Daily Archive: April 7, 2020

குக்கூ- ஆளுமைகளுடன் உரையாடல்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,   அறவிதிகளின் மையத்தைவிட்டு நாம் நமது ஆரங்களைத் தளர்த்திக்கொள்கையில், நம்முடைய ஒட்டுமொத்த வாழ்வுச்சுழல்வும் நிலைகுலைந்து தடமிழப்பதை, கடந்தகால மற்றும் நிகழ்கால சமூகச்சூழல்களின் வழியாக நாம் நன்குணர்ந்திருக்கிறோம். வாழ்வில் ஒவ்வொரு முடிவை எடுக்கும்பொழுதும், நெஞ்சுக்குள் ஒரு குரல் அம்முடிவுகுறித்தான ஆயிரம் அகக்கேள்விகளை எழுப்புகிறது. அகக்கேக்விகள் அறக்கேள்விகளாக வீரியமடைகையில் நம்முள்ளில் தணிவடையாத சுயப்பதட்டம் ஒட்டிக்கொள்கிறது.   நோயச்சம் எல்லா தேசங்களையும் ஊரடங்க வைத்திருக்கும் இந்த நிகழ்கால துயர்சூழலில், இருதயந்திறந்து நாம் உரையாடிகிற அரூபத்திறவினை இணையவெளி உருவாக்கிக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130541/

குக்கூ- உரையாடல் அறிவிப்பு

குக்கூ- ஆளுமைகளுடன் உரையாடல்கள் தர்க்கவயப்பட்ட இலக்கியச்சூழலிலிருந்து தனித்துவிலகி, அழகியல் நேர்மறையோடு உள்ளடக்கப் பொருண்மையும் நிறைகலந்து வெளிப்படுபவை எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகள். இந்திய தேசத்தின் தொன்மானுட மனங்களுக்குள் உள்ளுறைகிற ஞானவிசையை, கலாச்சார மரபின் தரிசனமாகக் கண்டடைந்து எழுத்துப்படுத்தியவர். உண்மைசார்ந்த உரையாடலின்மீது தீராத நம்பிக்கையுற்றிருந்த சுந்தர ராமசாமி அவர்களின் இலக்கிய குருமரபிலிருந்து எழுந்துகிளம்பி, அறிவுண்மை சார்ந்த எல்லா தளங்களிலும் இயங்கும் சமகால இளைஞர்களோடு தொடர்ந்து உரையாடி வருபவர். இலக்கியத்தின்வழி இருதயங்களின் மென்னுணர்வில் அகமலர்தலையும் உளவெழுச்சியையும் உருவாக்கி, பின்தொடரும் மனிதர்கள் தங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130539/

பெயர்நூறான் [சிறுகதை]

ரவி ஆஸ்பத்திரியைச் சென்றடைந்தபோது ஆனந்தியின் அம்மா எமர்ஜென்சி வார்டுக்கு வெளியே அமர்ந்திருந்தார். எதிரிலும் பெரிய கட்டிடம் இருந்தமையால் அங்கே வெளிச்சம் குறைவாக இருந்தது. அவன் மூச்சுவாங்க படிகளில் ஏறிவந்து நின்றபோது அவர் எழுந்து “பாப்பாவை உள்ள கொண்டுபோயிருக்கு” என்றார். “எப்டி இருக்கா?” “வலி தொடங்கியிருச்சு… டெஸ்ட்டெல்லாம் பண்ணணும்னு கொண்டு போயிருக்கு.” அவன் எந்த டாக்டரைப் பார்க்கவேண்டும் என அலைக்கழிந்தான். மூன்று டாக்டர்களின் போர்டுகளைப் பார்த்தான். எல்லாமே பெண்கள். பின்னர்தான் ஆனந்தியின் அம்மாவிடமே கேட்கலாம் என்று தோன்றியது. “எந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130403/

இன்றைய மலர்

  வான் அலை நேற்று காலை பத்து மணி அளவில் சுகாதாரப் பணியாளர் இருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். எங்கள் வீடு வெளியே பூட்டியிருந்தமையால் சென்றுவிட்டு மீண்டும் வந்தார்கள். இரண்டு பெண்கள். முகக்கவசமும் கைக்கவசமும் அணிந்தவர்கள். ஒரு கணிப்பொறிப் பட்டியலை வைத்துக்கொண்டு பெயர், வயது, உடல்நிலை ஆகியவற்றை சரிபார்த்தனர். கோவிட் வைரஸ் எப்படி வரும் என்பதை ஓரிரு வரிகளில் சொல்லி, வெளியே போகவேண்டாம், கேட் உட்பட எதைத்தொட்டாலும் கை கழுவவேண்டும் என்பது போன்ற செய்திகளையும் சொல்லிவிட்டுச் சென்றார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130529/

வாப்பாவின் பீயாத்து

  ஆமின தாத்தயிடெ பொன்னுமோளாணு நாட்டிலே சேலுள்ள பெண்ணாணு பாப்படேபுன்னார மோளாணு பாப்படே கொச்சு பீயாத்தூ கரிமீன் பிடய்க்கண கண்ணாணு கவித துடிக்கண கண்ணாணு கரளிலு முந்திரி சாறு நிறைக்கண அழகின்றே பொன்னொளி முத்தாணு   ஆமினா பாட்டியின் பொன்னான மகள் அல்லவா ஊரில் அழகான பெண்அல்லவா வாப்பாவின் செல்ல மகள்அல்லவா வாப்பாவின் சின்ன  பீயாத்து   கரிமீன் துள்ளும் கண்அல்லவா கவிதை துடிக்கும் கண்அல்லவா நெஞ்சில் முந்திரிச் சாறு நிறைக்கும் அழகின் பொன்னொளி முத்தல்லவா   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130535/

சுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்

    பொலிவதும் கலைவதும் [சிறுகதை] அன்புள்ள ஜெ   பொலிவதும் கலைவதும் கதை மனதை ஆழமான ஓர் உணர்வை நோக்கிச் செலுத்தியது. காதல் என்ற உணர்வைப்பற்றி நிறையவே எழுதியிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அது பல்ப் ஃபிக்‌ஷனுக்குரிய மெட்டீரியலாக ஆகிவிட்டது. ஆகவே இலக்கியத்தில் அதைப்பற்றி எழுதுவது இல்லாமலாகிவிட்டது. ஆனால் இலக்கியத்தில் என்றென்றும் காதல் பேசப்படும். காமத்தைவிடவும்கூட பேசப்படும்.   ஏனென்றால் சாவு போல காதலும் ஒரு தீர்க்கமுடியாத மானுடப்பிரச்சினையை பேசுகிறது. ஒரு ஆணும்பெண்ணும் எப்படி கண்டடைகிறார்கள் எப்படி பிரிகிறார்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130506/

ஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை] அன்புள்ள ஜெ   ஆயிரம் ஊற்றுக்கள் கதையின் கதைநாயகி உண்மையான வரலாற்றுக்கதாபாத்திரம் என அறிந்தேன். அந்தக்கதையை படிக்கையில் எனக்கு இந்திராகாந்தி நினைவுக்கு வந்தார். அவருடையது ஒரு சக்கரவர்த்தியின் வாழ்க்கை. ஆனால் மிகமிக துயரமானதும்கூட. அவர் தன் மகன் சஞ்சய் காந்தியின் இழப்பை எப்படி பார்த்திருபார் என்றும் எவ்வளவு இன்செக்யூர் ஆக உணர்ந்திருப்பார் என்றும் எண்ணமுடிகிறது.   பொதுவாக வரலாற்றில் இருக்கும் மனிதர்கள் மிகப்பெரிய எடையை தாங்குபவர்கள். அவர்களால் சராசரி மனிதர்களாக வாழ முடிவதில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130476/

மொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]   அன்புள்ள ஜெ   வானில் அலைகின்றன குரல்கள் ஒரு பெருமூச்சை அளித்த கதை. அதற்கு ஒரு காரணம் உண்டு. மறைந்த என் தந்தை திரு வீரராகவன் அவர்கள் ஆடிட்டராக இருந்தவர். ஒரே ஒரு பழைய சினிமாவில் ஒரே ஒரு காட்சியில் அவர் இருக்கிறார். மேனேஜர் உள்ளே இருக்கார் என்று நாகேஷ் சொல்வார். கதவைத்திறந்து அங்கே என்ன சத்தம் என்று இவர் கேட்பார். மௌலி இயக்கிய பழைய படம். அவருடைய ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130454/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24

பகுதி நான்கு : அலைமீள்கை – 7 நான் அவைக்குள் நுழைந்தபோது மூத்தவரின் குரல் உரத்து ஒலித்துக்கொண்டிருந்தது. வழக்கமாக அவ்வாறு உரத்துப் பேசுபவர் அல்ல அவர். இளமை நாளிலேயே துவாரகையில் எப்போதுமே குரல் தணிந்தவராகவும் விழி தழைந்தவராகவுமே அவர் இருந்திருக்கிறார். அவரே யாதவ இளவரசர்களில் மூத்தவர். ஆனால் குடிநிகழ்வுகளன்றி பிறிதெங்கும் அவரை இளவரசராக அமரச்செய்ததில்லை. ஷத்ரிய அவைகளில் அவர் பெரும்பாலும் அழைக்கப்பட்டதில்லை. வீரரல்ல என்று இளமையிலேயே அவர் அடையாளம் காணப்பட்டுவிட்டார். நூல் நவில்தலும் அவருக்கு இயலவில்லை. எங்கோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130532/