ஒரு விஷயம்தான். ஆனால் அது மட்டும் அல்ல. முக்கியமான விஷயம் திரும்பிச் செல்வதுதான். அந்தக்கதையின் முக்கியமான குறிப்பு அவன் மாமா வீட்டுக்கு அடிக்கடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130508/

ஆனையில்லா, துளி -கடிதங்கள்

“ஆனையில்லா!” [சிறுகதை] அன்புள்ள ஆசானுக்கு,   நலம் தானே? உங்கள் சிறுகதை அனைத்தையும் படித்து வருகிறோம். சென்ற முறை நம் நியூஹாம்ப்ஷயர்  கார் பயணத்தின் போது உங்கள் அப்பா, அம்மா, தங்கம்மா, அண்ணா, இளமைக்காலம் பற்றி நிறைய சம்பவங்களை சிரிப்புடன் பகிர்ந்து கொண்டீர்கள். வயிறு குலுங்க சிரித்தோம். இப்போது அந்த மண்ணும் மனிதரும் ஒவ்வொரு சிறுகதையாக உருவெடுக்க நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணிக்கிறோம்.     சென்ற வார இரவில், பழனி  ஆனையில்லா கதையை எங்கள் அனைவருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130528/

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–26

பகுதி நான்கு : அலைமீள்கை – 9 தந்தையே, நான் காளிந்தியன்னையின் அரண்மனையைச் சென்றடைந்தபோது அங்கே அவர் மைந்தர்கள் நால்வர் முன்னரே வந்து எனக்காகக் காத்துநின்றிருந்தனர். அவர்கள் பெரும்பாலும் துவாரகைக்கு வெளியே அவர்களின் அன்னையின் ஊரில் வளர்ந்தவர்கள். இளமையில் விழவுகள், அரசச்சடங்குகளில் மட்டுமே அவர்களை நான் பெரும்பாலும் கண்டிருக்கிறேன். அவர்கள் சற்று வளர்ந்த பின்னரே துவாரகைக்கு வந்தனர். அதன் பின்னரே அவர் மைந்தர்களில் பத்ரனும் பூர்ணநமாம்ஷுவும் சோமகனும் எனக்கு நெருக்கமானார்கள். அவர்கள் நீர்விளையாட்டை விழைபவர்கள். ஆனால் கடல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130560/