Daily Archive: March 27, 2020

கோட்டை [சிறுகதை]

அணஞ்சியம்மை ஒரு சாக்குப்பையை அக்குளில் இடுக்கிக்கொண்டு வந்து சேர்ந்தபோது நான் கோயில்முற்றத்தில் இடிந்த திண்டின்மேல் அமர்ந்து பச்சைமாங்காய் தின்றுகொண்டிருந்தேன்.   “பிள்ளே, இங்கிண நாணியம்மை தம்ப்ராட்டிக்க வீடு எங்கயாக்கும்?” என்று அவள் கேட்டாள்.   அப்போது அவள் யாரென்று எனக்குத்தெரிந்திருக்கவில்லை. வடித்த காதுகள் தோளில் தொங்கின. இருமுலைகளும், இரு நீண்ட பைகளாக ஆடின. முலைக்காம்புகள் குப்புற நிலம்நோக்கியிருந்தna, பசுவின் காம்புகளைப்போல. இடையில் ஒரு வேட்டி மட்டும் கட்டியிருந்தாள். முகம் சிலந்திவலைபோல சுருக்கங்கள் மண்டியிருந்தது. நரைத்த கண்கள் . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130261/

வருக்கை, ஆனையில்லா!- கடிதங்கள்

“ஆனையில்லா!” [சிறுகதை] அன்புள்ள ஜெ   ஆனையில்லா, வருக்கை, பூனை மூன்று கதைகளுமே ஒரே வரிசையில் வருகின்றன. அந்த சிறிய கிராமத்தின் அழகான சித்திரம். அதில் நான் முதலில் பார்ப்பது மத ஒற்றுமை. இந்து கிறிஸ்தவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இந்து கோயில் கமிட்டியிலேயெ சர்ச்சில் உள்ள டீக்கனார் உட்காந்திருக்கிறார். சாதிப்பிரச்சினை என்பது மாறி மாறிச் சீண்டிக்கொள்ளும் அளவிலேயே இருக்கிறது.   ஆனையில்லா கதையிலும் சரி பூனை கதையிலும் சரி உயர்சாதியான நாயர்களின் சரிவும் வீழ்ச்சியும் சொல்லப்படுகிறது. முன்பு வாளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130274/

வேட்டு, விலங்கு- கடிதங்கள்

விலங்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ விலங்கு என்றகதை ஒரு திரில்லர் அமைப்பில் உள்ளது. இந்தக்கதைகள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலகட்ட இயல்பைக் காட்டுகின்றன. புனைவு என்பது ஆத்மாவைப் பிழிவது என்ற பழைய நம்பிக்கைகள் இன்றில்லை. அது ஒரு ஆட்டம்தான். அந்த ஆட்டத்தில் நேரடியாக ஒருபோதும் ஆசிரியனின் மனமோ வாழ்க்கையோ வரமுடியாது. ஆனால் அதைவைத்து அவன் ஆடிக்கொண்டிருக்கிறான். இந்த ஆட்டம் எப்போது முக்கியமாக ஆகிறது என்றால் காரம் ஸ்டிரக்கர் பல இடங்களில் முட்டி கடைசியில் காயை குழியில் தள்ளும்போது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130385/

துளி முதலிய கதைகள் -கடிதங்கள்

  அன்புள்ள ஜெ   இந்தக்கதைகள் இந்த மனநிலையில் ஓர் அழகான மாற்றத்தை உண்டு பண்ணுகின்றன. ஆனால் அதைவிட ஒரு பெரிய மாற்றம் உண்டு. அதாவது இங்கே நவீன இலக்கியத்திலே கதை என்றாலே வாழ்வின் அபத்ததைச் சொல்வது, தாளமுடியாத துக்கத்தைச் சொல்வது, குரூரங்களைச் சொல்வது என்று ஆகிவிட்டிருக்கிறது.   வாழ்க்கை என்பது அதெல்லாம் மட்டும் அல்ல.அதற்கு அப்பாலும் வாழ்க்கை உள்ளது. இனிமையான நல்ல காதல்கதைகளை வாசித்து எவ்வளவு நாளாகிவிட்டது. இன்றைக்கு உலக இலக்கியத்தில் முன்பு இருந்த சில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130380/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 8 என்னை மித்ரவிந்தையின் அரண்மனைக்கு கூட்டிச்செல்லும்படி காவலரிடம் சொல்லிவிட்டு காத்திருந்தேன். எண்ணியதுபோலவே பிந்தியது. என்னை வந்து அழைத்துச்சென்ற காவலன் துவாரகைக்கு புதியவன். அரசி மித்ரவிந்தை அவந்தியினருக்குரிய சிறிய அரண்மனையில் குடியிருந்தார். அங்கே அவந்தி நாட்டிலிருந்தே காவலர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொருவரும் பிறர் மேல் ஐயம் கொண்டிருந்த துவாரகையில் பெண்கள் தங்கள் பிறந்த நாட்டுக்கு உள்ளத்தால் திரும்பிச் சென்றுவிட்டிருந்தனர். மணத்தன்னேற்பில் உங்களை ஏற்று உடன்வந்த மித்ரவிந்தை ஒவ்வொரு அடியாக பின்வைத்து மீண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130162/