Daily Archive: February 17, 2020

அந்தி எழுகை

எந்த இடத்திலும் எந்த உளநிலையிலும் அந்தி அழகியது. பெரும்பாலானவர்கள் அந்தியை ஓர் அணைதலாக, மறைதலாக ஆகவே விடைபெறலாக, துயரமாக எண்ணிக்கொள்கிறார்கள். கவிதைகளில் எப்போதுமே அது அவ்வாறுதான் காட்டப்படுகிறது. எனக்கு அவ்வாறல்ல, ஏனென்றால் எனக்கு இரவு இனியது. இரவில்தான் இலக்கியம், இசை. பகல் என்பது வெளிறிப்போன, பற்றி எரியும் யதார்த்தங்களின் வெளி. இரவு குளிர்ந்த அழகிய கனவுப்பரப்பு. ஒவ்வொருநாளும் இரவை ஒருவகை இனிமையுடன் எதிர்கொள்கிறேன். ஆகவே அந்திகளை எப்போதுமே கொண்டாடுகிறேன் நான் அந்திநடையை தவறவிடுவதில்லை. பெரும்பாலான பயணங்களில் அந்திகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129802

மெய்மையின் பதியில் -கடிதங்கள்

  மெய்மையின் பதியில்… அன்புள்ள ஜெ   மெய்மையின் பதியில் வாசித்தேன். ஐயா வைகுண்டர் பற்றிய ஒரு சுருக்கமான குறிப்பு. இன்றைக்கு ஐயா அவர்களைப்பற்றி வாசிக்கக் கிடைப்பவை எல்லாமே அந்த நம்பிக்கையாளர்களால் எழுதப்பட்டவை. அவை புராணம் கலந்த பக்திமிகுந்த பதிவுகள். அதற்கு வெளியே கிடைப்பவை இடதுசாரிகள் அவரை ஒரு சாதியத்தலைவர், சமூகப்போராளி என்ற அளவில் மட்டுமே சுருக்கி எழுதிய குறிப்புகள்.   இன்றைய வாசகனுக்கு ஐயா அவர்களின் வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள், அன்றைய வரலாற்றுச்சூழல் பற்றிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128356

யா தேவி! – கடிதங்கள்

யா தேவி! [சிறுகதை] ஜெயமோகன் அவர்களுக்கு,   நாளுக்கு பல்லாயிரம் பேரால் புணரப்படும் ஆன்ஸெலின் உடலை ஒருவன் தொட்டால் அவளால் உணர முடியவில்லை என்பது சிறப்பான படிமம். அதைத் தொடவும் ஒருவனால் முடியும். அவன் உடலை பயன்படுத்தி உடலுக்கப்பால் உள்ள ஒன்றை தொட்டு பெண்மையோடு உரையாடுபவன். அதை சாத்தியமாக்கவே அவன் உடலை ஒதுக்கிய தவத்தில் இருக்கிறான். அறிதலுக்கு துய்த்தலிலிருந்து விலகி இருத்தல் தேவை. துய்ப்பவர்களால் அறியவே முடியாது. யா தேவி கதை மிக எளியது, ஆனால் சிக்கலான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129810

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 79

பகுதி எட்டு : அழியாக்கனல்-3 தீக்ஷணன் வெளியே நெரிந்த கூட்டத்தில் இறங்கியதுமே அவனை அது அள்ளிச் சென்றது. அவன் தன்னை மறந்து அதில் ஒழுகினான். அது எத்திசை நோக்கி செல்கிறது என அவனால் உணரமுடியவில்லை. அஸ்தினபுரியின் அரண்மனைக் கோட்டை தெரிந்ததும் அவன் “அரண்மனையா!” என்றான். அருகே நடந்த ஒரு முதியவன் “ஆம், பெருங்கொடையாட்டு. பொன் பெறும் நாள்!” என்றான். தீக்ஷணன் அப்போதுதான் அதை உணர்ந்தான். “நூற்றெட்டு கொடை மையங்கள். நீங்கள் எவரென்று கூறி உரியவற்றில் இணையலாம்.” அவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129777