Daily Archive: March 16, 2020

வைரஸ் அரசியல்

கொரோனோ வைரஸ், அதன் பாதிப்புகள் அதன் மீதான நடவடிக்கைகள் பற்றி கேரள ஊடகவியலாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.  ஊடகவியலாளர் என்றால் நிருபர் அல்ல. சர்வதேச ஊடகவியலாளர், தொழிலதிபர், திரைப்படத் தயாரிப்பாளர்.   கொரோனோ வைரஸின் பொருட்டு கேரள அரசு கிட்டத்தட்ட கேரளத்தையே மூடிவைத்திருக்கிறது. சபரிமலைக்கும் குருவாயூருக்கும் எவரும் வரவேண்டாம் என்று அறிவித்துள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. வணிகவளாகங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.அனைத்து சுற்றுலா மையங்களும் வழியடைக்கப்பட்டுவிட்டு வெறுமைகொண்டிருக்கின்றன   கேரளம் வணிகசேவையையே முதன்மைத்தொழிலாகக் கொண்டுள்ள மாநிலம். அங்கே இதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130150

கோவிட்- கதை- கடிதம்

  ஐந்தாவது மருந்து [சிறுகதை] அன்புள்ள ஜெ   கோவிட் வைரஸ் உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் வழியாகா தற்செயலாக உங்கள் கதையை கண்டுபிடித்தேன். ஐந்தாவது மருந்து ஒரு சிக்கலான கதை. சாதாரணமான அறிவியல்புனைகதை பாணியில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அது எழுப்பும் கேள்வி சிக்கலானது. அதாவது மனிதகுலம் இயற்கையுடன் போராடவேண்டுமா வேண்டாமா? வேண்டாம் என்று சொல்லலாம், கடைசியாக இயற்கைதான் ஜெயிக்கும். ஆனால் போராடியதனால்தானே இங்கே வாழ்க்கையே உருவாகியிருக்கிறது   இதேகதையை சுற்றுச்சூழல் சார்ந்தும் சொல்லலாம். விவசாயம் செய்யலாமா? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130088

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-5

யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை]   அன்புள்ள ஜெ   சர்வ பூதேஷு கதையை வாசிக்கையில் யாதேவி கதையை பலமுறை வாசித்ததுபோல ஓர் உணர்வு. நான் இரண்டு முறைதான் வாசித்தேன். ஆனால் கடிதங்களை வாசித்தபோது ஒவ்வொரு முறையும் கதையை ஞாபகத்தில் ஓட்டிக்கொண்டே இருந்தேன். ஆகவே சர்வஃ பூதேஷு கதையை வாசிக்கையில் எல்லா ஆன்ஸெலும் அந்த கதை நடக்கும் சூழலும் எனக்கு மிகமிக நெருக்கமானவையாக ஆகிவிட்டிருந்தன. என்னால் அந்தச் சூழலிலேயே வாழமுடிந்தது   இந்தக்கதையின் தலைப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130092

ஈரோடு சந்திப்பு கடிதங்கள்-5

  ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020   பெருமதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு, வணக்கம். புதிய வாசகர் சந்திப்பு குறித்த அறிவிப்பை நமது தளத்தில் கண்டவுடனே பெரும் விருப்பையும் அதற்கிணையாகவே தயக்கம் துணைக் கொண்ட பயத்தையும் அடைந்தேன். உங்களுடன் இரு நாட்கள் தங்கும் வாய்ப்பு என்பதே தயக்கத்தை உடைத்திடப் போதுமானதாக இருந்தது. சனிக்கிழமை காலை ஏறத்தாழ 9 மணியளவில் காஞ்சிக்கோவிலில் இருக்கும் பண்ணை வீட்டை அடையும் போதே, உங்கள் குரல்தான் வரவேற்றது. மாடிப்படிக்கருகில் நின்று நீங்கள் பேசிக்கொண்டிருக்க, உடம்பே காதுகளாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130154

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை –2

பகுதி ஒன்று : பொற்பூழி – 2 யுதிஷ்டிரன் கைகூப்பி வணங்கி, விழிநீர் உகுத்து, கீரியிடம் கூறினார் “சற்று முந்தைய கணம் வரை என்னிடம் இருந்த பெருமிதம் முற்றழிந்தது. எளியன் என, சிறியன் என, தகுதியற்றவன் என இன்று உணர்கிறேன். வேதம் பெருமையை அல்ல மெய்மையையே நாடுகிறது என்று தங்கள் சொல்லினூடாக உணர்ந்தேன். இங்கு வேள்விநிறைவு நிகழவில்லை என்று காட்டும்பொருட்டே தங்கள் வருகை நிகழ்ந்தது. தங்கள் அடிபணிகிறேன். என்னை வாழ்த்துக!” கீரி அவரை வாழ்த்தியது. யுதிஷ்டிரன் “செல்க, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130074