Daily Archive: February 14, 2020

தனிமையின் முடிவில்லாத கரையில்…

  வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற நீலவெளிச்சம் என்னும் கதையின் திரைவடிவம் 1964ல், எனக்கு இரண்டு வயதாக இருந்தபோது வெளிவந்தது. பார்கவி நிலையம். ஒளிப்பதிவாளர் ஏ.வின்செண்ட் இயக்கியது.இப்படத்திற்கு ஒளிப்பதிவு பி.பாஸ்கர் ராவ்.. எழுத்து வைக்கம் முகம்மது பஷீர். பஷீர் எழுதிய ஒரே படம். அவருக்கு ஒரு நிலமும் வீடும் அமைந்தது இந்த சினிமா வழியாகத்தான்.   இது மலையாளத்தின் ஒரு ‘கல்ட் கிளாஸிக்’ எனப்படுகிறது. முதன்மையான காரணம் இன்றும் மலையாளிகளின் நாவில் திகழும் பாடல்கள். பாபுராஜ் இசையமைப்பில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129610/

வாழ்வறிக்கை – ஒரு கடிதம்

ஒரு வாழ்வறிக்கை இனிய ஜெயம் பிரதாப் சந்திர ராய் அவர்களின் அறிக்கை வாசித்தேன். இங்கே தெற்கில் கும்பகோணம் மகாபாரதம் பதிப்பை கொண்டுவந்த ராமானுஜாச்சாரியார் கதையுடன் இணையும் வியாசரின் வடஇந்திய சீடரின் கதை. இங்கே அடிப்படைவாதிகள் வசம் ஒரு பார்வை உண்டு. நான் கொண்டது முற்ற முழுதான நன்மை. அவன் கொண்டது முற்ற முழுதான தீமை. எனும் பார்வை அது. அப்படி ஒன்று சமூக உருவாக்கப் பின்புலத்தில் சாத்தியமே இல்லை. பிரிட்டன் அதிகாரம் இந்தியாவை ஒட்ட ஒட்ட சுரண்டிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129768/

விஷ்ணுபுரம் – கடிதம்

  என் அன்பிற்கினிய ஜெ,     புத்தகம் என் போதைப் பொருள். பள்ளி காலங்களில் motivation புத்தகம், விவேகானந்தர், பாரதி, ஓசோ, சுகி சிவம், தென்கச்சி கோ.சா கதைகள், தியானம், பைபிள், தத்துவார்த்த சிந்தனைகள் போன்றவற்றில் ஆரம்பித்து…. கல்லூரியில் பெரும்பாலும் சுயசரிதையில் தேடல் தொடர்ந்தது. குறிப்பாக பகத்சிங், போஸ், பெரியார், பிடல், சே, செங்கிஸ்கான், திராவிட இயக்க வரலாறு… இத்யாதி இத்யைகள் என் தொடர்ந்தேன்… வரலாற்றின் வாயிலில், சுயசரிதைகள் வழி பல தலைவர்களின் வாழ்கை நிகழ்வுகளில், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128326/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 76

பகுதி ஏழு : பெருசங்கம் – 8 சுதமன் உள்ளே நுழைந்தபோது நடுங்கிக்கொண்டிருந்தார். அவர் கைகள் கூப்பியிருந்தன. கால்கள் குழைந்தன. பதற்றத்தில் முதலில் உள்ளே என்ன திகழ்கிறதென்பதையே அவர் கண்கொள்ளவில்லை. பின்னர்தான் அந்த வேலிவட்டத்திற்குள் ஓர் உயரமான படுக்கையில் மெலிந்து ஒடுங்கிய நீண்ட உடல் மிதந்ததுபோல் கிடப்பதை கண்டார். அதன் பின்னரே அது அம்புப்படுக்கை என்று உணர்ந்தார். அம்புகள் அவர் உடலை தொடாமல் தாங்கியிருப்பதுபோல, அவர் காற்றில் மிதந்து நிற்பதுபோல் தோன்றியது. அவர் முகமும் தோளும் தோல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129763/