Daily Archive: March 18, 2020

தனிமையின் புனைவுக் களியாட்டு

  நண்பர்களுக்கு, பெரும்பாலானவர்கள் சொந்தவீட்டில் சிறையில் இருக்கும் நேரம் இது. இச்சூழலில் கருத்துக்கள் எதிர்க்கருத்துக்கள் போலச் சோர்வுறச் செய்பவை வேறில்லை. ஆகவே புனைவில் திளைக்கலாமென்று ஓர் எண்ணம். நண்பர்கள் எழுதும் புனைகதைகளை ஒவ்வொருநாளும் வெளியிட நினைக்கிறேன்.நானும் முடிந்தால் எழுதலாம் என்றும் திட்டம். ஆனால் இந்தப் புனைகதைகளுக்குச் சில நிபந்தனைகள் உண்டு, அவை சிடுக்கானமொழியுடன் புதிரான வாசிப்பை அளிப்பதாக இருக்கலாகாது.யதார்த்தத்தைச் சொல்கிறேன் என்ற பேரில் செயற்கையான கொடூரங்களைச் சொல்வனவாகவும் இருக்கக் கூடாது. ஒழுக்கான நடையுடன், கதைத்தன்மையுடன் அமையவேண்டும். அன்றாட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130188

சக்தி ரூபேண! [சிறுகதை]

யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை]   சாந்தம்மா மேலும் ஒரு கோப்புடன் வந்து “இது நாராயணன் மாஸ்டர் கொடுத்தனுப்பியது” என்றாள். விதவிதமான ரசீதுகளை ஓர் அட்டையில் சேர்த்து பிடிப்பான் போட்டு வைத்த கோப்பு   நான் கோபத்துடன் நிமிர்ந்து “எல்லாவற்றையும் சேர்த்தே கொண்டுவந்தால் என்ன? நான்குநாட்களாக கேட்கிறேன். கடைசிநிமிடத்தில்தான்  கொண்டு வருவீர்களா? நோயாளி போனபிறகு கொண்டுவாருங்கள். நான் போய் வாரியரின் காலைக்கழுவுகிறேன். அறிவே இல்லை” என்றேன்   சாந்தம்மா என்னிடம் இத்தகைய தருணங்களில் எப்போதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130079

பழையது மோடை[ சிறுகதை] – கோகுலரமணன்

  அப்பா விழித்தது முதலே அமைதியின்மையுடன் காணப்பட்டார். அம்மா காப்பி கொண்டுவந்து கொடுத்தபோது ராத்திரி தூக்கமே இல்ல சொப்பனமே சரியில்ல என்றார். அம்மா நேத்திக்குமா என்றாள். ஒரு வாரமாவே தூக்கம் இல்ல அதே திரும்பி திரும்பி கனவுல வருது பழையது மோடையா ? ஆமா, அந்த கல்லு ரெண்டையும் கட்டிண்டு தூங்கறா மாதிரி அப்பறோம் அதுல ஒன்ன மட்டும் கட்டிண்டு அழறேன்.அந்த அழுகை இன்னும் அப்டியே ஞாபகம் இருக்கு .நிஜத்துல அழுதாமாதிரி இப்போகூட தேம்பறது  . முந்தாநாள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130191

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-6

  யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை] இனிய ஜெயன்,   சர்வஃபுதேஷூ அமைதியாக ஆரம்பித்து கொஞ்சம் பதட்டம் உண்டாக்கி பின் அமைதி படுத்தியது.   ”ஆனால் அவளுக்கு வியாகூல மாதாவின் முகம் இருக்கிறது. ஒரு அங்கியை போட்டு அமரவைத்தால் மடியில் சிலுவையிலேறிய ஏசுவை போட்டுவிடலாம்” இது புரிந்த பின் அவர்களிடமோ அல்லது மற்றவர்களிடமோ அவர்களைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லைதான்.   ஒரு மூலிகைக் குளியல் போல் கதை மனசுக்கு மிக இதமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130095

வைரஸ்,யுவால் நோவா ஹராரி -கடிதம்

அன்புள்ள ஜெ,   வைரஸ் அரசியல் கட்டுரை இந்தத் தருணத்தில் முக முக்கியமானது நன்றி. அதீத செயல்பாடுகளால் வரும் பிரச்சனைகளையும், அந்தச் செயல்பாட்டுக்கு காரணமான சில்லறை அரசியல் பற்றியும் நீங்கள் எழுதியிருந்தது தெளிவைத் தந்தது.   எந்த ஒரு நிகழ்வையும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டுக்கு, வரும் தேர்தல் ஓட்டுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்று திரித்து அரசியல்வாதிகள் யோசித்தால் கூட பரவாயில்லை, ஒவ்வொருருவருமே அப்ப்டி யோசிக்கப் பயிற்றுவிக்கப்பட்டுவிட்டனர் என்ற நிலை அச்சமூட்டுகிறது.   பொழுதுபோக்கு ஊடகமான சினிமா கூட இந்த ஒற்றை அரசியல் கண்ணால் தான் பார்க்கப்படுகின்றது என்பது சமீபத்தில் வந்த இரு அரசியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130178

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை –4

பகுதி இரண்டு : நீலச்சிறுபீலி – 2 இளைய யாதவர் குடிலின் அறைக்குள் வந்து அங்கிருந்த மென்மரத்தாலான மணை மீது கால் மடித்து அமர்ந்து, மூங்கில் தட்டியால் ஆன சுவரில் சாய்ந்து, மடிமேல் கைகளைக் கோத்து வைத்துக்கொண்டு புன்னகையுடன் “கூறுக!” என்றார். அங்கு வந்தபோதிருந்த அனைத்து உளநிலைகளும் மறைந்து அதுவரை குழந்தைகளுடன் ஒளிந்து விளையாடி, கூவிச் சிரித்து அடைந்த அனைத்து மலர்வுகளுடன் அர்ஜுனன் அவர் முன் அமர்ந்தான். தொடர்ந்து விளையாட்டைப் பற்றியே பேசவிருப்பவன்போல “மிகத் துடிப்பான குழந்தைகள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130106