Daily Archive: April 1, 2020

தங்கத்தின் மணம் [சிறுகதை]

[ 1 ] “நாகமணீண்ணா?” என்றான் அனந்தன் குரல்தாழ்த்தி “நாகமணி அக்காவா?” “இல்ல, இது உள்ளதாட்டே நாகமணியாக்கும்” என்றான் தவளைக்கண்ணன். “அத வச்சு என்ன செய்யலாம்?”என்றான் அனந்தன். தவளைக்கண்ணன் “நான் காட்டுதேன்… பிள்ளை பாக்கணும். பாத்துச் சொல்லணும் என்ன செய்யுகதுண்ணு” என்றான். அனந்தனுக்கு படபடப்பாக இருந்தது. நாகமணி. நல்லபெயர்.கல்யாணம்கூட செய்து கொள்ளலாம் ”பொம்புளயா?” ”என்னது?” ”நாகமணி.” “பிள்ளே, இது ஒரு சின்ன மணியாக்கும்… வைரம்… வைரூடியம்.” ”வைரூடியம்னா?” ”மகரதம்” என்றான் தவளைக்கண்ணன். அனந்தன் ”செரி” என்றான் குழப்பமாக. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130334/

வீடுறைவு

தனிமைநாட்கள், தன்னெறிகள். ஒவ்வொன்றையும் மிகமிகச் சிறிதாக்கிக்கொள்ளவும் மிகமிகப் பெரிதாக்கிக்கொள்ளவும் முடியும்போலும். இந்த வீடு அத்தனை பெரிதாகிவிட்டிருக்கிறது. இதற்குள் இத்தனை இடம், இத்தனை வெவ்வேறு தட்பவெப்பநிலைகள், அதற்கேற்ற உள\நிலைகள். நான் அவ்வப்போது எண்ணியதுண்டு. நான் உலகநாடுகள் பலவற்றுக்குச் சென்றவன். ஜப்பான் முதல் கனடாவரை என்று பார்த்தால் உலக உருண்டையைச் சுற்றிவந்துவிட்டேன் என்று சொல்லலாம். ஆனால் என் அப்பா வெறும் ஐந்து கிமீ வட்டத்திற்குள் வாழ்ந்தவர். அவருடைய நண்பர்கள் அனைவருமே அவருடன் ஒன்றாம் வகுப்பு முதல்படித்தவர்கள். இறப்புவரை நாளும் சந்தித்தவர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130450/

வேட்டு, துளி -கடிதங்கள்

துளி [சிறுகதை] வணக்கம் ஜெ   மற்றுமொரு யானை கதை. உலக இலக்கியத்தில் யானைகளை அல்லது ஏதோ ஒரு விலங்கினைப் பற்றி அதிகம் எழுதியது நீங்களாகத்தான் இருக்கவேண்டும்.   கொச்சுகேசவன் வரும் முன்னே அதன் வாடையை வைத்து கோபாலகிருஷ்ணன் இருப்புக்கொள்ளாமலாகிறது. யானை சண்டையில் தொடங்கி மனிதர்கள் மதச்சண்டை. கருப்பன் சொட்டிய அருளால் இரண்டும் முடிகிறது. ஒரு ஸ்நாப்ஷாட் சிறுகதை.   யானைகளில் பழக்கங்கள் சிறப்பாக வெளிகொண்டுவரபட்டுள்ளன. முன்பு அடிப்பட்ட காலை தூக்கி நிற்பது, வாய்க்குள் கற்களை போட்டுகொள்வதென. இந்த அலாதியான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130370/

யாதேவி , விலங்கு -கடிதங்கள்

யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை] சக்தி ரூபேண! [சிறுகதை] அன்புள்ள ஜெ   யாதேவி, சர்வபூதேஷு, சக்திரூபேண ஆகிய மூன்று கதைகளையும் இப்போதுதான் படித்தேன். இனி அவற்றை ஒரே கதையாக குறுநாவல்போலத்தான் மக்கள் படிப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் அப்படிப்படிப்பவர்கள் ஒரு அனுபவத்தை இழந்துதான் விடுவார்கள். தனித்தனிக்கதைகளாக அவை சம்பந்தமே இல்லாத தரிசனங்களை தருபவையாக இருக்கின்றன. நான் அவற்றை மானசீகமாக அப்படி பிரித்துப்பார்த்துக்கொண்டுதான் வாசித்தேன்.   எஸ்.ராஜா அ     அன்புள்ள ஜெ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130402/

ஆடகம், கோட்டை -கடிதங்கள்

  கோட்டை [சிறுகதை] அன்புமிகு திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,   இப்போதுதான் ‘கோட்டை” சிறு கதையைப் படித்தேன்; முழுவதும் இழையோடிய மறைமுகமான நகைச்சுவையும், உட்குறிப்புகளும் மிக ரசிக்கும்படி இருந்தன.  மூன்று வஷயங்கள் உடனே ஞாபகத்தில் வந்தன:   முதலாவதாக, 2020-ல் வெளி வந்த மிகச்சிறந்த மலையாளப் படங்களில் ஒன்றான  “கெட்டியோளானு என்ட மாலாக” என்ற  படத்தில் உங்கள் கதைக்கரு போலவே , ஓர் எளிய மலைவாழ் விவசாயி (ஆசிப் அலியின் மிக அருமையான் நடிப்பில்) தன் புதுமனவியிடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130397/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–18

பகுதி நான்கு : அலைமீள்கை – 1 எந்தையே, மானுடர் ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளில் எந்த அளவு தனித்தவர்கள் என்பதைப்போல் எண்ணுந்தோறும் பெருகும் விந்தை எதுவுமில்லை. என் கனவுகளில் எப்போதும் மானுடர் நிறைந்திருக்கிறார்கள். பிறந்தது முதல் துவாரகையிலேயே இருந்தவன் நான். போருக்கென கூட அந்நகரின் எல்லை கடந்து சென்றதில்லை. துவாரகையில் தோள்முட்டி உடல்தடுக்கி குரல்பின்னி வாழும் நெரிசல்களிலேயே இயல்பாக என்னை உணர்ந்திருக்கிறேன். சூழ்ந்திருக்கும் பெரும்பாலைநிலங்களில் வேட்டைக்கோ விளையாட்டிற்கோ செல்லும்போதுகூட உடன்பிறந்தார், ஏவலர், காவலர்கள், வழிகாட்டிகள் என்னை சூழ்ந்திருந்தார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130427/