Monthly Archive: February 2020

வெண்முரசு ‘செந்நா வேங்கை’- முன்பதிவு

மகாபாரதப்போர் நிகழ்ந்த குருக்ஷேத்திரக் களம் மெல்லமெல்ல உருவாகி எழுவதன் பெருங்காட்சியைக் காட்டும் நாவல் இது. அங்கே இரு தரப்பினருடைய படைகளும் வந்து சேர்கின்றன. முகத்தோடு முகம்நோக்கி நிற்கின்றன. போர் அணுகுகிறது. ஒரு பெருவேள்விக்கான ஒருக்கங்கள் போல. முதற்குருதி விழுகிறது. எரியில் விழும் முதல்துளி நெய்போல.   போரெழுகையின் ஓவியம் இந்நாவல். போர் என்பது புறத்தே நடப்பது மட்டுமல்ல. குருக்ஷேத்திரம் எவ்வகையிலோ எங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அனைத்து உயிர்களிலும். அனைத்து உடல்களிலும். அனைத்து உள்ளங்களிலும். இது அந்த முடிவிலாச் சமரின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129724

ஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது

கேந்திர சாகித்ய அக்காதமியின் 2019 ஆம் ஆண்டுக்கான மொழியாக்க விருது கே.வி.ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் மனோஜ் குறூர் எழுதிய நிலம் பூத்து மலர்ந்ந நாள் என்னும் நாவலின் மொழியாக்கத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.   ஜெயஸ்ரீ திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். எழுத்தாளர் பவா செல்லத்துரையின் துணைவி கே.வி.ஷைலஜாவின் அக்கா. தொடர்ந்து மலையாளத்திலிருந்து மொழியாக்கங்களைச் செய்து வருகிறார்   ஜெயஸ்ரீக்கு வாழ்த்துக்கள் காடு பூத்த தமிழ்நிலம் கே.வி.ஜெயஸ்ரீக்கு விருது ஜெயஸ்ரீயின் வீடு  

Permanent link to this article: https://www.jeyamohan.in/129978

வைக்கம், மன்னத்து பத்மநாபன்

  வைக்கமும் காந்தியும் 1 வைக்கமும் காந்தியும் 2   அன்புள்ள ஜெ,   ஓர் ஐயம். நிர்மால்யா மொழியாக்கம் செய்த அய்யன்காளி நூலின் பின்னடைவில் தலித்துக்களுக்காக போரிட்ட முன்னோடித் தலைவர்களின் பட்டியலில் மன்னத்து பத்மநாபனின் பெயரும் உள்ளது.அவர் கேரளத்தின் உயர்சாதியினரான நாயர்களின் சாதிக்கூட்டமைப்பான என்எஸ்எஸ் அமைப்பை உருவாக்கியவர் [நாயர் சர்வீஸ் சொசைட்டி].   பின்னர் அரவிந்தன் கண்ணையன் அவர்களின் இணையப்பக்கத்தில் மன்னத்துப் பத்மநாபன் தீண்டாமை ஒழிப்பு, அனைத்து மக்களுக்கும் ஆலயபிரவேசம் ஆகியவற்றை வலியுறுத்தி மிக நீண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129885

யா தேவி- கடிதங்கள்-10

யா தேவி! [சிறுகதை]   அன்புள்ள ஜெ   நலம்தானே?   யாதேவி, மற்றும் வந்துகொண்டிருக்கும் கடிதங்களை வாசித்தேன். எல்லா கோணங்களிலும் வாசித்துவிட்டார்கள். ஆனாலும் வாசிப்பதற்கு கொஞ்சம் மிச்சமிருந்துகொண்டே இருக்கிறது. அதுதான் உங்கள் கதைகளின் சிறப்பு என்பது   எனக்கு ஒன்று தோன்றியது. வழக்கமாக நான் வாசிக்கும் தமிழ் கதைகள் இரண்டு வகையானவை. பெரும்பாலான கதைகள் மரபை மீறுகிறோம் என்று ஒரு சவால்தன்மையுடன் எதிராக எழுதப்பட்டிருக்கும். ஒழுக்கம், செண்டிமெண்ட்ஸ் எல்லாவற்றையும் ரிவர்ஸ் செய்திருப்பார்கள். இன்னொரு வகை கதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129854

வெயில், நகைப்பு – கடிதம்

வெயில் கவிதைகள்   அன்பு ஜெயமோகன்,     வெய்யிலின் கவிதைகள் குறித்த உங்களில் பேச்சில் ஒருபகுதி, சமகால உலகின் கடுஞ்சித்திரம் ஒன்றை ஈவிரக்கமின்றி முன்வைத்தது. ”நமக்கு நம்முடைய பிரச்சினைகள், நம்மைச் சார்ந்தவர்களுடைய பிரச்சினைகள் மட்டுமே பெரிதாகத் தோன்றுகின்றன” எனும் வாக்கியத்தில் புலப்பட்டிருந்த அக்கடுஞ்சித்திரத்தை என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை; அதேநேரம், மறுக்கவும் இயலவில்லை.     நேற்று ஒரு முதியவர் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியைக் கேட்டுக்கொண்டிருந்தார். அருகில் நான் இருந்தேன். நினைத்திருந்தால் அவரை அரசு மருத்துவமனைக்கே கொண்டு விட்டிருக்க முடியும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128333

மேலாண்மை, மேலோட்டமான வம்புகள்

  அன்புள்ள ஜெ,   இது நான் டிவிட்டரில் கண்ட ஒரு. பதிவு   மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாடெமி விருது கிடைத்ததும் வயிறு எரிஞ்ச முதல் ஆள் யாராயிருக்கும்ன்னு நினைக்கீக ? #2008_நினைவுகள் [NalVazhuthi]   அதற்கு ஒரு கும்பல் உடனே ‘ஜெமோ’ ‘ஜெயமோகன்’ என்று பதில் சொல்ல உடனே ‘ஆ சரியான பதில்!” என்று மகிழ எல்லாம் சுபம்.   இந்த மொத்தக்கூட்டமே பெயரிலிகள் என்பது தனிச்சிறப்பு. எவருக்கும் வாசிப்புப் பழக்கம் இருப்பதற்கான தடையமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129864

ஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு

  இனிய ஜெயம்   விழுப்புரம் துவங்கி அருணை மலை வழியே வேலூர் வரை நீளும் மலைத்தொடர் தமிழக அளவில் மிக முக்கியமான நிலப்பரப்பு.  இதன் இறுதிப் புவியியல் வரலாற்று நேரமானி, விண்கல் மோதி டினோசர்கள் அழிந்துபோன ஊழிக் காலத்தில், விண் கல் மோதிய உப விளைவில்,  புவி மைய கன்மதம் உலை கொதிக்கும் மேற்ப்பரப்பாக மாற்றிய, இப்போது நாம் காணும் நிலக்காட்சி வரை வந்து நிற்கிறது.   செத்தவரை, கீழ்வாலை பாறை ஓவியங்கள் துவங்கி, பல்லவர்களின் முதல் குடைவரைகள், கோவில்கள், எண்ணற்ற சமணப் பள்ளிக் குகைகள்,  உளுந்தூர்பேட்டை, மேல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129919

யா தேவி- கடிதங்கள்-9

யா தேவி! [சிறுகதை] அன்புள்ள ஜெ,   யாதேவி கதை பிப்ரவரியி 1 லேயே வந்திருக்கிறது. நான் அந்திமழை வாசிப்பவன். ஆனால் கதையைக் கவனிக்கவில்லை. இவ்வளவுக்கும் அந்திமழையை வாசிப்பவன். அச்சில் கதைகள் கவனம் பெறாமலேயே போய்விடுகின்றன. இப்போது வாசித்தேன். அதன் இலகுவான உரையாடல்போக்கு என்ன இது ஜெயமோகன் கதைபோல இல்லையே என்று தோன்றியது.   நீங்கள் அளிக்கும் நுணுக்கமான விரிவான விவரணைகள் இல்லை. எல்லாவின் தோற்றத்தைக்கூட விரிவாகச் சொல்லவில்லை. ஸ்ரீதரனின் முகமே இல்லை. அவனுடைய பெயரைக்கொண்டு ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129826

திராவிட இயக்கம், தலித்தியம்

  அன்புள்ள ஜெ,   சமீபத்தில் ஆர்.எஸ்.பாரதி என்பவர் பேசும்போது தலித்துக்களின் மேம்பாடு என்பது பெரியாரும் கருணாநிதியும் போட்ட பிச்சை என்று பேசியிருந்தா. தொடர்ச்சியாக தலித் இயக்கங்களை திராவிட இயக்கம் அணுகும் முறையில் இருக்கும் இடைநிலைச் சாதி மேட்டிமைப் பார்வையை நீங்கள் சுட்டிக் காட்டிவருகிறீர்கள். அந்த பேச்சு அதை பொட்டில் அறைந்ததுபோல காட்டியது.   எஸ்.அறிவழகன் அன்புள்ள அறிவழகன்,   ஆர்.எஸ்.பாரதியின் உரை ஓர் உள்ளரங்க உரை. அவர் சரியான நிலையிலும் இல்லை. ஆகவே அது ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129850

மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை

  தேவசகாயம் பிள்ளை தென் திருவிதாங்கூரின் கிறித்தவ ரத்தசாட்சி தேவசகாயம்பிள்ளை அவர்களை கத்தோலிக்கத் திருச்சபை புனிதராக அறிவித்திருக்கிறது. நெடுங்காலமாக இதற்கான ஏற்பாடுகள் நடந்துவந்தன. இப்போதுதான் அம்முயற்சி நிறைவுபெற்றுள்ளது   என் அம்மாவின் சொந்த ஊரான நட்டாலத்தில் ஒரு தொன்மையான நாயர்குடியில் பிறந்தவர் நீலகண்டபிள்ளை. கிறித்தவராக மாறியமையால் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்று தொன்மங்கள் சொல்கின்றன. அன்று கத்தோலிக்கரான காப்டன் பெனடெக்ட் டி லென்னாய் திருவிதாங்கூரின் தலைமை படைத்தளபதி. நீலகண்டபிள்ளை அவரால் மதமாற்றம் செய்யப்பட்டார் என்றும் அன்றிருந்த அரசியல் துருவமோதல்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129945

Older posts «

» Newer posts