Daily Archive: March 19, 2020

“ஆனையில்லா!” [சிறுகதை]

  செய்தி கேள்விப்பட்டு அப்பா ‘என்னது?”என்றார். “ஆமாம் ஏமானே, உள்ளதாக்கும். வந்து பாக்கணும் அந்த கெரகக்கேட்ட… உள்ளதச் சொல்லப்போனா தெருவுநாயெல்லாம் சுத்தி நிண்ணு பல்லக்காட்டிச் சிரிக்குது” என்றான் தவளைக்கண்ணன். அப்பா துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு கிளம்புவதற்குள் நான் பின்பக்கம் வழியாக பாய்ந்து, தென்னந்தோப்பில் புகுந்து குறுக்குவழியாக ஓடி, ஓடையை பனந்தடிப் பாலம் வழியாகக் கடந்து, பாடச்சேரியை அடைந்து ,அப்பால் ஏறி எராளி ஐயப்பனின் வீட்டை அடைந்தேன். செய்தி உண்மைதான். கோபாலகிருஷ்ணன் எராளி ஐயப்பனின் வீட்டுக்குள் நுழைந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130198/

புனைவுக் களியாட்டு- சிறுகதைகள் பற்றி…

தனிமையின் புனைவுக் களியாட்டு   தனிமையின் புனைவுக் களியாட்டு அறிவிப்புக்குப் பின் இளம் வாசகர்கள் எழுதிய பல கதைகள் வந்தன. எல்லா கதைகளையும் வாசித்துவிட்டேன். நானே எழுதிக்கொண்டிருப்பதனால் எல்லாருக்கும் தனித்தனியாகப் பதில்களை விரிவாகப் போடவில்லை. எழுதவிருப்பவர்களுக்கும் சேர்த்து இந்தக்குறிப்பை பொதுவாக எழுதுகிறேன்.   அ. சிறுகதை ஒரு சவுக்குச் சொடுக்குபோல ஆரம்பிக்கவேண்டிய கதைவடிவம்   எனக்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான கதைகள் மிகமிகத் தயக்கமாக ஆரம்பிக்கின்றன.“அவன் இப்படி நினைத்தான். இப்படித்தானோ என்று தோன்றியது. இப்படி நினைவுகூர்ந்தான்’ என்றவகையில் முதல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130217/

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-7

  யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை] வணக்கம் ஜெ சில சமயங்களில் ஏதுமறியாமல் ஏதோ ஒன்று மனதை ஆட்கொண்டுவிடுகிறது. ஒரு பாடல் வரியோ கவிதையோ இசையோ கோர்ப்போ. சில முறை முன்னரே பார்த்துள்ள ஓவியமோ சிற்பமோ அன்று மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும். அவ்வாறு சென்ற வாரம் என்னுள் இருந்துகொண்டிருந்தது மிக்கலேஞ்சிலோவின் தி பியட்டா. அச்சிற்பத்தை பற்றி ப்ராய்ட் எழுதியதை படிக்க தொடங்கி மிக்கலேஞ்சிலோவின் சில குறிப்புகளை படித்து இத்தாலியின் உயர் மறுமலர்ச்சி (high …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130097/

எண்ண எண்ணக் குறைவது -கடிதங்கள்-1

எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை] அன்புள்ள ஜெ,   நீங்கள் எழுதும் கதைகளில் ஒரு குறிப்பிட்ட வகையான கதைகள் தொடர்ச்சியாக நினைவில் வருகின்றன. பெரும்பாலும் உண்மை மனிதர்கள். பெரும்பாலும் உண்மை நிகழ்வுகள். அந்த சந்தர்ப்பம் மட்டும் கொஞ்சம் பிக்‌ஷனைஸ் பண்ணப்பட்டிருக்கும். அதுகூட டிரமட்டைஸ் பண்ணப்படாமல் ஒரு உண்மையான வாழ்க்கைச் சித்திரத்தை மட்டும் தொட்டுக்காட்டிவிட்டு மேலே முடிவோ கருத்தோ சொல்லாமல் நின்றுவிடும்.   இருவர் அப்படிப்பட்ட ஒரு கதை. தேவதை நினைவுக்குவரும்  இன்னொரு கதை. சமீபத்தில் பேசப்பட்ட நீரும்நெருப்பும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130200/

கோகுலரமணனின் கதை- ஓர் உரையாடல்

  அன்புள்ள  கிருஷ்ணன் அவர்களுக்கு, வணக்கம் நான் சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு வாசகர் சந்திப்பில் கலந்துகொண்டவன். அதன் உந்துதலால் ஒரு சிறுகதை ஒன்றை எழுதி இத்துடன் இணைத்துள்ளேன். தங்களின் கருத்துக்களையும்/விமர்சனங்களையும்  நான் மிகமுக்கியமானதாக உணர்கிறேன், கதையும் நானும் தேறுவோமா என்று தெரியவில்லை. தங்களின் கருத்துக்களை பகிருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த கதையை ஜெயமோகன் அவர்களுக்கும் ஒரு சிறிய கடிதத்தோடு அனுப்பியுள்ளேன். எழுத்துப்பிழைகளை பொருத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றியுடன், இல. கோகுலரமணன் ஆசிரியருக்கு,     இது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130194/

’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 5

பகுதி இரண்டு : நீலச்சிறுபீலி – 3 அர்ஜுனன் சொன்னான். அஸ்தினபுரியிலிருந்து கிழக்கே சென்று மகதத்தினூடாக வங்கத்தில் இறங்கி கலிங்கத்தை அடைந்தேன். அங்கிருந்து மேற்காகத் திரும்பி விதர்ப்பத்தினூடாக மாளவம் நோக்கி சென்றேன். செல்லும் வழியில் நான் கிளம்பிய ஓரிரு நாட்களுக்குப் பின்னர் மூத்தவர் பீமசேனன் அவ்வாறே வடதிசை நோக்கி சென்றுவிட்டதை அறிந்தேன். அவர் வெள்ளிப் பனிமலை அடுக்குகளின் எல்லையை கண்டுவிட்டார், அதைக் கடந்து அப்பால் செல்லாது அவரால் அமைய இயலாது. அவர் பீதர் நாட்டை நோக்கி சென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130109/