Daily Archive: February 23, 2020

நுரைச் சிரிப்பு

மார்ச் தொடக்கத்தில் குமரிமாவட்டத்தின் வண்ணம் மாறத்தொடங்குகிறது. புல் செம்மைகொள்ளத் தொடங்குவதனால். ஆனால் விமானத்தில் இருந்து நோக்கினால் இந்த வேறுபாடு தெரியாது. எங்கும் பசுமையின் அலைகள். நடுவே ஒளிரும் நீர்நிலைகள், ஆறுகளின் சரிகைக்கோடுகள். நீரே மின்னல் கொடிகள் என பிரிந்துப் பதிந்ததுபோல மண்ணில் அதன் பின்னல்கள்.   முன்பு இரண்டு சிறு விமானங்கள் இந்தவழியாகச் சென்னை செல்லும். நான் குனிந்து பார்த்தபடியே வருவேன். கீழே வேளிமலையின் உச்சிமுனை ஒரு கோடுபோல தெரியும் அதன் வடகிழக்குப் பக்கம் செம்மண்நிறம் தென்மேற்குப்பக்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129831

தர்மபுரி இலக்கியச் சந்திப்பு

  தகடூர் புத்தக பேரவையின் சார்பில் அறி(வு)முகம் நிகழ்ச்சியில் மாதந்தோறும் 20 நல்ல நூல்களை அறிமுகப்படுத்தி வருகிறோம்.  அந்த வகையில் இது ஆறாம் நிகழ்வு .நூறாம் புத்தகத்தை அறிமுகப்படுத்தும் இந்த சிறப்பு விழாவில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.. இடம்  முத்து இல்லம், தருமபுரி [ஆவின் பாலகம் எதிரில்] நாள் 23- 2-2020 நேரம் மாலை 2 மணி

Permanent link to this article: https://www.jeyamohan.in/129927

யானைடாக்டர் -கடிதம்

அன்புள்ள ஜெ. சார்,   மானுட மனம் தன்னை இழந்து இயற்கையின் பிரமாண்ட பெருவெளியின் முன் ஆழ்ந்து நிற்கும் இடங்களில் ஒன்று கடல். மற்றொன்று மலைக்காடு. காட்டின் அரசன் சிங்கமெனில் பேரரசன் யானை. பார்த்து முடிக்க இயலா உணர்வையும் நெஞ்சை விம்மச் செய்யும் சிலிர்ப்பையும் தருவது காடெனில் அதன் குறியீடாக யானையே முன் நிற்கும்.   சிறு வயதில் தெரு வழியே சென்ற யானை சாணமிட்டுச் செல்ல அதை மிதித்தால் யானை பலம் கிடைக்கும் என்று யாரோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128628

யா தேவி- கடிதங்கள்-7

யா தேவி! [சிறுகதை] அன்புள்ள ஜெ,   மைக்கேலாஞ்சலோவின் புகழ்பெற்ற ஓவியத்தில் கடவுளின் கை ஆதமை தீண்டும் தருணம் உள்ளது. அது மனிதன் கடவுளைக் கண்டுகொள்வது மட்டும் அல்ல, கடவுள் தன்னை கடவுள் என்று கண்டுகொள்வதும்தானே? மனிதனின் பார்வையால்தானே கடவுள் அந்த வடிவத்தை எடுக்கிறார்? அவன் கை அப்படி இருப்பதனால்தானே கடவுளின் கையும் அப்படி இருக்கிறது?   யாதேவி ஓர் அற்புதமான கதை. அது பக்தனால் கடவுள் தன்னை கண்டடைவது என்று தோன்றியது. பேச்சில் வரும் உட்குறிப்புகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129825

வெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு

நண்பர்களே, “வெண்முரசில் நீதி பரிணாமம்” என்கிற தலைப்பில் களிற்றுயானைநிரையை முன்வைத்து கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு ஓய்வு இல்லத்தில் சுமார் 10 வாசகர்கள் இணைந்து வருகிற 23.2.20 ஞாயிற்றுக்கிழமை காலை 11 முதல் மதியம் 1.30 வரை உரையாட உள்ளோம். ஆர்வமுடையவர்கள் இதில் பங்கு பெறலாம். தொடர்புக்கு மணவாளன், பெருந்துறை பேச : +91 9894705976 எழுத : [email protected]

Permanent link to this article: https://www.jeyamohan.in/129921