Daily Archive: April 6, 2020

இடம் [சிறுகதை]

[ 1 ] நள்ளிரவில்தான் சம்பவம் தொடங்கியது, மங்கலம்வீட்டின் ஓடுகள் படபடவென்று சரியத்தொடங்கின. மூலயம்விட்டு தேவகி அம்மச்சி “கேசவா, ராமா, ஆருடே அது?” என்று கூச்சலிட்டாள். “கெளவிக்கு என்ன தீனம்? எளவு சாகவும் மாட்டேங்கே” என்றார் சாயங்காலம் கதளிப்பழம் இட்ட பட்டைச்சாராயம் அருந்திய கேசவன் நாயர். அவர் தம்பி ராமன் நாயர் டார்ச் விளக்குடன் சென்று கிழவியை பார்த்தான். கிழவி கையில் கழியுடன் எழுந்து நின்றிருந்தது. “எந்தா அம்மே? எந்தா பிரஸ்னம்? கெடந்து ஒறங்கு” என்றார் ராமன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130326/

வான் அலை

நாற்புறமும் திறத்தல் இன்று காலையும்  ஆறுமணிக்கே எழுந்து மொட்டைமாடிக்கு நடைசென்றேன். சூரியன் தென்னைமரஙக்ளுக்கு அப்பால் எழுவதை பார்த்துக்கொண்டு நின்றேன். ஒவ்வொருநாளும் ஒரு கொடை என்று சொல்லலாம். ஆனால் அதை அணுக்கமாக உணர இப்படி நோயின், இறப்பின், நிலையில்லாமையின் நிழலில் நின்றாகவேண்டியிருக்கிறது. கதிரொளி ஒவ்வொரு நாளும் ஓர் ஓவியம். முடிவேயற்ற ஓவியநிரை மானுடர் நாம் பறவைகளை விலங்குகளை இத்தனை தூரம் துன்புறுத்தியிருக்கிறோமா என்ன? இந்த திடீர் விடுதலையை அவை கொண்டாடுகின்றன. பல நண்பர்கள் வீட்டுக்கு அருகே யானைகளை, காட்டுவிலங்குகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130503/

வேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்

பொலிவதும் கலைவதும் [சிறுகதை] அன்புள்ள ஜெ   பொலிவதும் கலைவதும் கதையை ஆழ்ந்த மனநிலையுடன் வாசித்தேன். ஏனென்றால் என்னுடைய வாழ்க்கையை அது காட்டியது. இன்றைக்கு முப்பது வயதானவர்களில் ஒருசாராருக்கு  அந்த அனுபவம் இருக்கும். மீண்டும் சந்திப்பது மிகமிக துன்பமான ஒன்று. ஆனால் அதை தவிர்க்கமுடிவதும் இல்லை. ஏனென்றால் அதை நாடியே செல்கிறோம். துருப்பிடித்த கத்தியால் கழுத்தை அறுத்துக்கொள்வது போன்ற அனுபவம் அது. ஆனால் அது ஒரு இன்பமாக நினைவில் மாறிவிடுகிறது. அந்த இன்பத்துக்காக அந்த தருணத்தின் துன்பத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130505/

ஆனையில்லா, அங்கி -கடிதங்கள்

“ஆனையில்லா!” [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் ..நீண்ட நாள்களுக்கு பின் கடிதம் எழுதுகிறேன் .. பல பதிவுகளை படித்தவுடன்  ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று உந்துதல் வந்தாலும், கடிதம் எழுதும் நேரத்தில் மேலும் சில புத்தக பக்கங்கள் அல்லது கட்டுரைகள் படிக்கலாமே என்று வாசிப்பு பக்கம் தான் மனம் எப்போதும் செல்லுகிறது .. புனைவு கொண்ட்டாட்டம் சிறுகதைகளை ஒவ்வொன்றாக வாசித்து வருகிறேன். ..work from home போட்டதால் அலுவலகம் சென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130364/

தங்கத்தின் மணம், துளி- கடிதங்கள்

தங்கத்தின் மணம் [சிறுகதை] அன்புள்ள ஜெ..   தங்கத்தின் மணம் கதையைப் படித்தபோது , யோக முழுமையை அடைந்து நிறை வாழ்வை அடைய இருக்கும் கடைசி கணத்தில் , தவத்தை இழந்து மலத்தை தேட ஆரம்பிக்கும் நாகம் என்ற படிமம் துணுக்குறலை அளித்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து,மீண்டு தொடர்ந்து படிக்க வெகு நேரம் ஆயிற்று   துரியோதனனின் இறுதி தவத்தை கலைத்து , உன் இறுதி யோகமும் முழுமை அடையாது என்ற சாபம் பெறும் மகாபாரத கிருஷ்ணன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130475/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–23

பகுதி நான்கு : அலைமீள்கை – 6 தந்தையே, விருந்து முடிந்து வெளிவந்த கணம் அனைத்தும் ஒரு இளிவரல் நாடகமென எனக்குத் தோன்றியது. நான் அந்நிகழ்வை ஒரு ஏமாற்றுவித்தை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். கணிகரை நான் முன்னரே செவிச்செய்தியென அறிந்திருந்தேன். அஸ்தினபுரியில் சகுனியின் அணுக்கராக இருந்தவர். அங்கு அனைவராலும் வெறுக்கப்பட்டவர். தீங்கே உருவானவர் என்று அவரை சூதர்கள் பாடி கேட்டிருக்கிறேன். ஆயினும் அத்தனை தொலைவு கடந்து அவர் வந்தது வெறுமனே அடைக்கலம் தேடித்தான் என்று அப்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130504/