Daily Archive: April 8, 2020

மன்னிக்கவும்

அன்புள்ள நண்பர்களுக்கு,   இன்று மாலை நிகழ்வதாக இருந்த காணொளி உரையாடல் நிகழவில்லை. தொழில்நுட்பச் சிக்கல். இணையத்தில் திரள் அதிகமாகிவிட்டது என்றார்கள். என் கணிப்பொறியின் ஓசையும் சரியில்லை என்றனர். என்ன காரணம் என்று தெரியவில்லை. இத்தகைய அதிநவீன செயல்பாடுகளுக்குரிய புதிய, நவீன கணிப்பொறிகளும் கேட்புகருவிகளும் என்னிடம் இல்லை என்பதும் காரணமாக இருக்கலாம். இது எனக்கு சரிவராது. தேவையற்ற எரிச்சல்தான் மிஞ்சும்.   சிலருடைய பொழுதை சற்றுநேரம் வீணாக்க நேர்ந்தமைக்கு வருந்துகிறேன். சுவரோவியம் வரையும் கலைஞனைப் பற்றிய எளிய, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130567/

அஞ்சலி -எம்.கே.அர்ஜுனன்

  எம்.கே.அர்ஜுனன்   மலையாள இசையமைப்பாளர்களில் என் உள்ளத்திற்கு அணுக்கமானவர் எம்.கே.அர்ஜுனன். மலையாளத் திரையிசையின் மறக்கமுடியாத மெட்டுக்கள் பல மாஸ்டரால் அமைக்கப்பட்டவை. அவரைப்பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன்.   எம்.கே.அர்ஜுனன் நேற்று [6-4-2020] அன்று காலமானார். அவருக்கு அஞ்சலி     காத்திருக்கிறாள் இரவுமகள் சந்தன நதியில்… செண்பகம் பூத்த வானம் பிரம்மானந்தன் கஸ்தூரி மணம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/130543/

அனலுக்குமேல் [சிறுகதை]

[ 1 ] பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் குளிர்ந்து உறைந்து இருண்டு கிடந்த கடலுக்கு அடியில் பூமி பிளந்தது. ஒரு கண் இமை திறந்து கொண்டதுபோல. அதிலிருந்து லாவா பெருகி எழுந்தது. மாபெரும் தீக்கோபுரம் என அது எழுந்து நின்றது. அதைசூழ்ந்து கடல் கொந்தளித்துக்கொண்டே இருந்தது. நீராவி எழுந்து அதன்மேல் வெள்ளிமுடி போல நின்றிருந்தது. பின்னர் குளிர்ந்த லாவாவே அந்த பிளவை மூடியது. அந்தக் கண் மூடிக்கொண்டு துயிலில் ஆழ்ந்தது. அந்த கொப்பளித்த லாவாவின்மேல் நீராவி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130399/

துளி, மொழி- கடிதங்கள்

மொழி [சிறுகதை]   அன்புள்ள ஜெ, ‘மொழி’ சிறுகதை வாசித்தேன். “எல்லாச் சொல்லும் பொருளற்றவையே” என்று தொல்காப்பியர் மாற்றிப் பாடியிருக்கவேண்டுமா என்ன? அனந்தன் பேசுவதை முதலில் வாசித்தபோது கொச்சையான மலையாளத்தில்தான் பேசுவதாக நினைத்தேன். கொஞ்சநேரம் கழித்துத்தான் அது யாருமறியாத பாஷை என்று புரிந்தது. குமாரன் நாயர் வேறு “மலையாளம் இவ்வளவு கேவலமாவாட்டே இருக்கும்” என்கிறார். அந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் முயற்சி செய்தேன். கதவை ‘ராட்டிலு’ என்கிறான் அனந்தன். (அல்லது அது கொண்டியைக் குறிக்கும் சொல்லா?) அதேபோல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130446/

இடம்,பெயர்நூறான் –கடிதங்கள்

இடம் [சிறுகதை] ஜெ   கரடிநாயர் கதைவரிசையிலெயே ஹிலாரியஸ் ஆன கதை இதுதான். அந்தக்குரங்கு ஊரின் ஒரு பகுதியாக  ஆவதன் சித்திரம் மிக அழகானது. இந்த கதையின் ஓர் அம்சம் என்னவென்றால் பெரும்பாலான ஊர்கள் அன்னியர்களை இப்படித்தான் எதிர்கொள்கின்றன. அந்தச் சமூகத்திற்குள் நுழைவதற்கு ஒரு லைசென்ஸ் தேவையாகிறது . அது அந்த சமூகத்தில் தன் இடத்தை கண்டுபிடித்து நிறுவிக்கொள்ள வேண்டியிருக்கிறது.   இந்த கதையின் அமைப்பு குரங்கு வெர்ஸஸ் கிராமம். ஒரு சிறுகதைக்குள் கிராமமே வரவேண்டும். கிராமத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130556/

வேரில் திகழ்வது, வேட்டு -கடிதங்கள்

  வேட்டு [சிறுகதை] அன்புள்ள ஜெ,   வேட்டு கதையை வாசித்தேன். இன்றைக்கு உலகம் முழுக்க இலக்கிய எழுத்தில் ஒரு மாற்றத்தைக் காண்கிறேன். திரில்லர், டிடெக்டிவ் எழுத்துக்களின் பாணியில் எழுதப்படும் இலக்கியப்படைப்புக்கள். அவை உருவாவதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கியமானது முன்புபோல மெட்டிக்குலஸ் டீடெயில்கள் உள்ள ரியலிஸ்டிக் கதைகளை இன்றைக்கு கூர்ந்து வாசிக்க எவருக்கும் பொறுமை இல்லை என்பது. அந்தவகை எழுத்து ஒருவகை பேட்டர்னுக்குள் சிக்கிக்கொண்டிருப்பது.  இன்னொன்று இந்தவகையான கதைகளுக்கு மனித மனதுக்குள் ஆராய்ந்து போகவோ அல்லது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130527/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–25

பகுதி நான்கு : அலைமீள்கை – 8 நான் காளிந்தி அன்னையை சந்திக்கச் சென்றபோது என் நெஞ்சு ஒழிந்து கிடந்தது. ஒரு சொல் எஞ்சியிருக்கவில்லை. நீள்மூச்செறிந்தபடி, தன்னந்தனியனாக உணர்ந்தபடி நடந்தேன். கணிகர் என்னிடம் சொன்ன அனைத்தையும் மறந்துவிட்டேன். நான் உணர்ந்தது ஒன்றையே. தந்தையே, பாலைநிலங்களில் ஆழ்ந்த மண்வெடிப்புகளுக்குள் மிகமிகத் தூய்மையான நீர் தேங்கியிருக்கும். புறவுலகிலிருந்து ஒளி மட்டுமே அங்கே சென்று அதை தொடும். அத்தகைய நீர்ச்சுனை ஒன்றில் என் கைகளை கழுவப் போகிறேன். ஆனால் அது என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130554/