Daily Archive: March 20, 2020

வருக்கை [சிறுகதை]

  கண்ணன் பார்பர் ஷாப்பில் எனக்காக ஏழுபேர் காத்திருந்தனர். நான் அருகிலிருந்த சண்முகத்தின் வெற்றிலைபாக்குக் கடையில் “ஒரு பாக்கெட் வாசனை ஜிண்டான்”என்று சொன்னேன்.   சண்முகம் “பிள்ளை இண்ணைக்கு பள்ளிக்கூடம் லீவா?”என்றார்.   அதற்குள் அப்புப் பாட்டா என்னிடம் “பிள்ளை இஞ்ச வாரும்… தந்தியிலே பேச்சிப்பாறை வெள்ளம் என்ன மட்டம்னு பாத்துச் சொல்லும்” என்றார்.   நான் தந்தியை வாங்கிக் கொண்டேன். அது ஏற்கனவே பலரால் பலகோணங்களில் படிக்கப்பட்டு ஆறிப்போன அப்பளம் போலிருந்தது. ஒய்.விஜயாவின் முலைமேல் எவரோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130203

சக்தி ரூபேண- கடிதங்கள்-1

சக்தி ரூபேண! [சிறுகதை]   அன்புள்ள ஜெ   சக்தி ரூபேண வாசித்ததும் உள்ளம் சோர்ந்துவிட்டது. முதல் இரு கதைகள் அளித்த மன எழுச்சிக்கும் நம்பிக்கைக்கும் நேர் எதிரான கதை. ஆனால் இதுதான் உங்கள் அசல் கதைக்கரு என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.   இணையத்தில் தேடியபோது இந்தச் சம்பவம் கேரளத்தில் திருவனந்தபுரம் அருகே கோவளம் என்ற ஊரில் நடந்திருப்பதை கண்டேன். [நீங்கள் கதை எழுதியிருக்கும் அதே லேன்ட்ஸ்கேப். நானும் அங்கே போயிருக்கிறேன்] அங்கே நடந்த அந்தச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130215

பழையது மோடை – கடிதங்கள்

பழையது மோடை- கோகுலரமணன் அன்புள்ள ஜெ,   கோகுலின் பழையது மோடை கதை வாசித்தேன். மோடையை வெற்றிகரமாக ஒரு குறியீடாக இக்கதையில் அவரால் பயன்படுத்த முடிந்திருக்கிறது. ஒரு வகையில் பிராமண சமூகத்திற்கே உரிய பிரத்யேக சிக்கல்‌ . நூற்றாண்டுகளாக வெவ்வேறு எழுத்தாளர்களால் திரும்ப திரும்ப எழுதப்படுவதும் கூட‌. ரா. கிரிதரனின் தர்ப்பை கூட இவ்வரிசையில் உள்ள கதை தான். பழையது, வழிவழியாக கையளிக்கப்பட்டது, பிராமண குடும்பத்திற்கு வெளியே தேவையில்லாதது, வேறு எங்கும் பொருந்தாதது, பயன்படாது, புதிய இடத்திற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130222

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-8

யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை]   அன்புள்ள ஜெ   ஒரு பெண்ணின் பல உருவங்கள் என்ற ஒற்றை வரி அளிக்கும் உணர்வுகளைச் சூழ்ந்தே இருகதைகளும் இருக்கின்றன. அந்தக் கரு அளிக்கும் திகைப்புதான் முதல் கதை. எத்தனை உருவங்கள் என்ற வியப்பு மட்டும். இரண்டாவது கதை அத்தனை உருவங்களுக்கும் மையமாக ஒரு மாறா உருவம் இருக்கக்கூடுமா என்பது. அதைப்புரிந்துகொள்கையில் அக்கதை விரிவடைகிறது. சர்வஃபூதேஷுவை வாசிக்கையில் அவளை அறிய காமம் அல்லது அறிவு வழியல்ல எளிமையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130153

எண்ண எண்ணக் குறைவது-கடிதங்கள்-2

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை] ஜெ   கதையை வாசித்தபோது அது கதையா இல்லை உண்மையான நிகழ்ச்சியின் நேர்ப்பதிவா என்ற சந்தேகம் வந்தது. அதிலுள்ள முக்கியமான கதாபாத்திரமான சிந்தனையாளரைப் பற்றி ஏற்கனவே எழுதிவிட்டீர்கள். ஆகவே அவரைப்பற்றிச் சொல்லி கதையை காஸிப் ஆக ஆக்க விரும்பவில்லை. கதையின் மையம் ஒன்றுதான், பாஸிட்டீவான தற்கொலை ஒன்று இருக்க முடியுமா?   உண்டு என்றுதான் இந்துமரபு சொல்லும். கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் கதை முதல் நாம் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்தவாழ்க்கை ஒரு நோக்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130207

’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து –கல்பொருசிறுநுரை– 6

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 1 சாத்யகி மலைப்பாதைகளினூடாக ஏழு நாட்கள் பயணம் செய்து மந்தரத்தை அடைந்தபோது இளம்புலரி எழுந்திருந்தது. இரவெலாம் அவனது புரவி தன் விழியொளியாலேயே வழி தேர்ந்து அங்கு வந்து சேர்ந்திருந்தது. தரையில் முகர்ந்து முன்னர் சென்ற புரவிகளின் மணம் பெற்றுக்கொண்டு, அவ்வப்போது மூக்கு சீறியும், சினைத்தும், குளம்புகளால் காலைத் தட்டியும் அது நடந்தது. இரவில் நிலவொளி எழுந்திருந்தது அதற்கு உதவியாக இருந்தது. புரவியின் மீது கடிவாளத்தை தளரப்பற்றி தோள் தழைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130117