Daily Archive: March 21, 2020

பூனை [சிறுகதை]

  இலஞ்சிமூட்டு பகவதி கோயிலில் நாலடி கருணாகரன் நாயர் வீட்டு வகை பந்திருநாழி வழிபாடு. பன்னிரண்டுநாழி பச்சரிசி, எட்டு தேங்காய், வெல்லம், முழுவாழைக்குலை ஒன்பது. அவர்களின் மகளுக்கு பிறந்தநாள்.   ஒற்றைக்காளை வண்டியில் முத்தன் உருளியைக் கொண்டுவந்தபோதே நத்தானியேல் அதை வயல்வரம்பில் நின்றபடி பார்த்தான். நேராக வந்துவிட்டான். வழிபாடு முடியும்வரை அவன் வெளியே தென்னை மரத்தின் அடியில் அமர்ந்திருந்தான். கோயிலுக்குள் பேச்சொலிகள், பாத்திரங்களின் ஒலிகள். பிறகு மணியோசை.சங்கொலி.   நாராயணன்போற்றி வெளியே வந்து “டேய் நத்து, வாடே” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130211

ஆனையில்லா! – கடிதங்கள்-1

  “ஆனையில்லா!” [சிறுகதை]   அன்புள்ள ஜெ,   கோடைக்கொண்டாட்டம் என்பார்கள். சிறுகதைகள் கொரோனா கொண்டாட்டமாகவும் இருக்கின்றன. உண்மையாகவே இன்றிருக்கும் இந்த சோர்வுநிலைக்கு மிக உற்சாகமான கதைகள். எனக்கு எண்ண எண்ணக் குறைவதுகூட உற்சாகமான வாசிப்பை அளித்த கதைதான். ஆனையில்லா ஒரு கிளாஸிக். உங்கள் கதைகளிலேயே நல்ல கதைகளில் ஒன்று.   ஒரு சிறுகதையின் கிளாஸிக் வடிவம் அசலாக பிசிறே இல்லாமல் அமைந்திருக்கிறது. நேராகச் செல்லும் கதை. முதல் வரியிலேயே தொடங்கி கடைசி வரி வரை பாய்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130234

சக்திரூபேண- கடிதங்கள்-2

    சக்தி ரூபேண! [சிறுகதை] அன்புள்ள ஜெ   சக்தி ரூபேண கதையை எதிர்பார்க்கவில்லை. மூன்று கதைகளையும் சேர்த்து ஒரே கதையாக வாசித்தால் பிடரியில் ஓங்கி அறையும் ஒரு குறுநாவல்போல இருக்கிறது. ஒரு போர்ன் நடிகை இந்தியா வருகிறாள். மேலைக்கலாச்சாரத்தின் சீரழிவின் ஓர் அடையாளம். அவள் இங்குள்ள கலாச்சாரத்தின் ஒரு உயர்ந்த அம்சத்தைக் காண்கிறாள். கொஞ்சம் மேம்படுகிறாள். ஆனால் அது உண்மை அல்ல. அது ஒரு தோற்றம்தான். உள்ளே அதைவிட பெரிய சாக்கடை ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130216

எண்ண எண்ணக் குறைவது -கடிதங்கள்-3

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]   அன்புள்ள ஜெ என் கல்லூரியில் ஓர் உரையாடலில் ராமன் சரயுவில் மூழ்கி உயிரிழந்ததைப் பற்றிச் சொன்னேன். உடனே ஒருவர் தற்கொலைசெய்துகொண்டவர் எப்படி தெய்வமாக முடியும் என்று கேட்டார். நான் கொலைசெய்யப்பட்டவர் தெய்வமாக முடியும் என்றால் இதுவும் முடியும்தான் என்று சொன்னேன்   தற்கொலை என்பதிலுள்ள கொலைதான் பிரச்சினை. நாம் முன்னால் ஜலசமாதி, வடக்கிருத்தல் என்றெல்லாம்தான் சொல்லிவந்தோம். தற்கொலை என்ற வார்த்தையை பயன்படுத்தியதுமே அர்த்தம் மாறிவிட்டது. இந்தச் சொல் தினத்தந்தியால்தான் கண்டுபிடிக்கப்பட்டது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130208

சர்வ ஃபூதேஷு- கடிதங்கள்-9

யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை]   அன்புள்ள ஜெ.. யாதேவி கதை படித்த நிறைவில் இருந்த எனக்கு சர்வஃபூதேஷு கதை வருகை முதலில்சற்று ஒவ்வாமையே ஏற்படுத்தியது. மாட்ரிக்ஸ் படத்தை வெகுவாக ரசித்தபின் , அந்த நிறைவு சீர்குலைந்துவிடலாகாது என்பதற்காக அதன் அடுத்த பாகத்தை பார்ப்பதை தவிர்த்த மனநிலை இது படித்த பிறகுதான் கதை வேறோரு கோணத்தை , இன்னொரு தளத்தை காட்டுவதை உணரந்தேன் http://www.pichaikaaran.com/2020/03/blog-post_16.html?m=1 என்றென்றும் அன்புடன் பிச்சைக்காரன் நாடக வடிவத்தில் மிகப்பெரிய பகுதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130177

’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 7

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 2 சாத்யகி சொன்னான் “அரசவையிலிருந்து வெளியே வந்தபோது உளம்சலித்திருந்தேன். அவ்வண்ணமே திரும்பி ரிஷபவனத்திற்குச் சென்றுவிடவேண்டும் என்றும், என் ஆநிரைகளுடன் அறியாக் காடொன்றில் அமர்ந்திருக்கவேண்டும் என்றும், காட்டுவிலங்குபோல அங்கேயே இறந்து மண்ணாகி மறைந்துவிடவேண்டும் என்றும் விழைந்தேன். ஆனால் என்னால் அது இயலாதென்றும் அறிந்திருந்தேன். அரசே, என் பற்று உங்கள்மேல் மட்டும் அல்ல. நான் இளைஞனாக வந்து இந்த ஐந்து அனல்முத்திரைகளை பெற்றுக்கொண்ட நாளில் கண்ட பொன்பொலிந்த துவாரகை என் கண்ணிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130119