Daily Archive: March 12, 2020

முதல் ஆறு [சிறுகதை]

அவன் முகப்பவுடரை கைக்குட்டையில் கொட்டி அதை நன்றாக மடித்து பாண்ட் பாக்கெட்டில் வைத்திருந்தான். பின்பக்கம் பாக்கெட்டில் வட்டச்சீப்பு. அவன் நின்றிருந்த இடத்தில் சாய்வெயில் விழுந்தது. முந்தையநாள் மழைபெய்திருந்தமையால் தரை நனைந்து ஆவி எழுந்தது. ஆகவே வெக்கையில் வியர்த்து ஊற்றியது. பஸ் நிற்குமிடத்தில் நிழற்குடை ஏதுமில்லை. பெரிய அரசமர நிழல்தான். ஆனால் அந்த நிழல் எதிர்ப்பக்கம் முத்துசாமி நாடார் அண்ட் சன்ஸின் மிகப்பெரிய கட்டிடத்தின்மீது நிழலால் ஆன மரம்போல விழுந்து கிடந்தது. அதில் இலைகளின் அசைவு ஆயிரக்கணக்கான கண்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130421

எங்குமென நின்றிருப்பது

கல்பற்றா நாராயணனுடம் ஒரு சின்னப் பயணம் சென்றிருந்தேன். ஒருவர் முழுப்போதையில் சாக்கடை வழியாக நடந்து கொண்டிருந்தார். புன்னகையுடன் கல்பற்றா சொன்னார். “அப்படியும் ஒரு வழி இருக்கலாமே ” ஆற்றூருடன் நடக்கச் செல்கையில் ஒரு பழுத்த தென்னையோலை மிக இயல்பாக, ஓசையே இல்லாமல் மரத்திலிருந்து பிரிந்து மிதந்து இறங்கியது. ஆற்றூர் சொன்னார் “முளைக்க வைத்து நீட்டுவதுதான் கஷ்டம்” பலசமயம் கவிஞர்கள் எல்லாவற்றையுமே கவிதையெனக் காண்கிறார்கள். ஆற்றூர், கல்பற்றா நாராயணன் போன்றவர்களின் அன்றாடப் பேச்சில் அவ்வகை வரிகள் வந்தபடியே இருக்கும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129902

அக்ஷயபாத்ரம் -கடிதங்கள்-2

அக்ஷயபாத்திரம் உணவு அக்ஷயபாத்திரம் – கடிதங்கள் அன்பின் ஜெ.. அக்‌ஷய பாத்திரம் கட்டுரை படித்தேன். எனது கருத்துக்களைச் சொல்ல விழைகிறேன். முதலில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்ட முறை. அக்‌ஷயப்பாத்ரா தமிழகத்தில் செய்யப்போகும் திட்டத்தின் விவரங்கள் வெளிப்படையாக இல்லை. க்ரீம்ஸ் சாலையில் ஒரு இடம் அவர்கள் சமையல் செய்யக் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இன்னும் இரண்டு இடங்கள் கொடுக்கப்பட உள்ளன என்கிறார்கள். ஆளுநர் 5 கோடி தனிநிதியை, தன் அதிகாரத்தின் மூலம் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள். உண்மையிலேயே இவர்களுக்கு, இதன் மீது கரிசனம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130067

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 1

யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை]   அன்புள்ள ஜெ   யா தேவி அத்தனை விவாதங்கள் வழியாக விரிவாக வாசிக்கப்பட்ட பிற்பாடு சர்வ பூதேஷுவை எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. முந்தையகதையில் இருந்ததைப் போலவே ஏமாற்றும் எளிமை. உரையாடல்கள் வழியாக தொட்டுத்தொட்டுச் செல்லும் கதைசொல்லல் முறை. எதையும் சிறு குறிப்பாகவே சொல்லிவிட்டுவிடுதல். ஆனால் எல்லா புள்ளிகளும் இணைந்து முழுமையான கோலமாக ஆகிவிட்டன.   சில வரிகளை குறிப்புகளாக எடுத்துக்கொண்டேன். ‘அவன் பூதாகரமான குழந்தை போல இருந்தான்’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130082

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,கடிதம்-2

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020   அன்புள்ள ஜெ,   நான் எப்பொழுதும் என்னை குழப்பிக்கொள்வதில் தேர்ச்சிபெற்றவன். அந்த குழப்பங்களில் உழன்று அதனூடாக தன்னிரக்கம் அடைவதில் ஒருவித சுகம் பெற்றவன். அதனால்தான் ஒரு தெளிவை நோக்கியோ அல்லது என்னை கலைத்து போட செய்யும் ஓர் நிகழ்வை நோக்கியோ செல்வதில் பெரும் தயக்கத்தை கொண்டிருந்தேன். இச்சந்திப்பின் அறிவிப்பு வந்த நாள் முதல் அதில் கலந்துகொள்ளும் நாள் வரை என்னுள் தலைவிரித்தாடிய தயக்கத்தை உடைத்து, சந்திப்பில் கலந்துகொண்டதையே என்னுள் நிகழந்த பெரும் வெற்றியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130093