Daily Archive: April 4, 2020

பொலிவதும் கலைவதும் [சிறுகதை]

களமெழுத்து பாட்டு திங்கள்கிழமை என்று அப்புமாமா கடிதத்தில் எழுதியிருந்தார். ஆனால் அது நினைவில் பதியவில்லை.நான் அங்கே போகப்போவதில்லை என்பதனால் வழக்கமான அன்புச் சொற்களை மட்டும்தான் படித்தேன். அம்மா “ஒருதடவை போய் பாத்துட்டு வாடா. மாமியும் உன்னை திரும்பத் திரும்ப கேட்டா” என்றாள். “இருக்கிறதே எட்டுநாள்… அதிலே சொந்தக்காரங்க வீட்டுக்கெல்லாம் போக ஆரம்பிச்சா அப்றம் அவ்ளவுதான்…” என்றேன். “எல்லா வீட்டுக்குமா போகச்சொன்னேன். உன்னோட தாய்மாமா.” “அதுக்கென்ன?” “தாய்மாமான்னா தந்தையோட எடம்.” நான் ஒன்றும் சொல்லவில்லை. சொந்தம் பாசம் போன்றவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130371/

ஆயிரம் ஊற்றுக்கள், தங்கத்தின் மணம் -கடிதங்கள்

ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை] அன்புள்ள ஜெ,   ஆயிரம் ஊற்றுக்கள் கதையை வாசித்தபிறகு விக்கியில் போய் உமையம்மை ராணியின் கதையை வாசித்து தெரிந்துகொண்டேன். மனம் பாரமாகவே ஆகிவிட்டது. இந்தச் சம்பவம் பெரும்பாலும் நடந்தது. இதை ஒரு தொன்மம் என்று சிலர் சொல்கிறார்கள். ஏனென்றால் இக்காலத்தைய திருவிதாங்கூர் வரலாறு பெரும்பாலும் எழுதப்படவில்லை. ஆனால் இந்த களிப்பான்குளம் இன்றும் உள்ளது. ஓர் ஊராக இருக்கிறது.   மகாகவி உள்ளூர் பரமேஸ்வர அய்யர் இந்த சம்பவத்தையும் உமையம்மை ராணியின் ஆளுமையையும் வைத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130474/

மொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை] அன்புள்ள ஜெ   வானில் அலையும் குரல்கள் தொழில்நுட்பம் சார்ந்த ஓர் உலகத்தை அறிமுகம் செய்கிறது. கதையை தொடக்கத்திலேயே அந்த மனம்பிறழ்ந்த மனிதரிலிருந்து தொடங்கியதனால்தான் கதைக்குள் செல்லமுடிகிறது. ஒரு உயர்தொழில்நுட்ப உலகில் மனம்பிறழ்ந்த மனிதர் என்பதே ஒரு விசித்திரமான கதைதான்   தோட்டானின் உலகில் என்ன நிகழ்கிறது என்று கதையிலே சொல்ல்ப்பபடவே இல்லை. அது முழுக்கமுழுக்க வாசகனின் ஊகத்துக்கே விடப்படுகிறது. அவர் ஆரம்பத்தில் தேடுவது என்ன? அவருடைய நரம்புகள் அறுந்து சிக்கலாகி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130453/

ஆடகம், தவளையும் இளவரசனும் -கடிதங்கள்

ஆடகம் [சிறுகதை] சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கண்ட பித்தளை சிற்பம் இது..கண்டவுடன் மிகுந்த மனஎழுச்சி..உடனே வாங்கிவிட்டேன்..கடந்த வருடத்தின் மன உளைச்சலில் இருந்து மனதை திசை திருப்ப வீட்டை அழகு படுத்தும் பணியில் இறங்கினேன்.. ரதியை நோக்கி மனதை திருப்பும் முயற்சி தான்..ஆயினும் முன்பு போல காண்பவை எல்லாவற்றுக்கும் கண்கள் விரிவதில்லை..இதை கண்டவுடன் உங்கள் அரதி கட்டுரை நினைவுக்கு வந்தது..சிலருக்கு ஆஞ்செயநேயர் ,பிள்ளையார் போல எனக்கு இது என்று தோன்றியது.     பாம்பு எனக்கு உயிர் ஆற்றலின் சின்னம்…வேறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130439/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–21

பகுதி நான்கு : அலைமீள்கை – 4 அவைக்கூடல் முறையாக முடிந்ததும் ஒவ்வொருவரும் இயல்பானார்கள். எல்லாம் நிறைவாகவே நடந்துவிட்டது என்னும் எண்ணம் மூத்தவர் ஃபானுவுக்கு உருவானதை உணரமுடிந்தது. ஒவ்வொருவரும் அருகிருந்தவர்களிடம் எளிமையாக உரையாடலாயினர். அரங்கே வெற்றுப்பேச்சுகளின் கூட்டு முழக்கமாக ஆகியது. மூத்தவர் சுஃபானு என்னை நோக்கி “இன்று கடலாடச் சென்றிருந்தீர்கள் அல்லவா?” என்றார். அதை ஏன் அவர் கேட்கிறார் என்பதை உடனே நான் புரிந்துகொண்டேன். அங்கிருந்த அனைவருக்கும் அவர்கள் எங்கு செல்கிறார்கள் எவரை சந்திக்கிறார்கள் என்பது அவருக்குத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130480/