Daily Archive: March 24, 2020

வேட்டு [சிறுகதை]

  எருமைமாட்டின் இறைச்சியை மிகநுணுக்கமான துண்டுகளாக நறுக்கி குருமிளகும் இஞ்சியும் சேர்த்து அரைத்த மசாலாவுடன் கருகப்பொரித்து எடுக்கும் ஒரு தொடுகறிக்கு புகழ்பெற்ற முழுப்பிலங்காடு ஜானம்மாவின் விடுதியில் நானும் ஔசேப்பச்சனும் ஸ்ரீதரனும் குமாரன் மாஸ்டரும் பழனியப்பனும் அமர்ந்திருந்தபோதுதான் ஔசேப்பச்சன் “பிரதர் லைஃப் இஸ் எ மித். இதில் காதல் கற்பு எதற்கும் எந்த மதிப்பும் இல்லை. காமம், அதுமட்டும்தான் உண்மை. ஐந்து நிமிட நேர உண்மை. ஒரு இரண்டுமணிநேரம் அந்த உண்மையைச் சுற்றி அழகான பொய்யை கட்டிக்கொள்ளமுடியும்… அவ்வளவுதான்” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130303

கொரோனோவும் இலக்கியமும்

  அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,   நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். தங்கள் தளத்தை அவ்வப்போது வந்து வாசிப்பவன் நான். தங்கள் தளத்தை சென்ற நாட்களாக வாசிக்கையில் நாட்டு நடப்புகளுடன் சம்பந்தமே இல்லாமல் இருப்பதாகத் தோன்றுகிறது. கோவிட் கொள்ளைநோய் உலகத்தையே சூறையாடிக்கொண்டிருக்கிறது. அதனிடமிருந்து தப்புவது எப்படி என்று மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.   மோடி அரசு போதுமான அளவுக்கு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. அதேசமயம் தனிமைப்படுத்தலும் பிரச்சினையாக உள்ளது. எல்லா ஊடகங்களிலும் இதேபேச்சுத்தான் உள்ளது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130323

சக்திரூபேண!, வருக்கை- கடிதங்கள்

சக்தி ரூபேண! [சிறுகதை] வணக்கம் ஜெ   யா தேவி மற்றும் சர்வ ஃபுதேஷு இரண்டும் வேறு ஒரு தளத்தில் இருந்தது என்றால் சக்தி ரூபேண வேறு ஒரு தளம். விஷ்ணுபுரத்தின் விரிவையும் ப்ரம்மாண்டத்தையும் சொல்லிய அதே சமயம் அதன் வெறிச்சோடிய காட்டு செடிகள் அடர்ந்த இறுதி முகத்தையும் சொல்லியது போல் மாத்தன் எல்லாவின் அற்புதமான உறவையும் பியட்டா கணத்தையும் உருவாக்கிய முதல் இரண்டு கதைகள் ஒரு தளத்திலும் போலீஸ் கஞ்சா போதை கற்பழிப்பு கொலை ஆட்டோகாரனுடன் சண்டை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130242

ஆனையில்லா, பூனை- கடிதங்கள்

  “ஆனையில்லா!” [சிறுகதை] அன்புள்ள ஜெ   ஆனையில்லா கதையை இணையத்தில் தேடினேன். இந்த வீடியோ அகப்பட்டது   கிருஷ்ணன் ஈரோடு     அன்புள்ள ஜெ   ஆங்கிலத்தில் Elephant in the room என்று ஒரு சொல்லாட்சி உண்டு. அது ஒரு குறியீடு. அதற்கு நிறைய அர்த்தங்கள் உள்ளன. கையாளமுடியாத பெரியது என்ற அர்த்ததிலே அங்கே அந்த சொல்லாட்சி உள்ளது   ஆனால் இணையத்திலே தேடினால் அந்த மாதிரி வீட்டுக்குள் யானை நுழைவதும் மாட்டிக்கொள்வதும் மிகச்சாதாரணமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130254

தவளையும் ராஜகுமாரனும் – கடிதங்கள்

தவளையும் இளவரசனும் [சிறுகதை] அன்புள்ள ஜெ   தவளையும் இளவரசனும் முற்றிலும் புதிய ஒரு கதை. முந்தைய கதைகளுடன் சம்பந்தமே இல்லை. நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் வெண்முரசுக்கும் சம்பந்தமில்லை. ஒரு முன்னோடிக்கதை என்றால் கெய்ஷா கதையைத்தான் சொல்லவேண்டும்   இந்தக்கதை ஒரு கூர்மையான முடிச்சை நோக்கிச் செல்கிறது. ஒரே வரியில் சொல்வதென்றால் எல்லா பொருத்தமும் இருந்தால் விவாகரத்தாகிவிடுகிறது. ஆகவே எந்தப்பொருத்தமும் இல்லாமல் மணந்தால் என்ன என்று ஒருவன் நினைக்கிறான். அவ்வளவுதான் கதையின் மையக்கரு. ஆனால் கதையின் அழகு எந்தப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130319

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–10

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 5 அமைச்சவையின் சிறுகூடத்தில் காத்திருந்தபோது அரசி ருக்மிணி என்னை அவைக்கு வரச்சொன்னார் என்று ஏவலன் வந்து சொன்னான். நான் எழுந்து ஒளிபட்டு நீர்மையென மின்னிக்கொண்டிருந்த பளிங்குச்சுவரில் என் ஆடையை பார்த்தேன். ஓர் அரசவையில் புகுவதற்கான ஆடையை நான் அணிந்திருக்கவில்லை. தாடியையும் குழலையும் கைகளால் நீவி முடிச்சிட்டு ஓரளவுக்கு நேர்படுத்திக்கொண்டு கீழே உப்புத்துளி நிறைந்த காற்றில் என் மீது படிந்திருந்த வெண்தடங்களை கைகளால் தட்டிக்கொண்டேன். அந்த ஈரத்தில் குளிரில் மூத்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130144