Daily Archive: March 31, 2020

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

ஆர்.எம்.வி.எஸ்.தோட்டான் தலையைச் சுழற்றியபடி மிக மெல்ல உள்ளே வந்தார். எங்கள் ஸ்விட்ச் ரூமை அடைய மூன்று அறைகளைக் கடக்கவேண்டும். ஒவ்வொரு வாசலைக் கடந்ததும் ஒருகணம் நின்றார். ’சரி’ என தலையசைத்தபின் மீண்டும் நடந்தார். ஸ்விட்ச் ரூமை அடைந்ததும் குடையை வழக்கமான கொக்கியில் மாட்டினார். அதன் நேர்கீழே பையை வைத்தார். அப்படியே வெற்றுச் சுவரைப் பார்த்தபடி சற்றுநேரம் நின்றார். சுவிட்ச் ரூமில் ஸ்விட்ச் பேனல்களில் அமர்ந்திருந்த டெலிஃபோன் ஆப்பரேட்டர்கள் எட்டுபேரும் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அவர் சிலசமயம் ஒருமணி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130341/

மொழி,ஆடகம் -கடிதங்கள்

  மொழி [சிறுகதை] அன்புள்ள ஜெ   மொழி ஓர் அழகான கதை. உண்மையில் கலை என்பது அறிவார்ந்தது அல்ல முழுக்கமுழுக்க அது ஒரு வாழ்க்கைக்கொண்டாட்டம் என்பதைக் காட்டுகின்றன இக்கதைகள். தன்னிச்சையாக எழுதவை. எந்த பிரயாசையும் இல்லாமல் எழுதப்படுபவை. ஒருமுறை திரும்ப எழுதினால்கூட இந்தக்கதையை எழுதிவிடமுடியாது. ஒருமுறை வடிவம், மொழி ஆகியவற்றைப்பற்றி யோசித்தால்கூட இந்தக்கதை வராது அப்படி ஓர் இயல்பான மலர்வு கொண்ட கதை   இத்தகைய கதைகளில் யோசிக்க ஒன்றுமே இல்லை. நல்ல ஒரு ஓடையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130428/

யா தேவி, ஆனையில்லா, பூனை -கடிதங்கள்

  யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை] சக்தி ரூபேண! [சிறுகதை] அன்புள்ள ஜெ,   யாதேவி சிறுகதையில் எல்லா தன் உடலையே தான் என உணர்கிறாள். உடலை உடல் எனக் காணுதலைப் பற்றி தாங்கள் அம்பேத்கரின் பௌத்தம் கட்டுரையில் எழுதி இருந்தீர்கள். மனிதனின் முதல் பெரும் மாயம் தன் உடலைத் தான் என உணர்வது. எல்லா தன் உடலை வெறுக்கிறாள் அதன் வழியாகத் தன்னையும், ஸ்ரீதரன்  அவள் உடலைக் கடந்து, அவளைக் காண்கிறான். அவள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130393/

வேட்டு, துளி -கடிதங்கள்

துளி [சிறுகதை] அன்புள்ள ஜெ   துளி ஒரு அற்புதமான ஃபீல்குட் கதை. ஒருதுளி அன்பு போதும் என்ற ஒற்றை வரியாக கதையைச் சுருக்கிவிடலாம். ஆனால் உண்மையில் அது ஒரு மிகப்பெரிய லைஃப் ஸ்பியரை ஈஸியாக வரைந்துகாட்டுகிறது. நாய், யானை, மனிதர்கள் எல்லாரும் சேர்ந்து வாழ்கிறார்கள். உணவையும் இடத்தையும் மட்டும் பங்கிட்டுக்கொள்ளவில்லை. மானசீகமாகவே ஒன்றாக இருக்கிறார்கள். ஒருவரோடொருவர் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். சமாதானம் ஆகிறார்கள். யானையை சமாதானப்படுத்திக் கூட்டிச்செல்லும் மாதேவன்பிள்ளை அதை ஒரு சகமனதாகவே நினைத்துப் பேசுகிறார்.   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130376/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–17

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 12 அரசே, நான் காளிந்தியன்னையை சந்திக்கச் சென்றபோது முற்றிலும் உளம் ஓய்ந்திருந்தேன். எண்ணுவதற்கு ஒன்றுமில்லை என்னும் நிலை. குருக்ஷேத்ரப் போருக்குப் பின் பல நாட்கள் அந்நிலையில் இருந்திருக்கிறேன். அன்னை தங்கியிருந்த தவச்சாலை நகரில் இருந்து தொலைவில் பாலைநிலத்திற்கு நடுவே இருந்தது. அங்கே அவருக்குத் துணையாக ஒரு சேடிப்பெண் மட்டுமே இருந்தாள் என்று என்னிடம் தேரோட்டி சொன்னான். அவள் அன்னை பிறந்த யமுனைக்கரை படகோட்டிக் குலத்திலிருந்து வந்தவள். அவளுக்கும் துவாரகையின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130180/