தினசரி தொகுப்புகள்: April 7, 2020

குக்கூ- ஆளுமைகளுடன் உரையாடல்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,   அறவிதிகளின் மையத்தைவிட்டு நாம் நமது ஆரங்களைத் தளர்த்திக்கொள்கையில், நம்முடைய ஒட்டுமொத்த வாழ்வுச்சுழல்வும் நிலைகுலைந்து தடமிழப்பதை, கடந்தகால மற்றும் நிகழ்கால சமூகச்சூழல்களின் வழியாக நாம் நன்குணர்ந்திருக்கிறோம். வாழ்வில் ஒவ்வொரு முடிவை எடுக்கும்பொழுதும்,...

குக்கூ- உரையாடல் அறிவிப்பு

குக்கூ- ஆளுமைகளுடன் உரையாடல்கள் தர்க்கவயப்பட்ட இலக்கியச்சூழலிலிருந்து தனித்துவிலகி, அழகியல் நேர்மறையோடு உள்ளடக்கப் பொருண்மையும் நிறைகலந்து வெளிப்படுபவை எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகள். இந்திய தேசத்தின் தொன்மானுட மனங்களுக்குள் உள்ளுறைகிற ஞானவிசையை, கலாச்சார மரபின் தரிசனமாகக் கண்டடைந்து...

பெயர்நூறான் [சிறுகதை]

ரவி ஆஸ்பத்திரியைச் சென்றடைந்தபோது ஆனந்தியின் அம்மா எமர்ஜென்சி வார்டுக்கு வெளியே அமர்ந்திருந்தார். எதிரிலும் பெரிய கட்டிடம் இருந்தமையால் அங்கே வெளிச்சம் குறைவாக இருந்தது. அவன் மூச்சுவாங்க படிகளில் ஏறிவந்து நின்றபோது அவர் எழுந்து “பாப்பாவை...

இன்றைய மலர்

  வான் அலை நேற்று காலை பத்து மணி அளவில் சுகாதாரப் பணியாளர் இருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். எங்கள் வீடு வெளியே பூட்டியிருந்தமையால் சென்றுவிட்டு மீண்டும் வந்தார்கள். இரண்டு பெண்கள். முகக்கவசமும் கைக்கவசமும் அணிந்தவர்கள்....

வாப்பாவின் பீயாத்து

https://youtu.be/Ab16j3b4P2I   ஆமின தாத்தயிடெ பொன்னுமோளாணு நாட்டிலே சேலுள்ள பெண்ணாணு பாப்படேபுன்னார மோளாணு பாப்படே கொச்சு பீயாத்தூ கரிமீன் பிடய்க்கண கண்ணாணு கவித துடிக்கண கண்ணாணு கரளிலு முந்திரி சாறு நிறைக்கண அழகின்றே பொன்னொளி முத்தாணு   ஆமினா பாட்டியின் பொன்னான மகள் அல்லவா ஊரில் அழகான பெண்அல்லவா வாப்பாவின் செல்ல...

சுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்

    பொலிவதும் கலைவதும் அன்புள்ள ஜெ   பொலிவதும் கலைவதும் கதை மனதை ஆழமான ஓர் உணர்வை நோக்கிச் செலுத்தியது. காதல் என்ற உணர்வைப்பற்றி நிறையவே எழுதியிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அது பல்ப் ஃபிக்‌ஷனுக்குரிய மெட்டீரியலாக ஆகிவிட்டது. ஆகவே...

ஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்

ஆயிரம் ஊற்றுக்கள் அன்புள்ள ஜெ   ஆயிரம் ஊற்றுக்கள் கதையின் கதைநாயகி உண்மையான வரலாற்றுக்கதாபாத்திரம் என அறிந்தேன். அந்தக்கதையை படிக்கையில் எனக்கு இந்திராகாந்தி நினைவுக்கு வந்தார். அவருடையது ஒரு சக்கரவர்த்தியின் வாழ்க்கை. ஆனால் மிகமிக துயரமானதும்கூட....

மொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்

வானில் அலைகின்றன குரல்கள்   அன்புள்ள ஜெ   வானில் அலைகின்றன குரல்கள் ஒரு பெருமூச்சை அளித்த கதை. அதற்கு ஒரு காரணம் உண்டு. மறைந்த என் தந்தை திரு வீரராகவன் அவர்கள் ஆடிட்டராக இருந்தவர். ஒரே...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–24

பகுதி நான்கு : அலைமீள்கை - 7 நான் அவைக்குள் நுழைந்தபோது மூத்தவரின் குரல் உரத்து ஒலித்துக்கொண்டிருந்தது. வழக்கமாக அவ்வாறு உரத்துப் பேசுபவர் அல்ல அவர். இளமை நாளிலேயே துவாரகையில் எப்போதுமே குரல் தணிந்தவராகவும்...