Daily Archive: April 3, 2020

வேரில் திகழ்வது [சிறுகதை]

பறம்பிக்குளம் காட்டுக்குள் அமைந்த காட்டுக்குடிலுக்கு முன்னால் மூங்கில் நாற்காலிகளில் அமர்ந்திருந்தோம். தாழ்வான மூங்கில் டீபாயில் ஜனிவாக்கர் பிளாக் லேபில், கொத்தி வறுத்த கோழிக்கறி, நிலக்கடலை,முந்திரிப்பருப்பு. நான் நிலக்கடலையை அள்ளித்தின்றபோது ஔசேப்பச்சன் “டேய் அந்த கப்பலண்டியை எடுத்து அப்பால் வை, குடிப்பவனுடன் குடிக்காதவன் வந்துசேர்ந்தால் இதுதான் வினையே. தொடுதீனிகளையெல்லாம் காலிசெய்துவிடுவார்கள்” என்றார். மெய்யாகவே ஸ்ரீதரன் அவற்றை எடுத்து அப்பால் வைத்தான். அவர்களின் பதற்றத்தைக் காண எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஏதோ பதுங்குகுழிகளில் போர்ச்சூழலில் ஒளிந்திருப்பதுபோல சாராயமும் தீனியும் போதிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130345/

மொழி, வானில் அலைகின்றன குரல்கள்- கடிதங்கள்

    மொழி [சிறுகதை] வணக்கம்,   உங்கள் அறம் தொகுதியை என் தந்தை அறிமுகம் செய்தார். அதன் பிறகு உங்கள் கதைகளையும் இணையதளத்தையும் தொடர்ந்து படித்து வருகிறேன்.   மொழி சிறுகதையே என்னை உங்களுக்கு கடிதம் எழுத தூண்டியது. மிகவும் அழகான கதை. பலமுறை படித்தும் சலிக்கவில்லை.   அதில் வரும் கதாபாத்திரங்களும், அவர்கள் அந்த சூழ்நிலையில் என்ன செய்கிறார்கள் என்பதும் (ஒரு அழகான டோமினோ விழுவது போல – ஒன்று தொட்டு இன்னொன்று) சங்கிலி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130448/

தங்கத்தின் மணம், ஏதேன் – கடிதங்கள்

தங்கத்தின் மணம் [சிறுகதை] அன்புள்ள ஜெ   தங்கத்தின் மணம் போன்ற ஒரு கதையை பொதுவாக வாசகர்கள் எவரும் வரையறுத்துச் சொல்லி வாசித்துவிட முடியாது. ஏனென்றால் அதிலுள்ளவை கவித்துவமான படிமங்கள் மட்டும்தான். அவற்றுக்கு இந்தியமரபில் என்ன அர்த்தம் உள்ளது என்று பார்க்கவேண்டும். அதனைக்கொண்டு பின்னிப்பின்னி இந்தக்கதை எதை உருவாக்குகிறது என்று பார்க்கவேண்டும்.   எதை வாசித்தாலும் அது subjectiveஆனதுதான். பொதுவான ஒரு அர்த்தம் எதையும் சொல்லவே முடியாது. ஏனென்றால் இது meaning தளத்தில் செயல்படும் கதை அல்ல. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130473/

ஆடகம், ஆனையில்லா- கடிதங்கள்

ஆடகம் [சிறுகதை] தினமும் இரவு 12 கழிந்து உங்கள் தளத்தில் அடுத்து என்ன என்று பார்த்த பின் உறங்குவது  வழக்கமாகிவருகிறது. நேற்று திறந்த உடனே இருந்த பாம்பு படம் என்னை ஆச்சிரயத்தில் ஆழ்த்தியது ஏனென்றால் அன்று முழுவதும் நான் பாம்பை பற்றி நினைத்துக்கொண்டும் படித்துக்கொண்டும் இருந்தேன். இரவே படித்தேன் பயங்கரமான ஊக்கமும் புத்துணர்ச்சியையும்  உணர்தேன்.   காலையில் மீண்டும் படித்தேன் அந்த ராஜ நாகம் என்னையும் கொத்தியது “வாழ்கையை ஆனந்தமா வாழுடா” என்று அதட்டியும் அன்போடும் சொன்னது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130429/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20

பகுதி நான்கு : அலைமீள்கை – 3 தந்தையே, நான் திரும்பி துவாரகைக்கு வந்தபோது முற்றிலும் மாறிவிட்டிருந்தேன். ஆனால் அதை நான் மட்டுமே அறிந்திருந்தேன். பெருவாயிலுக்குள் நுழைகையிலேயே நகரின் உளநிலை மாறிவிட்டிருப்பதை உணர்ந்தேன். ஒருநாள் மட்டுமே ஆகியிருந்தது. சொல்லப்போனால் ஓர் இரவு. அதற்குள் அனைவருக்கும் அனைத்தும் தெரிந்துவிட்டிருந்தது. ஏனென்றால் அனைவரும் அரண்மனையையே கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தனர். அத்தனை கூர்ந்து நோக்குபவர்களிடமிருந்து எவரும் எதையும் மறைத்துவிடமுடியாது. ஏன் அந்த கூர்நோக்கு? ஏனென்றால் அவர்கள் எதிர்நோக்கியிருக்க வேறேதும் எஞ்சியிருக்கவில்லை. மானுடவாழ்க்கை என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130465/