Daily Archive: March 26, 2020

அங்காடித்தெரு பத்தாண்டுகள்

அங்காடித்தெரு படம் வெளியாகி பத்தாண்டுகளாகின்றன. ஒரு நல்ல சினிமா இனிய நினைவுகளாக ஆகிவிடுகிறது. ஏனென்றால் அது ஒரு கூட்டு உழைப்பு. பலருடைய பங்களிப்பால் உருவாவது. கூடிச் செயல்படும் எச்செயலும் இனியது. அது படைப்பூக்கம் கொண்டதாக இருக்குமென்றால் மேலும் இனியது   அங்காடித்தெருவின் படப்பிடிப்பு நடந்த சென்னை கடை, நெல்லை இட்டமொழி அருகே செங்காடு எல்லாம் நினைவில் எழுகின்றன. வசந்தபாலன். வசந்தபாலனின் வலங்கையாக அப்படத்தில் பணியாற்றிய நண்பர் வரதன் என முகங்கள் முன்னால் வருகின்றன. அனைவருக்கும் அன்பு   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130354/

தனிமைநாட்கள், தன்னெறிகள்.

கொரோனோவும் இலக்கியமும் தனிமையில் இருப்பது எனக்கு ஒன்றும் புதியது அல்ல. தனிமையிலிருப்பதை கொண்டாட்டமாகவே பார்க்கும் மனநிலையும் உண்டு. பெரும்பாலான நாட்களில் வீட்டில் இருக்கையில் தனிமைதான். மாடியில் என் எழுத்து, துயில் அறைகள். சாப்பாட்டுக்கு கீழே வருவேன். அப்போது பிள்ளைகளிடம் அருண்மொழியிடமும் பேசிக்கொள்வேன். ஆனால் இப்படி வந்தமையும் வலுக்கட்டாயமான தனிமை, அதை நாம் அறிந்து சூடிக்கொள்வதனால், சற்று எடைமிக்கதுதான். அதை கொஞ்சமேனும் வகுத்துக்கொள்ளாமல் இருந்தால் இயல்பாக எதிர்கொள்வது கடினம். ஆகவே நெறிகள், வழக்கங்கள் சிலவற்றை உருவாக்கிக்கொண்டேன். நடைமுறையிலிருந்து கண்டுகொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130348/

விலங்கு [சிறுகதை]

மார்த்தாண்டத்திலிருந்து அருமனை. அங்கிருந்து பத்துகாணி என்னும் ஊர். அந்த ஊரே சென்ற இருபத்தைந்தாண்டுகளில் உருவாகிவந்தது. மேற்குதொடர்ச்சி மலையின் அடர்காடுகளின் விளிம்பு, அருக்காணி போலீஸ் ஸ்டேஷன் அதற்கு அடுத்த அடையாளம். அங்குதான் விசாரித்தேன். “சக்கப்பாறையா? இங்கயா?” என்று கேட்டார் அங்கிருந்த இரண்டு போலீஸ்காரர்களில் ஒருவர். “இங்க எல்லா பாறையும் சக்கைப்பாறைதானேடே” என்றார் உள்ளிருந்த வயதான ஏட்டு. “இங்க அப்டி ஓரெடமும் இல்ல” என்றார் போலீஸ்காரர். நான் “ஆளு ஆரையாவது அனுப்பினா நல்லது. செலவ பாத்துக்கிடலாம்” என்றேன். போலீஸ்காரர் திரும்பி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130248/

அங்கி, சக்திரூபேண- கடிதங்கள்

  அங்கி [சிறுகதை] அன்புள்ள ஜெ,   அங்கி கதையை ஒரு திகில் பேய்க்கதைக்குண்டான ஆர்வத்துடன் வாசித்தேன். இத்தகைய கதைகளுக்கு சில தேவைகள் உள்ளன. கதை திகிலுடன் இருக்கவேண்டும் என்றால் சூழல் நம்பகமாக இருக்கவேண்டும். உண்மையான நிலக்காட்சி இருக்கவேண்டும். அதுதான் அங்கே நாம் செல்லும் அனுபவத்தை அளிக்கிறது.   அந்த கேரளத்துச் சாலையும் இருட்டும் மழையும் உண்மையான ஒரு அனுபவம் மாதிரியே இருந்தது. சாலையில் யானை நின்றிருக்கும் விதமும் அதை பார்ப்பதும் மிகமிகத் துல்லியமான வர்ணனைகள். இன்றைக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130245/

வேட்டு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்

வேட்டு [சிறுகதை] அன்புள்ள ஜெ,   வேட்டு கதை மீண்டும் ஒரு வேட்டுதான். தொடர்ச்சியாக ஒரு தீவிரநிலையிலேயே இருக்கிறீர்கள். அதை உணரமுடிகிறது. நோயில் இருந்த நிலையிலும் சிறையில் இருந்த நிலையிலும் பலமுக்கியமான எழுத்தாளர்கள் இப்படி ஒரு உச்சகட்ட மனநிலையில் எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். எங்களுக்கும் இன்று இது தேவையாக உள்ளது   வேட்டு ஒரு துப்பறியும் கதைக்குண்டான பலவகையான திருப்பங்களுடன் இருந்தது. ஒவ்வொரு திருப்பமும் ஒவ்வொரு புதிய கதையை தொடங்குவதுபோல. ஆனால் அடிப்படையில் கதை ஆண்பெண் உறவில் உள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130353/

பூனை, ஆனையில்லா- கடிதங்கள்

பூனை [சிறுகதை]   அன்புள்ள ஜெ பூனை சிறுகதைக்கு ஒரு படத்தை போட்டிருக்கிறீர்கள். மிகப்பொருத்தமான படம். சரியாகத் தேடிப் பிடித்திருக்கிறீர்கள். வயதான, நொந்துபோன பூனை. பாவம் அதுவும் அந்த கிழவாடிகளைப் போலத்தான். அங்கே எலிபிடித்து வேறெந்த தொந்தரவும் இல்லாமல் வாழ்கிறது   ஆனால் அவ்வப்போது வந்து கிழவி செம்பால் அடிக்கிறாள். குச்சியைக் காட்டி துரத்துகிறாள். அதற்கு போக்கிடம் இல்லை. அந்தப்பக்கம் பலாமரம் வழியாக குன்றுக்குமேல் போய்விட்டு திரும்ப வந்துவிடும். வயசான காலத்தில் அதுவே தன்னை பூனையாக ஆக்கிக்கொண்டிருக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130300/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–12

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 7 சாத்யகி சொன்னான். அரசே, மீண்டும் நான் என் நம்பிக்கையின்மையுடன் தனித்துவிடப்பட்டேன். சாம்பனை அரசவைக்குச் சென்று சந்திக்கவேண்டும், அவருடன் அவருடைய இளையோர் இருப்பார்கள். அவர்களை நிறைவுபடுத்தி அரசியின் ஓலையை வாங்கவேண்டும். அம்முயற்சியை அவ்வாறே விட்டுவிடலாமா என்று மீண்டும் தோன்றியது. இடைநாழியில் நடந்துகொண்டிருக்கையில் திரும்பிவிடலாம் என்ற எண்ணமே என் மேல் எடையென அழுத்தியது. கடமையுணர்வு பின்சென்றுவிட்டிருந்தது. ஆனால் பின்னர் தோன்றியது, இதை முற்றறிவதே நன்று என்று. எது எவ்வண்ணம் எங்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130158/