Daily Archive: March 28, 2020

ஆடகம் [சிறுகதை]

[ 1 ] தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று ஆகும்பேயைச் சொல்கிறார்கள் என்று நான் இணையத்தில் வாசித்தேன், ஆகவே அந்த ஊரைத் தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால் நான் தற்கொலை செய்துகொள்ளும் ஊரில் மழைபெய்து ஊரே நனைந்திருக்கவேண்டும் என்றும் ,இலைகளெல்லாம் அசைந்து அசைந்து சொட்டிக்கொண்டிருக்கவேண்டும் என்றும், வானம் நீலச்சாம்பல் முகிலால் மூடப்பட்டு இடியோசை அவ்வப்போது எழவேண்டும் என்றும் எண்ணினேன். நான் எவரும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத ஓர் இடத்தில் செத்துக்கிடப்பேன். மழைத்தாரைகள் என் உடலை அறைந்து கொண்டிருக்கும். நீரோடைகள் என் உடலை தொட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130265/

யாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்

யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை] சக்தி ரூபேண! [சிறுகதை] அன்புடன் ஆசிரியருக்கு   மூன்று கதைகளையும் தொடர்ந்து வாசித்தேன். ஆகவே இவற்றை ஒரே கதையாக கருதலாம் என்று எண்ணுகிறேன். முதலில் இக்கதையில் ஒரு பாலியல் பட நடிகை இருக்கிறார். தமிழ் கதைகளில் நிறைய பாலியல் தொழிலாளிகள் வந்திருக்கின்றனர். அவர்களை மனிதாபிமானத்துடனும் புரட்சிகரமாகவும் கரிசனத்துடனும் ஏக்கத்துடனும் எனப் பல வகைகளில் தமிழ் இலக்கியம் எதிர்கொண்டுவிட்டது. ஆனால் எல்லா பாலியல் தொழிலாளி அல்ல. பாலியல் திரைப்படங்களில் நடித்தவள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130359/

விலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்

தவளையும் இளவரசனும் [சிறுகதை]   அன்புள்ள ஜெ   தவளையும் ராஜகுமாரனும் உணவுப்பழக்கம் பற்றிய ஒரு சித்திரத்தை அளித்தது. நான் ஜப்பானில் பணியாற்றிய காலகட்டத்தில் ஜப்பானிய மீன் உணவின் மணம் எனக்கு ஒவ்வாமையை அளித்தது. அது பச்சைமீன் மணம் அதை அவ்வப்போது சொல்லியும் இருந்தேன் ஆனால் ஒருநாள் என் நண்பன் என்னிடம் என் உணவிலுள்ள பெருங்காயம் வெந்தயம் போன்றவை ஆப்பீஸில் குமட்டலை உருவாக்குகின்றன அவற்றை தவிர்த்துவிடலாமே என்று சொன்னான். ஆபீஸில் உள்ளவர்கள் அவனிடம் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். என்னிடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130384/

துளி, அங்கி -கடிதங்கள்

துளி [சிறுகதை]   அன்புள்ள ஜெ   ஸ்வீடிஷ் எழுத்தாளர்  Axel Munthe யின் The Story of San Michele ஒரு முக்கியமான நாவல். அதைப்பற்றி ஒரு கதை உண்டு. Axel Muntheயின் மனைவி ஒரு நோயாளியைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குச் செல்கிறார். நோயாளி வாசிப்பதற்கான நூல்கள் சிலவற்றைக் கொடுக்கவேண்டும் என நினைக்கிறார். ஆனால் புத்தகம் வாங்கச் சென்றால் எல்லா புத்தகங்களுமே வாழ்க்கைமேல் அவநம்பிக்கையையும் கசப்பையும் உருவாக்குபவை. மனம்சோர்ந்துபோன அவர் கணவரிடம் ஒரு நல்ல புத்தகம் சொல்லுங்கள், நோயில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130382/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 9 லக்ஷ்மணை அன்னையின் அழைப்பு வந்தபோது நான் அனிலனுடன் இடைநாழியின் அருகிருந்த சிறிய பூங்காவின் நடுவே கற்பீடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். நான் எழுந்தபோது அனிலனும் எழுந்தார். நான் அவரிடம் “நீங்களும் வரலாம்” என்றேன். “நான் எதற்கு?” என்றார். “இது ஏதோ அரசுசூழ்தல் நிகழ்வு என ஆகிவிட்டிருக்கிறது. இதை தொடங்கும்போது நான் இவ்வண்ணம் எண்ணவில்லை. இப்போது ஒவ்வொருவரும் தங்கள் காய்நகர்வுகளை செய்கிறார்கள். தங்கள் தரப்பை பதிவு செய்தாகவேண்டும் என்றும் இல்லையேல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130165/