Monthly Archive: March 2020

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

  ஆர்.எம்.வி.எஸ்.தோட்டான் தலையைச் சுழற்றியபடி மிக மெல்ல உள்ளே வந்தார். எங்கள் ஸ்விட்ச்ரூமை அடைய மூன்று அறைகளைக் கடக்கவேண்டும். ஒவ்வொரு வாசலைக் கடந்ததும் ஒருகணம் நின்றார். ’சரி’ என தலையசைத்தபின் மீண்டும் நடந்தார். ஸ்விட்ச் ரூமை அடைந்ததும் குடையை வழக்கமான கொக்கியில் மாட்டினார். அதன் நேர்கீழே பையை வைத்தார். அப்படியே வெற்றுச் சுவரைப் பார்த்தபடி சற்றுநேரம் நின்றார்.   சுவிட்ச் ரூமில் ஸ்விட்ச் பேனல்களில் அமர்ந்திருந்த டெலிஃபோன் ஆப்பரேட்டர்கள் எட்டுபேரும் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அவர் சிலசமயம் ஒருமணிநேரம்கூட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130341

மொழி,ஆடகம் -கடிதங்கள்

  மொழி [சிறுகதை] அன்புள்ள ஜெ   மொழி ஓர் அழகான கதை. உண்மையில் கலை என்பது அறிவார்ந்தது அல்ல முழுக்கமுழுக்க அது ஒரு வாழ்க்கைக்கொண்டாட்டம் என்பதைக் காட்டுகின்றன இக்கதைகள். தன்னிச்சையாக எழுதவை. எந்த பிரயாசையும் இல்லாமல் எழுதப்படுபவை. ஒருமுறை திரும்ப எழுதினால்கூட இந்தக்கதையை எழுதிவிடமுடியாது. ஒருமுறை வடிவம், மொழி ஆகியவற்றைப்பற்றி யோசித்தால்கூட இந்தக்கதை வராது அப்படி ஓர் இயல்பான மலர்வு கொண்ட கதை   இத்தகைய கதைகளில் யோசிக்க ஒன்றுமே இல்லை. நல்ல ஒரு ஓடையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130428

யா தேவி, ஆனையில்லா, பூனை -கடிதங்கள்

  யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை] சக்தி ரூபேண! [சிறுகதை] அன்புள்ள ஜெ,   யாதேவி சிறுகதையில் எல்லா தன் உடலையே தான் என உணர்கிறாள். உடலை உடல் எனக் காணுதலைப் பற்றி தாங்கள் அம்பேத்கரின் பௌத்தம் கட்டுரையில் எழுதி இருந்தீர்கள். மனிதனின் முதல் பெரும் மாயம் தன் உடலைத் தான் என உணர்வது. எல்லா தன் உடலை வெறுக்கிறாள் அதன் வழியாகத் தன்னையும், ஸ்ரீதரன்  அவள் உடலைக் கடந்து, அவளைக் காண்கிறான். அவள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130393

வேட்டு, துளி -கடிதங்கள்

துளி [சிறுகதை] அன்புள்ள ஜெ   துளி ஒரு அற்புதமான ஃபீல்குட் கதை. ஒருதுளி அன்பு போதும் என்ற ஒற்றை வரியாக கதையைச் சுருக்கிவிடலாம். ஆனால் உண்மையில் அது ஒரு மிகப்பெரிய லைஃப் ஸ்பியரை ஈஸியாக வரைந்துகாட்டுகிறது. நாய், யானை, மனிதர்கள் எல்லாரும் சேர்ந்து வாழ்கிறார்கள். உணவையும் இடத்தையும் மட்டும் பங்கிட்டுக்கொள்ளவில்லை. மானசீகமாகவே ஒன்றாக இருக்கிறார்கள். ஒருவரோடொருவர் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். சமாதானம் ஆகிறார்கள். யானையை சமாதானப்படுத்திக் கூட்டிச்செல்லும் மாதேவன்பிள்ளை அதை ஒரு சகமனதாகவே நினைத்துப் பேசுகிறார்.   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130376

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–17

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 12 அரசே, நான் காளிந்தியன்னையை சந்திக்கச் சென்றபோது முற்றிலும் உளம் ஓய்ந்திருந்தேன். எண்ணுவதற்கு ஒன்றுமில்லை என்னும் நிலை. குருக்ஷேத்ரப் போருக்குப் பின் பல நாட்கள் அந்நிலையில் இருந்திருக்கிறேன். அன்னை தங்கியிருந்த தவச்சாலை நகரில் இருந்து தொலைவில் பாலைநிலத்திற்கு நடுவே இருந்தது. அங்கே அவருக்குத் துணையாக ஒரு சேடிப்பெண் மட்டுமே இருந்தாள் என்று என்னிடம் தேரோட்டி சொன்னான். அவள் அன்னை பிறந்த யமுனைக்கரை படகோட்டிக் குலத்திலிருந்து வந்தவள். அவளுக்கும் துவாரகையின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130180

ஏதேன் [சிறுகதை]

“அதுக்குப்பிறகு ஆப்ரிக்காவுக்கு போனேன்” என்று சாம் ஜெபத்துரை சொன்னான். “ஆப்ரிக்கா நல்லதாக்கும்” என்று சொல்லி நான் ஒரு வெங்காயச் சுருள்கீற்றை எடுத்து வாயிலிட்டு தின்றேன் கூடவே கோக் ஒரு வாய். “இவரு வாய வச்சிருக்கப்பட்டதப் பாத்தா நாம சோடா குடிக்க, இவரு ரம்மு குடிக்க மாதிரில்லாடே இருக்கு” என்றான் பிரபு. “வெங்காயமும் கோக்கும் நல்ல காம்பினேஷன்… ஜிர்ர்னு இருக்கும்” என்றேன் “இது இந்த ஐயர்மாரு கறி திங்கமாட்டேன்னு சொல்லி சீஸை தின்னு குசு விடுத மாதிரியாக்கும்” என்றான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130230

வேட்டு, அங்கி -கடிதங்கள்

அங்கி [சிறுகதை] அன்புள்ள ஜெ   அங்கி சிறுகதை நீங்கள் எழுதிய பேய்க்கதைகளில் முக்கியமானது. நீங்கள் எழுதும் பெய்க்கதைகளை நான் தொடர்ந்து வாசித்துவருகிறேன். அவை மூன்று அம்சங்கள் கொண்டவை. பேயாகவும் இருக்கலாம் இல்லை மனமயக்கமாகவும் இருக்கலாம் என்ற ஒரு தன்மை அவற்றில் இருக்கும் பேய்க்கதையின் சுவாரசியம் இருந்தாலும் கூடவே அது ஒரு கவித்துவமான உருவகமாகவும் இருக்கும். பேய்க்கதையை இலக்கியத்தகுதி அடையச்செய்வது இந்த அம்சம்தான் புதுமைப்பித்தனின் கதைகளில் காஞ்சனையில் அந்த கயிற்றரவுத்தன்மை மட்டும்தான் உண்டு. எட்கார் ஆல்லன் போ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130368

ஆடகம், கோட்டை -கடிதங்கள்

ஆடகம் [சிறுகதை] அன்புள்ள ஆசிரியருக்கு,     ஆடகம் நான் அணுகும் ஜனத்திரளில் பாதியேனும் மரணம் குறித்து எண்ணாதோரில்லை. ஆகும்பேவும் மரணத்திற்குபின் சுய தள்ளாட்டத்துடனான கதைப் போக்கும் நாயகனின் பிரச்சனை தவிர்த்து என்னை வேறு எதுவும் சிந்திக்க விடவில்லை. ராஜநாகமும் விஷவீரியமும் நம்மை நாகம் சீண்டும் கணமும் உணரும்போது முந்தைய நாயகனின் கற்பனைகள் நிஜமாயிற்றோ என்று நானும் நம்பினேன். பிழைத்தெழுதலும் அதன்பின்னான ராஜநாகத்தின் பொன்னொளிர் தருணங்களும் பொன்னின் வகைகளில் ஒன்றாய் ஆடகம் எழும்போது எனக்கு தமிழின் வீச்சும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130396

துளி, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்

துளி [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   வணக்கம். தங்களது வலைதளத்தில் வரும் சிறுகதைகளை ஆவலுடன் ரசித்து வாசித்து வருகிறேன். இதுவரை வந்த சிறுகதைகளில் “துளி”  ஆக சிறந்தது. தங்களது யானை குறித்த வர்ணணைகளுக்கு எப்போதும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அவை யானையை கண் முன் நிறுத்தும் பரவசத்தை அளிப்பவை. நான் தங்களின் பல கதைகளில் அதை ரசித்ததுண்டு. யானைகள், கோயில் திருவிழா, பால்ய கால நண்பர்கள் – கலந்து கொடுக்கப்பட்ட மனம் உவக்கும் ஒரு சித்திரம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130357

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–16

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 11 அரசே, நான் காளிந்தி அன்னையை நேரில் சந்திப்பதற்கு முன்பு இளவரசி கிருஷ்ணையை மீண்டும் சந்திக்க விரும்பினேன். அவையில் அவரை சந்தித்திருந்தபோதிலும்கூட அது அவரல்ல என்று தோன்றிக்கொண்டிருந்தது. அவையில் அவர் வெளிப்படுத்தியது ஒரு பொது உணர்வு, அது தந்தையின் மகள் என அவர் திகழ்ந்தது. அவர் தந்தையின் இறப்பிற்கு தாங்கள் வழி வகுத்தீர்கள் என்பதை இன்று சூதர்கள் பாடிப் பாடி நிறுவிவிட்ட பின்னர் அவ்வண்ணமன்றி அவர் தோற்றமளிக்க இயலாது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130171

Older posts «