Daily Archive: March 2, 2020

கல்லூரிகளில் இலக்கியம்

  அன்புள்ள ஜெயமோகன்  அவர்களுக்கு ,   ஆன்மிகம், கோவில் திருவிழா , சினிமாமுதல் ஷோ , மாணவர் கல்வி உதவி என்றால் மக்கள் பணம் அளிக்க (கொடை அளிக்க) முன்வருகிறார்கள்.ஆனால் இலக்கியப் பணிகளுக்கு என்றால் பணம் நன்கொடை கொடுக்க பொதுமக்கள் தயங்குகிறார்கள். இதற்குக்காரணம் இலக்கியத்தை அந்தளவு இலக்கிய செயற்பாட்டாளர்கள் பொதுமக்களிடம் கொண்டு செல்லவில்லை, என்ற ஐபிசி டிவி (ibc tv) நெறியாளரின் கருத்து.மிகவும் சரியான கருத்து   சாரு நிவேதிதா இதைச் சொல்ல முயன்றார், முயற்சிக்கிறார், ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129866/

கணக்கு

’கணக்கு பாக்காதே’ என்று ஒரு சொலவடை உண்டு. எங்கெல்லாம் அது சொல்லப்பட்டிருக்கிறது என்று நினைவுகூர்கிறேன். பெரும்பாலும் சாவுவீடுகளில். “சரி இனிமே கணக்குப் பாத்து ஆகவேண்டியது என்ன? எல்லாம் அவன் நினைப்புப்படி….” என்று எவரேனும் சொல்வார்கள்? அதென்ன கணக்கு? கணக்கு என்னும் சொல் கணிப்பு என்பதிலிருந்து வந்தது. மூலவேர் கண் என்பதாக இருக்கலாம். எண்ணித்தொகுப்பது மட்டும் அல்ல, கூட்டுவது கழிப்பது மட்டும்  அல்ல, கணக்கு என்றால் சென்றதை நினைத்துக்கொள்வது ,வருவதை கற்பனைசெய்துகொள்வது, வேறுவாய்ப்புகளை எண்ணிப்பார்ப்பது, வெவ்வேறுவகையில் நிகழ்த்திக்கொள்வது எல்லாம்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129926/

யாதேவி-கடிதங்கள் 15

யா தேவி! [சிறுகதை] அன்புள்ள ஜெ, யா தேவி சிறுகதை கடிதங்கள் அதைப் பலவேறு கோணங்களில் நுணுகி அலசிவிட்டன.  மறுவாசிப்பு செய்யும் போது இன்னொரு பகுதி புலப்பட்டது.  கதையின் ஓட்டத்தில் பல நுண்ணிய ஆயுர்வேதக் குறிப்புகள் உள்ளதைக் கவனிக்க முடிகிறது.  ஆயுர்வேதத்தின் உன்னதம் பல இடங்களில் நிலை பெறுகிறது.  குறிப்பாக பாதங்களில் முடியும் நரம்பு முனைகளில் மீட்டுவதன் மூலம் பல நோய்களிலிருந்து விடுபட முடியும் என்பது இந்திய மரபு மருத்துவத்தின் மகத்துவம். மேலும் நஞ்சாகிய உணவு மற்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130001/