Daily Archive: March 13, 2020

கொரோனோ

  ஒரு சினிமாச் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. மலையாளம். அங்கிருந்து அழைத்தார்கள். “சார் வருந்நுண்டோ? கொறோணயல்லே? கொறோணயாணே!” நான் “எந்து கொறோணா?” என்றேன். ‘கொறோணயாணே!” நான் வருவதாகச் சொன்னேன். அவருக்கு சந்தேகம். கொறோணா இருப்பதனால்தான் வருகிறேன் என்று சொல்கிறேனா? என்ன இருந்தாலும் மலையாளி அல்லவா?. “ஞங்ஙள்கு கொறோணா இல்ல…” என்றார். நான் “எனிக்கும் இல்ல… பின்னெந்து பிரஸ்னம்?” என்றேன். “ஆ, பின்னெந்தா பிறஸ்னம்?” என்று சொல்லிவிட்டு “ஏதாயாலும் வேண்டா. நமுக்கு ஏப்ரல் கழிஞ்ஞிட்டு காணாம்” என்றார்   மலையாளிகளைப்போல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130124/

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 2

யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை]   அன்புள்ள ஜெ,   சர்வ பூதேஷு அழகான ஒரு நீட்சி. முந்தைய கதையின் அதே சரளமான எளிமையான ஓட்டம். அதில் உட்குறிப்புக்கள் எல்லாம் அவளுடைய காலை அவன் தொடும்போது நிகழும் உரையாடல்களில் இருந்தன. இந்த கதையில் உரையாடல் வழியாக அந்த குறிப்புக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கொச்சுமாத்தன் கண்ணீர் வழியாக தூய்மை ஆவதைப் பற்றிச் சொல்வது ஓர் உதாரணம்.  “அவளுக்கு என்னை எப்படி தெரியும்?” என்று அவன் கேட்டான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130085/

அக்ஷயபாத்திரம் கடிதங்கள்-3

அக்ஷயபாத்திரம் உணவு அக்ஷயபாத்திரம் – கடிதங்கள் அன்புள்ள ஜெயமோகன் சார்,   அஷ்யபாத்திரம் -உணவு  கட்டுரையை மன நெகிழ்வோடுதான் வாசித்தேன் .அதுவும் “ஆகவே எவர் எதன்பொருட்டு சோறிட்டாலும் அதை ஆதரிப்பவனாகவே இருந்திருக்கிறேன். அதன்பொருட்டே இஸ்கானின் இந்த உணவுக்கொடையை முழுதுளத்துடன் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன்.” என்னும் வரிகளை வாசிக்கும்போது கண்ணில் கண்ணீர் பொங்கியது.   எனது 21 வயது வரை ஒரு கத்தோலிக்க அநாதை இல்லத்தில் தான் வளர்ந்தேன்.சாப்பிட்டேன்.அப்போது வெங்காயம் போடுகிறார்களா? பூண்டு போடுகிறார்களா? என நான் எண்ணியது கூட  இல்லை.  சோறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130072/

குவாலியரும் சிந்தியாக்களும்

மையநிலப் பயணம் 10 அன்புள்ள ஜெ இன்றைக்கு ஜ்யோதிராதித்ய சிந்தியா பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நண்பர் ஒரு லிங்க் அனுப்பினார். அதில் நீங்கள் மையநிலப் பயணம் செய்தபோது குவாலியர் பற்றி எழுதியிருந்த பகுதி இருந்தது. நான் அதை முன்னரே படித்திருந்தேன். குவாலியர் அரசகுடும்பத்தின் துரோகம், ஆதிக்கவெறி ஆகியவற்றை பற்றி இன்றைய மனநிலையில் படித்தபோது பதற்றமாக இருந்தது. எட்டப்பன் குடும்பம் என்றுதான் சொல்லவேண்டும். இது எட்டப்பர்களின் அரசியல் காலகட்டம். இங்கேகூட வெள்ளையர்களுடன் நின்ற புதுக்கோட்டை தொண்டைமானும், பூண்டி வாண்டையார்களும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130130/