Daily Archive: March 29, 2020

மொழி [சிறுகதை]

தங்கையா நாடார் மூச்சிரைக்க ஓடி கோயில் முற்றத்தை தாண்டி கரடி நாயரின் வீட்டை அடைந்தபோது வழியில் துண்டு கீழே விழுந்தது. “நாற எளவு!” என்று சபித்தபடி அதை ஓடிச் சென்று எடுத்து தோளிலிட்டபடி அம்மச்சி மாமரத்தைக் கடந்து வீட்டுக்குள் நுழைந்தார். பெரிய வீடு. இரண்டு வாசல்முற்றங்கள். வடக்குநோக்கிய முன்முற்றத்தில் தவளைக்கண்ணனும் லாரன்ஸும் பிறரும்  நின்றிருந்தார்கள். பக்கவாட்டிலிருந்த கிழக்குமுற்றத்தில் பெண்களின் கூட்டம். வைக்கோர்போர் அருகே ஒரு வேலையாட்களின் கூட்டம். கருப்பன் அப்பால் நின்று வெறிகொண்டு குரைத்துக் கொண்டிருந்தது. பெருவட்டர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130284/

ஆடகம்,கோட்டை -கடிதங்கள்

ஆடகம் [சிறுகதை] அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,   ஆடகம் கதை வாசித்தேன். தனித்திருத்தலை, கதைகளுக்கான நேரம் என்றதும் ஒரு குதூகலம். அதுவும் காதல் கதைகள், மாய யதார்த்தம் என்றதும், மகிழ்ச்சி.   இந்த சீரீஸ் கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதை ஆடகம். தலைப்பைக் குறித்த சிந்தனையுடனே கதையை வாசித்தேன். கதைக்குள் அதன் விளக்கம் வரும்போது ‌”இதோ கிடைத்துவிட்டது” என்ற பெருமூச்சு.   தற்கொலை என்ற சொல்லைக் கண்டவுடன், வாசிக்க வேண்டாம் என நினைத்தேன். ஆனால் இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130395/

யாதேவி கதைகள் -கடிதங்கள்

யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை] சக்தி ரூபேண! [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, யாதேவி , சர்வ ஃபூதேஷு இரண்டு கதைகளையும் கடந்த இரண்டு வாரங்களில் வாசித்து ஓரோர் வாரம் மனதில் ஓடவிட்டு களித்திருந்து தொடர்ந்து வாசித்த கதை சக்தி ரூபேண. முதல் இரண்டு கதைகளுக்கும் மாறாக பெரும் உளச்சோர்வை அளித்தது எல்லாவின் முடிவு அவள் காணாமல் போகும் போதே தெரிந்து விட்டது(செய்தி ஏற்கனவே தெரிந்திருந்ததால்) கதையின் முடிவிற்காக தொடர்ந்து படித்தேன். ஆனால் கதையின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130360/

வேட்டு, துளி -கடிதங்கள்

துளி [சிறுகதை] அன்புள்ள ஜெ   நலமா   “துளி’ சிறுகதையை வாசித்தேன் யானையை பற்றிய தொடர்ச்சியான விவரணைகளையும் கூர்ந்த உங்களின் aவதானிப்புகளையும்,நினைவின் அடுக்குகளில் சேகரமாகிய எண்ணற்ற வாழ்வனுபவங்களை என்னை போன்ற வாசகனுக்கு கொடையாக அளிக்கின்றீர்கள். மகிழ்ச்சி   தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் சிறுகதைகள் குறிப்பாக என்னை போன்ற வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு (தற்போதய சூழ்நிலையில் ) மனஅழுத்தத்தை குறைத்து மாற்றுசிந்தனைக்கு வழிகாட்டுகிறது “ஆனையில்லா” கதையெல்லாம் இரவெல்லாம் சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தேன்.   இப்படி சொல்லிக்கொண்டேன் .தலைவா நீங்க இப்ப …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130355/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 10 அரசே, நான் என்ன நிகழுமென்று எண்ணினேனோ அதுவே ஒவ்வொன்றாக நிகழ்கிறது என்று தெளிந்தேன். அதைத்தான் எதிர்பார்த்திருந்தேன் என்பதை அது நிகழ்ந்த பின்னர்தான் உணர முடிந்தது. அன்னையர் மைந்தரின் ஆளுகையில் இருக்கிறார்கள். மைந்தர் ஓர் அகவைக்கு மேல் அன்னைக்குமேல் கொள்ளும் செல்வாக்கு விந்தையானது. ஒவ்வொரு குடியிலும் ஆண்மகன்கள் அதை நுட்பமாக உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். மைந்தரின் ஆணியல்பு அதன் இளமை வீச்சுடன் வெளிப்படுகையில் அன்னையரின் பெண்ணியல்பு அவற்றை நோக்கி ஈர்க்கப்படுகிறது போலும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130167/