Daily Archive: March 23, 2020

அங்கி [சிறுகதை]

பீர்மேட்டிலிருந்து கட்டப்பனை போகும் வழியில் பாதியிலேயே இருட்டிவிட்டது. செபாஸ்டியன் பைக்கை ஓட்ட நான் பின்னால் அமர்ந்திருந்தேன். சாரல்மழை முகத்தில் அறைந்துகொண்டிருந்தது. வானத்தை ஒளியை மேகங்கள் மங்க வைத்திருந்தாலும் மழைத்தூறல்களில் ஒளி இருந்தது. ஈரமான நிலமும் இலைப்பரப்புகளும் மென்மையான ஒளியுடன் இருந்தன.   ”நேரமாயிடும்னு சொன்னேனே” என்றான் செபாஸ்டியன். “வேண்டாம் வேண்டாம்னு சொன்னா கேக்கல்ல. வாகைமண்ணு வண்டல்மண்ணுண்ணு அனத்தினே”   “செரி, நேரமானா என்னடே? போ… “   “போறதுக்குள்ள இருட்டீரும்” என்று செபாஸ்டியன் சொன்னான். “வளியிலே வெளிச்சமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130224/

காளான் [சிறுகதை] விஷ்ணுகுமார்

  சோபாவில்  குப்புற படுத்திருந்த மது திரும்பிப்  படுக்கும் போது ரவி ஒருவர் மட்டுமே அமரும் சோபாவில் கால்களை நீட்டி பின் தலையை சாய்த்து எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்ததைக் கண்டான்.   “என்னடா சீக்கிரமா தெளிஞ்சிருச்சா?” என்று கேட்டபடி மது  டீபாய் மீது சிதறியிருந்த நேந்திரம் சிப்ஸயை எடுத்து கடித்தான்.   “ஒரே பிளாங்கா இருக்கு மச்சி எம்ப்டினெஸ். எங்காவது தூரமா போனும் ஆனா இந்த பூமில இல்ல , எல்லாமே புதுசா இருக்கனும். ஹொலிவூட் படத்தில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130307/

பூனை, சக்திரூபேண, பழையதுமோடை- கடிதங்கள்

  பூனை [சிறுகதை] அன்புள்ள ஜெ சார், பூனை கதை படித்ததும் எனக்கு நினைவுக்கு வந்தவர் பல்லக்கு கதையின் பொற்றயில் திவாகரன் மேனோன். மேனோனையும் கேசவன் தம்பியையும் ஒப்பிட்டு யோசிப்பது ஆர்வமூட்டுவதாக இருந்தது. மேனோன், தம்பி இருவருமே கடந்த காலத்தின் நிழல்கள். சென்ற (நிலபிரபுத்துவ?) காலகட்டதில் சீராக வாழ்ந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒரு வகையில் அந்த குடும்பத்தில் பிறந்ததனாலேயே அமைந்த தங்கள் ஊழை தாண்ட முடியாதவர்கள். இருவருக்கும் மிகவும் வயதான தாய் கூடவே உண்டு.   மேனோன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130313/

வருக்கை, ஆனையில்லா- கடிதங்கள்

வருக்கை [சிறுகதை] அன்புள்ள ஜெ   வருக்கை கதையை வாசித்துக்கொண்டிருந்தபோது தங்கன் என்ற பெயரும் பலாப்பழச்சுளைகளும் மனதிலே ஒன்றாக ஆகிவிட்டன. எங்களூரில் தங்கன்சுளை என்றுதான் சொல்வார்கள். பொன்னிறமான வரிக்கைச்சுளைகள். அவள் அந்த சம்புடத்தை எடுத்து முகர்ந்து பார்க்கிறாள். அதில் அந்தச் சுளைகளின் மணம். பொன்னிறத்தின் மணம். அது அவளை மலரச் செய்கிறது. கிருஷ்ணனின் மணம். மனம்கவர்ந்த கள்வனின் மணம். சோரன் என்றுதானே கிருஷ்ணனைச் சொல்வார்கள்   எஸ்.   அன்புள்ள ஜெ,   வருக்கை கதையில் கள்வனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130310/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–9

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 4 எந்தச் சொல்லுடன் அரசி ருக்மிணியை சென்று பார்ப்பது என்று நான் முடிவு செய்திருக்கவில்லை. அரண்மனையின் இடைநாழியில் தயங்கியபடி நடந்து கொண்டிருக்கும்போது என்னை இரு ஏவலர்கள் வந்து சந்தித்தனர். சொற்களாலும் விழிகளாலும் என்னை பற்றிக்கொண்டனர் என்று சொல்வதே சரி. “துவாரகையின் அரசர் தங்களை அழைக்கிறார்” என்றனர். அச்சொல் என்னை எரிச்சல்படுத்தியது. துவாரகையின் எல்லைக்குள் அரசர் என்ற சொல்லை ஒருவருக்கன்றி பிறருக்கு பயன்படுத்தலாகாதென்று என் அகம் உணர்வதுண்டு. “இங்கே அரசர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130141/