Daily Archive: April 5, 2020

சுற்றுகள் [சிறுகதை]

ஒருகணம் கிருஷ்ண நாயக் உடல் அதிர்ந்தான். பற்கள் ஒன்றோடொன்று உரசிக்கொள்ள, உள்ளங்கால் கூசிச்சுருங்க, சிறிய வலிப்பு ஒன்று ஏற்பட்டது. இதயம் தாளமுடியாத குளிருடன் நின்று பின் வேகமாகத் துடித்தது. நாகவேணி “என்ன?” என்றாள். அவளுடைய கழுத்துத்தசைகள் இழுபட்டிருந்தன. மெல்ல தளர்ந்து மூச்சுவாங்க “நான்..” என்று அவன் விக்கினான். “ம்ம்” என்று அவள் சொல்லி முகம் சுளித்தாள். ஸ்க்ரூ டிரைவரை எடுத்துக்கொண்டு திரும்பி நடந்தாள். கிருஷ்ண நாயக் அவள் செல்வதை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அவன் எழுந்தபோது கால்கள் வலுவற்றவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130378/

வேரில்திகழ்வது, துளி -கடிதங்கள்

  வேரில் திகழ்வது [சிறுகதை] அன்புள்ள ஜெ   வேரில்திகழ்வது கதையை ஒரு சினிமாவுக்காக நாம் யோசித்திருக்கிறோம். ஆறாண்டுகளுக்கு முன்பு. நாம் தொடர்பே இல்லை. நான் முயற்சிசெய்துகொண்டுதான் இருக்கிறேன்   இப்போது அதை சிறுகதையாக வாசிக்கையில் இன்னொரு டைமன்ஷன் வருகிறது. அதிலுள்ள கம்பாஷன் என்ற அம்சம். பரிணாமத்தில் கம்பாஷனுக்கு எந்த இடமும் இல்லை என்று குமாரன் மாஸ்டர் சொல்கிறார் [கல்பற்றா நாராயணன்தானே?] ஆனால் அது எப்படியோ உருவாகிவந்துவிட்டது. அதுதான் கதையின் ஆதாரம். அது விலங்குகள் மனிதர்கள் அனைவரையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130490/

கோட்டை ,விலங்கு- கடிதங்கள்

  கோட்டை [சிறுகதை] அன்புள்ள ஜெ,   கோட்டை சிறுகதையில் முதன்மையாக சொல்லப்படுவது என்ன என்று நான் யோசித்தேன். அணைஞ்சியின் பேச்சில்தான் குறிப்புகள் இருக்கவெண்டும் என்று பட்டது. அணஞ்சி கொக்கின் அலகு அதை அழைத்துச்செல்வதுபோல ஞானமார்க்கத்துக்கு அழைத்துச்செல்வது குறி என்கிறாள். அதை அவள் ஒரு தீய விஷயம் என்று சொல்லவில்லை. அதை அவள் ஒரு பிரைமரி ஃபோர்ஸ் என்றுதான் சொல்கிறாள்   ஆனால் ஏன் அதை அத்தனை எதிர்மறையாக அணுகுகிறார்கள்? அந்த ஆற்றலை வெறும் வன்முறையாக கையாள்வதைத்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130432/

எண்ண எண்ணக்குறைவது, வருக்கை -கடிதங்கள்

வருக்கை [சிறுகதை] அன்புள்ள ஜெ   வருக்கை கதையை இந்த வரிசைக் கதைகளில் குறைவாகவே எழுதியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். நான் கண்டவரை ஒரு சின்ன விஷயம் அதில் உள்ளது. அதவாது பெண்களின் மனம். பெண்கள் ஏன் கள்ளன்களால் கவரப்படுகிறார்கள்? அது ஒரு அடிப்படையான  உயிரின் இயல்புதானா? ஏனென்றால் இப்படி பெண்களைக் கவர்பவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் எவருமே பெரிய உடல்வலிமை உடையவர்கள் அல்ல. அவர்கள் மூளைக்கூர்மைகொண்டவர்கள். நகைச்சுவையாக அதை வெளிப்படுத்துபவர்கள். நன்றாகப் பேசுபவர்கள்   பேசிப்பேசியே ஒருவன் தன்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130436/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–22

பகுதி நான்கு : அலைமீள்கை – 5 தந்தையே, கணிகர் மிகத் தாழ்ந்த குரலில் பேசினார். பேசும்போது விழிகள் அச்சொற்களுக்கு தொடர்பே அற்றவைபோல மின்னிக்கொண்டிருக்கும். அவர் நகையாட்டு உரைப்பதில்லை. ஆனால் நகையாடுவதுபோலத் தோன்றும். ஏனென்றால் அவர் விழிகளில் ஒரு சிறு புன்னகைபோல் ஓர் ஒளி இருக்கும். அவர் பேசுவதை நாம் செவிகொடுக்காமல் இருக்க முடியாது. ஒவ்வொரு சொல்லையும் உளம்பதிக்காமல் அகலவே இயலாது. அது ஏன் என்று அன்றே எண்ணிக்கொண்டேன், இன்றும் எண்ணுகிறேன். அவர் முற்றிலும் புதியவர், அவைக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130485/